நாயகம் ﷺ அவர்கள் பிறந்து 40 வயதை எத்தும் வரை முஸ்லிமாக இருந்தார்கள்
நாயகம் ﷺ அவர்கள் பிறந்து 40 வயதை எத்தும் வரை முஸ்லிமாக இருந்தார்கள்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰـكِنْ جَعَلْنٰهُ نُوْرًا
குர்ஆன் கூறுகிறது (நபியே!) நீங்கள் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உங்களுக்கு நாம் வஹீ மூலம் அறிவித்து) அதனை ஒளியாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 42:52)
قلت : الصحيح أنه صلى الله عليه وسلم كان مؤمنا بالله عز وجل. تفسير الماوردي” تفسير القرطوبي – ج ١٦ – الصفحة ٥٨
மேற்கூறிய ஆயத்திற்கு தப்ஸீர் இமாம்கள் பல கோணங்களில் விளக்கம் கொடுத்திருந்தாலும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து 40 வயது ஏத்தும் வரை அவர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்களாக இருந்தார்கள் என்ற கருத்தில் அவர்களெல்லாம் உறுதியாக இருக்கின்றார்கள்.
தப்ஸீர் குர்துபி 16/58
இருப்பினும் மேற்கூறிய ஆயத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து 40ம் வயதை எத்த முன்னர் அவர்கள் குர்ஆனை பற்றியும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றியும் அறிந்திருக்கவில்லை என்ற கருத்தை வைத்து இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து 40 வயது ஏத்தும் வரை முஸ்லிமாக இருக்கவில்லை என்ற நச்சுக்கருத்தை வஹாபிஷ ஷீஆ அமைப்புக்கள் கூறி வருகின்றனர்.
இதுபோன்ற அவநம்பிக்கையை விட்டும் முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஏனெனில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட முன்னர் அவர்களுக்கு குர்ஆனை பற்றியும் நம்பிக்கை சார்ந்த பல விஷயங்கள் அதாவது அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருந்தார்கள், அது அல்லாத வேறுபல நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றி அச்சமயம் அவர்களுக்கு தெரியாது. காரணம் இது போன்ற விஷயங்களை இறைவன் அந்த நேரத்தில் அவர்களுக்கு அறிவித்து கொடுக்கவில்லை. இதனை காரணமாக வைத்து அவர்கள் அந்த நேரத்தில் முஸ்லிமாக இருக்கவில்லை என்று கூற முற்படுவது திருக்குர்ஆனுக்கும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முற்றிலும் முறனாகும்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ “. ثُمَّ يَقُولُ : اقْرَءُوا : {فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ}. سورة الروم آية 30
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “எல்லாக் குழந்தைகளும் இயற்கை(யின் மார்க்கத்தி)ல் தான் பிறக்கின்றன” மேலும் “இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம்” (30:30) எனும் வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 5166 (அல்குர்ஆன் : 30:30)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، وَيُنَصِّرَانِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6599, 6600
மேற்கூறிய குர்ஆன் ஹதீஸ்களை கூர்ந்து கவனியுங்கள். குழைந்தைகளுக்கு (ஈமான்) நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றி தெரியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். தன்னைப் பெற்ற பெற்றோர்கள் யார்? தான் யார்? தான் எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் முஸ்லிமாக பிறக்கின்றது என்றால்! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட முன்னர் குர்ஆனைப் பற்றியும் நம்பிக்கை பற்றியும் தெரியவில்லை என்ற வசனத்தை தவறாக புரிந்து கொண்ட காரணத்தால் அந்தநேரத்தில் அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என்பதாகக் கூறுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடயர்களாகும்.
குறிப்பு :- ஒவ்வொரு குழந்தைகளும் அடிப்படை மார்க்கத்தில் தான் பிறக்கிறது, அதாவது முஸ்லிமாக பிறக்கிறது. ஆக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அடிப்படை மார்க்கத்தில் தானே பிறந்தார்கள்? அப்படி இருக்க அவர்கள் நபித்துவத்திற்கு முன்னர் அவர் முஸ்லிம் அல்ல என்று எதனை வைத்து கூறுகிறீர்கள்? நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட முன்னர் அவர்கள் எந்த மதத்தில் இருந்தார்கள்? அவர்களை மதம் மாற்றியது யார்? அவர்கள் அச்சமயம் எதை வணங்கினார்கள்? அவர்கள் 40ம் வயதில் தான் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம் ஆனார்களா? அவர்களுக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்து இஸ்லாத்தில் எடுத்தது யார்? அவர்களுக்கு இறங்கிய ஆரம்ப வஹியில் முஹம்மதே! நீங்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவ வேண்டும் என்ற இறைக்கட்டளை வந்ததா? என்ற கேள்விகளுக்குறிய பதில்களை வஹாபிஷ ஷீஆ அமைப்புக்கள் கூறுவார்களா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இறைத்தூதர்கள் பிறக்கும் போதே அல்லாஹ்வின் நல்லடியார்களாகவே பிறக்கிறார்கள். நபித்துவம் கொடுக்க முன்னரும் அவர்கள் பாக்கியமானவர்கள்
قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ ” وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا
குர்ஆன் கூறுகிறது (இதனைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான். மேலும் நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான்.
