நேர்வழி பாதை பற்றிய தெளிவு
நேர்வழி பாதை பற்றிய தெளிவு
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️)
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ : – صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
(யா அல்லாஹ்) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ (அத்தகையோர்) சென்ற வழியுமில்லை வழிதவறியோர் வழியுமில்லை .
சூரா பாதிஹா ஆயத் 6,7
وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَيَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ وَسَآءَتْ مَصِيْرًا
தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், எவன் இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, முஃமின்களின் நேர்வழிக்கு மாறான வேறு வழியில் செல்கின்றானோ, அவனை அவன் திரும்பிவிட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம்; பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம்! அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
சூரா நிஷா ஆயத் 115
ஆரம்ப வசனத்தில் நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ (அத்தகைய சத்திய ஸஹாபாக்கள், தாபீஈன்கள், இமாம்கள், சூபியாக்கள் சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ (அத்தகைய முஹ்தஸிலாக்கள், கவாரிஜியாக்கள், ஷியாக்கள், காதியானிகள், வஹாபிகள்) சென்ற வழியுமில்லை வழிதவறியோர் வழியுமில்லை என்ற கருத்தையும். மற்ற வசனத்தில் முஃமின்களின் நேர்வழிக்கு மாறான வேறு வழியில் செல்கின்றானோ அவன் நரகவாதி என்ற கருத்தையும் மேற்கூறிய இறைவசனம் தெளிவு படுத்துகிறது.
இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குர்ஆன் ஹதீஸ்களை ஒழுங்கு முறைப்படி படித்து பயனடைந்த முஃமின்களான ஸஹாபாக்கள், தாபீஈன்கள், இமாம்கள், சூபியாக்கள் சென்ற தரீக்கத் என்னும் நேர்வழியை ஒரு கூட்டம் நேர்ந்தால் அவர்களே ஜயம் பெற்றவர்கள், அது அல்லாமல் அவர்களை மறுத்து விட்டு தன் மனோ இச்சைப்படி வேறுவழியில் செல்பவர்கள் வழிகேடர்கள், நரகவாசிகள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ، إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا : وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي
رواه الترمذي 2641 وحسَّنه ابن العربي في أحكام القرآن 3 / 432 وصححه الألباني في السلسلة الصحيحة
பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக என்னுடைய சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்று என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள். பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு பிரிவுகளாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரு கூட்டம்) எது யா ரஸுலல்லாஹ்! என்று கேட்டனர். அதற்கு அவர்கள், நானும் எனது தோழர்களும் எந்த (பாதை)யை தேர்ந்தெடுத்தோமோ அந்த (பாதை)யில் இருப்பவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2641 ஹாகிம் 444
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (ஸுன்னத்)தையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் (ஜமாஅத்)தையும் பற்றி பிடித்தவர்களை அன்று தொட்டும் இன்று வரை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று அழைக்கப்படுகிறது.
அத்தையை நேர்வழி பாதையில் மக்கள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னா இமாம்களும் சூபியாக்களும் மக்களுக்கு அல்லாஹ்வை நெருங்கக்கூடிய வழிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் கற்றுத் கொடுத்து நேர்வழியில் நடத்தினார்கள். இதனை அதிகளவில் மக்கள் பின்பற்ற தொடங்கிய காரணத்தால் காலப்போக்கில் மத்ஹபுகள் என்றும் தரீக்காக்கள் என்றும் பெயர் வரத்தொடங்கியது. இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மத்ஹபுகள் தரீக்காக்கள் என்று கூறினாலும் எதார்த்தத்தில் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் பின்பற்றுகின்றனர். அத்தையை நேர்வழிப் பாதையில் என்றென்றும் நிலைத்திருப்பவர்களே! ஜெயம் பெற்றவர்கள் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்