நல்ல பித்அத்து கெட்ட பித்அத்து பற்றிய ஆய்வுத் தொகுப்பு

248

நல்ல பித்அத்து கெட்ட பித்அத்து பற்றிய ஆய்வுத் தொகுப்பு

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

நமது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படக்கூடிய காரியங்கள் அனைத்தும் பித்அத் بدعة ஆகும். இந்த பித்அத்து இரண்டு வகைப்படும். இதில் ஒன்று நல்ல பித்அத் بدعة حسنة பித்அத்துல் ஹஸனிய்யா என்றும். அதில் இரண்டாவது கெட்ட பித்அத் بدعة سيئة பித்அத்துல் ஸய்யிஆ என்றும் அழைக்கப்படுகிறது.

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ… فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ (سيئة) ضَلَالَةٌ

 

رواه مسلم : هذا حديث حسن صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (குர்ஆன் ஹதீஸிக்கு முறனான ஒன்றை) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (குர்ஆன் ஹதீஸிக்கு முறனான) ஒவ்வொரு (கெட்ட) பித்அத்தும் வழிகேடு ஆகும்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1573 தாரமீ 212

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ… إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ (سيئة) ضَلَالَةٌ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ

 

هذا حديث حسن صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (குர்ஆன் ஹதீஸிக்கு முறனான ஒன்றை) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு (கெட்ட) பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 1578 இப்னு மாஜா 46 அஹ்மது 14984

 

இஸ்லாத்தின் பெயரால் குர்ஆன் ஹதீஸிக்கு முறனாக புதிதாக உருவாக்கப்படக்கூடிய ஒவ்வொரு கெட்ட பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடாகும், அத்தகைய வழிகெட்ட ஒவ்வொரு பித்அத்தும் நரகம் செல்லும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ

 

رواه البخار : هذا حديث صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க)த்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 2697 அபூதாவூத் 4606 அஹ்மது 24450

 

நமது மார்க்கத்தில் அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் இல்லாத ஒன்றை அதற்கு முற்றிலும் முறனான ஒன்றை புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குர்ஆன் ஹதீஸிக்கு மாற்றமாக புதிதாக உருவாக்கப்பட்டது கெட்ட பித்அத் ஆகும். மேலும் குர்ஆன் ஹதீஸ்களை மூலமாக வைத்து ஸஹாபாக்கள் அறிஞர் பெருமக்கள் ஒன்றுபட்டு இஜ்மாவாக ஒன்றைக் கூறினால் அதற்கு மாற்றமாக புதிதாக உருவாக்கப்படுவதும் கெட்ட பித்அத் ஆகும். மேற்கூறப்பட்டவைகளுக்கு மாற்றமின்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டது நல்ல பித்அத் ஆகும். அவை பின்வருமாறு

 

عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرٍ عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ، وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ

 

رواه مسلم : هذا حديث حسن صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை புதிதாக உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை புதிதாக உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்‌ உண்டு.

 

அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1017, இப்னு மாஜா 203 அஹ்மது 19156

 

عَنِ ابْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَأُتْبِعَ عَلَيْهَا ؛ فَلَهُ أَجْرُهُ، وَمِثْلُ أُجُورِ مَنِ اتَّبَعَهُ، غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا. وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَأُتْبِعَ عَلَيْهَا ؛ كَانَ عَلَيْهِ وِزْرُهُ، وَمِثْلُ أَوْزَارِ مَنِ اتَّبَعَهُ، غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا

 

قال أبو عيسى : هذا حديث حسن صحيح وأخرجه أحمد قوله : هذا حديث حسن صحيح

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய காரியத்தை புதிதாக உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய காரியத்தை புதிதாக உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

 

அறிவிப்பவர் :- ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2675 அஹ்மது 19202 தப்ரானி 2372

 

குர்ஆன் ஹதீஸிக்கு நேரான முறையில் அவைகளை மூலாதாரமாக வைத்து நமது மார்க்கத்தில் புதிதாக யார் அழகிய காரியத்தை ஸுன்னதை உருவாக்குகிறாறோ அவருக்கும் நற்கூலி நன்மை உண்டு. அதனை நடைமுறை படுத்துபவர்களுக்கும் நற்கூலி நன்மை உண்டு. அதாவது நன்மை தரும் (பித்அதுல் ஹஸனிய்யா) அழகிய நல்ல பித்அத்தாகும். இவைகளை இஸ்லாம் அனுமதித்துள்ளது. அது அல்லாமல் குர்ஆன் ஹதீஸிக்கு முறனான முறையில் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கும் ஒவ்வொரு காரியமும் (பித்அதுல் ஸய்யிஆ) வழிகெட்ட பித்அத்தாகும் இவைகளை இஸ்லாம் முற்றாக தடை செய்துள்ளது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

ஸஹாபாக்கள் உருவாக்கிய நல்ல பித்அத்துக்கள்

 

عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ، ثُمَّ وَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقَالَ قَائِلٌ : يَا رَسُولَ اللَّهِ، كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ، فَأَوْصِنَا. فَقَالَ : أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ كَانَ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ ؛ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ ” وَقَالَ أَبُو عَاصِمٍ مَرَّةً : وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ ؛ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ

 

رواه الترمذي وقال هذا حديث حسن صحيح رواه الحاكم وقال: هذا اسناد صحيح علي شرطهما جميعا ولا اعرف له علة ووافقه الذهبي:١ /٩٦