(அல்குர்ஆன் : 19:30:31)
மேற்கூறிய ஆயத்தை கூர்ந்து கவனியுங்கள். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இறைவன் பேச வைத்தான். அச்சமயம் அவர்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட வில்லை. மேலும் அவர்களுக்கு வேதம் அருளப்படவும் இல்லை. இருப்பினும் இதுவெல்லாம் நடைபெறும், அது வரைக்கும் நான் அல்லாஹ்வின் அடியான். நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான் என்று குழந்தையாக இருந்த தருணத்தில் பேசினார்கள். இது போன்று தான் ஏனைய இறைதூதர்களும் பிறக்கும் போதே முஸ்லிமாக அல்லாஹ்வின் அடியார்களாகவே பிறக்கிறார்கள், நபித்துவம் அவர்களுக்கு கிடைக்கப்பெற முன்பில் இருந்தே அவர்கள் பாக்கியவான்கள் என்ற கருத்தை குர்ஆன் பறைசாற்றுவதை நம்மால் காண முடிகிறது.
எனவே நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே அல்லாஹ்வின் அடிமை, பாக்கியசாலி என்றால்! நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஏனைய இறைதூதர்களும் அது அல்லாத சகல படைப்புக்களுக்கும் தலைவராக திகிலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி அல்லாஹ்வின் அடியானாகவும் பாக்கியம் நிறைந்த ரஹ்மத்தாகவும் இருந்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையும் ஏகத்துவ கொள்கையும்
وَ جَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِىْ عَقِبِهٖ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
குர்ஆன் கூறுகிறது ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) வரும் பொருட்டு, அவர் தன்னுடைய சந்ததிகளில் (இப்ராஹிம் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் ஏகத்துவ) இக் கலிமாவை நிலையான வாக்குறுதியாக அமைத்தார்.
சூரா ஜுஃருப் ஆயத் 28 மேலும்
رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
குர்ஆன் கூறுகிறது (இப்ராஹிம் பிரார்த்தித்தார்) என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக!
சூரா இப்ராஹிம் ஆயத் 40
இந்த ஆயத்திற்கு விளக்கம் கூரும் போது முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ பிரார்த்தனையை இறைவன் அங்கிகரித்து விட்டான். அன்றிலிருந்து அவர்களுடைய பிள்ளைகளில் (தலைமுறை தலைமுறையாக சில தலைமுறையினர் ஏகத்துவ கலிமாவில் நிலைத்திருந்தார்கள்) அவர்கள் சிலை வணங்குவது கிடையாது என்பதாகக் கூறினார்கள்.
தப்ஸீர் தபரி 17, 17
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ اللهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ، وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ، وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنِي هَاشِمٍ، وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இறைவன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா”வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா”வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.
அறிவிப்பவர் :- வாஸிலா இப்னு அல்அஸ்கஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2276
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ قَرْنًا فَقَرْنًا حَتَّى كُنْتُ مِنَ القَرْنِ الَّذِي كُنْتُ فِيهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாகவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டேன்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3396
மேற்கூறிய ஹதீஸ்களை கூர்ந்து கவனியுங்கள். நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள். அவர்களின் சந்ததிகளில் வழித்தோன்றல்களில் தலைமுறை தலைமுறையாக வந்தவர்கள் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஆக அந்த சந்ததிகளிலுள்ள ஓர் சாரார் அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அவர்கள் சிலைகளையும் அது அல்லாதவர்களையும் வணங்குவது கிடையாது. இதனால் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் சிறந்தோர் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன் என்ற கருத்தை உறுதியாகக் கூறினார்கள்.
ஆக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட முன்னர் அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அவர்கள் சிலைகளையும் அது அல்லாதவர்களையும் வணங்கியது கிடையாது. சிலர்களின் கேள்வி :- நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட முன்னர் அவர்களுக்கு அல்லாவை பற்றி எப்படி தெரியும் என்கின்றானர். இதற்குரிய பதில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் பெயரிலே உள்ளது. தந்தையின் பெயர் அப்துல்லாஹ். அல்லாஹ்வின் அடிமை. ஆக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை முழுமையாக நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். மேலும்
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَدَنِي مِنْ نِكَاحِ أَهْلِ الْجَاهِلِيَّةِ شَيْءٌ، مَا وَلَدَنِي إِلَّا نِكَاحٌ كَنِكَاحِ الْإِسْلَامِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறியாமை காலத்து திருமண வழிமுறையில் நான் பிறக்கவில்லை. இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த திருமணத்தின் வாயிலாகவே நான் பிறந்தேன்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 13845 தப்ரானி” கபீர் 10812 இப்னு அஸாகிர் 1207
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பு இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த ஓர் திருமணத்தின் வாயிலாகவே அவர்கள் பிறந்தார்கள் என்ற நற்செய்தியை நம்மால் காண முடிகிறது.
குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி அவர்களும் அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். சிலைகள் அது அல்லாத எதனையும் அவர்கள் வணங்கியது கிடையாது. மேலும் இறைவனின் இறைகட்டளை வரும் வரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஸ்லிமாக இருந்தார்கள் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் காண முடிந்தது. இன்ஷா அல்லாஹ் நபித்துவம் மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட முன்னர் அவர்கள் முஸ்லிமாக மட்டுமின்றி நபியாகவும் இருந்தார்கள் என்ற நற்செய்தியை திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அடுத்த பதிவில் காணலாம்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்