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் எங்களுக்கு பஜ்ர் தொழுகைக்கு பின்னர் எங்களை முன்னோக்கி உணர்ச்சிபூர்வமான உபதேசம் செய்தார்கள் . அதைச் செவியேற்று கண்கள் குளமாயின . இதயங்கள் அஞ்சி நடுங்கின. அப்போது ஒரு மனிதர் யா ரஸுலல்லாஹ்! இது தங்களின் இறுதி உபதேசம் போன்றல்லவா இருக்கிறது . எனவே எங்களுக்கு வஸிய்யத்து செய்யுங்கள் என்றார். அல்லாஹ்வை அஞ்சும்படியும் அபிஸீனிய நாட்டு அடிமை தலைவரானாலும் அவர் சொல்லை ஏற்கவும். அவருக்கு கட்டுப்படவும் உங்களுக்கு வஸிய்யத்து செய்கிறேன். எனக்குப் பிறகு நீங்கள் வாழ்ந்தால் அதிகமான கருத்து வேறுபாடுகளை நீங்கள் காணுவீர்கள். அப்போது எனது ஸுன்னத்தையும், நேர்வழி பெற்ற நடுநிலையான கலீஃபாக்களின் ஸுன்னத்தையும் நீங்கள் பின்பற்றுங்கள் . அவற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதைக் கடைவாய்ப்பல் கொண்டு கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள் . (தீய) புதிய காரியங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஒவ்வொரு (கெட்ட) பித்அத்தும் வழிகேடு ஆகும்.

 

அறிவிப்பவர் :- இர்பான் இப்னு ஸாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூது 4607 , திர்மிதி 2676, இப்னுமாஜா 42 தாரமீ 96 அஹ்மது 17144

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தையும், நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடிக்க வேண்டும். மேலும் (தீய) புதிய காரியங்களை முற்று முழுதாக விட்டு விட வேண்டும். குர்ஆன் ஹதீஸிக்கு முறனான கலீஃபாக்களுக்கு மாற்றமான ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عن بلال رضي الله عنه أنه : أتى النبي صلى الله عليه وسلم يؤذنه بالصبح فوجده راقدا فقال : الصلاة خير من النوم مرتين قال النبي صلى الله عليه وسلم : ما أحسن هذا يا بلال اجعله في أذانك

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதிகாலைத் தொழுகைக்காக பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது என்று இரண்டு முறை சொன்னார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலாலே! இது (பித்அத்துல் ஹஸனிய்யா) மிக அழகாக இருக்கிறது. இதை உனது (அதானில்) பாங்கில் ஆக்கிக் கொள் என்று சொன்னார்கள்.

 

அறிவிப்பவர் :- பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்றானி 1081 மஜ்மஉஸ் ஜவாயித் 23248

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் சொல்லாத ஒன்றை பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன காரணத்தால் அது மறுக்கப்படவில்லை. அதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவேற்றார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ فَقَالَ عُمَرُ إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ قَالَ عُمَرُ نِعْمَ الْبِدْعَةُ هَذِه

 

ரமழானில் ஓரிரவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது எனக் கூறி உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத்தாக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘இதோர் நல்ல பித்அத்’ என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துர் றஹ்மான் இப்னு அப்துல் காரி ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம் புஹாரி 2010

 

عَنِ الزُّهْرِيِّ قَالَ : أَخْبَرَنِي ابْنُ السَّبَّاقِ ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ مِمَّنْ يَكْتُبُ الْوَحْيَ قَالَ : أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ، فَقَالَ أَبُو بَكْرٍ : إِنَّ عُمَرَ أَتَانِي، فَقَالَ : إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِالنَّاسِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ فِي الْمَوَاطِنِ ؛ فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ الْقُرْآنِ إِلَّا أَنْ تَجْمَعُوهُ، وَإِنِّي لَأَرَى أَنْ تَجْمَعَ الْقُرْآنَ. قَالَ أَبُو بَكْرٍ : قُلْتُ لِعُمَرَ : كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ عُمَرُ : هُوَ وَاللَّهِ، خَيْرٌ

 

ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வேத அறிவிப்பினை (வஹீயை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். அப்போது அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு (என்னிடம்) கூறினார்கள்.
உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள். நான் ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?’ என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது பித்அத்துல் ஹஸனிய்யா) நன்மை(தரும் காரிய)ம் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 4679. 1456 திர்மிதி 3103

 

மேற்கூறிய இரு ஹதீஸ்களையும் கூர்ந்து கவனியுங்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடைமுறையில் இல்லாத ஒரு செயல் ஸஹாபாக்களின் காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும். அந்த செயலை கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதோர் நல்ல பித்அத்’ என்றும் நன்மை தரும் காரியம் என்றும் வெவ்வேறு கோணங்களில் கூறியதை நம்மால் காண முடிகிறது.

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் காலத்தில் மீலாது விழாக்கள் கந்தூரி நடைபெறவில்லை அதனால் அவைகள் பித்அத்து கூடாது என்பதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். உதாரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஷிர்கு ஒழிப்பு மாநாடு நடைபெற்றதா? மேலும் பெண்கள் பொது கூட்டம் நடைபெற்றதா? மேலும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றதா? மேலும் ரமளான் மாதத்தில் பள்ளிகளில் 30 நாட்களும் கஞ்சி காய்ச்சி கொடுக்கப்பட்டதா? ரமளான் மாதத்தில் இரவு நேரங்களில் 30 நாட்களும் எட்டு ரகாத்துக்கள் ஜமாஅத்துடன் நடை பெற்றதா? மேலும் இரத்த தானம் கொடுக்கப்பட்டதா? மேலும் பெருநாள் தொழுகைக்கு திடல் தொழுகை என்று கூறப்பட்டதா? மேலும் பெண்கள் முகத்திரை அணிவது ஹராம் என்று கூறப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இவ்வாறான செயல்கள் நடைபெறவில்லை. அதனால் இவைகளை பித்அத்து கூடாது என்று வஹாபிஷ தவ்ஹீத் அமைப்புக்கள் கூறுவார்களா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.