நோன்பின் சட்ட திட்டங்கள்

183

நோன்பின் சட்ட திட்டங்கள்

 

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது பர்வ வயதை எத்திய ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.

 

நோன்பின் கட்டாயக் கடமை பர்ளுகள்

 

♦️1) நோன்பு நோற்கும் போது நோன்பு நிய்யத்து வைப்பதும்

نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ شَهْرِ رَمَضَانِ هذِهِ السَّنَةِ لِلهِ تَعَالَى

 

நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ளி ரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா

அர்த்தம் :- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க அல்லாஹ்வுக்காக நிய்யத்துச் செய்கிறேன்.

 

♦️2) நோன்பு நோற்ற ஞாபகம் இருப்பததுடனே வேணும் என்றே எந்த உணவையும் உட்கொள்ளாமல் பகல் முழுவதும் தடுத்துக் கொள்வதும்.

 

நோன்பின் ஸுன்னத்துகள்

 

♦️1) ஸஹர் செய்வது (சுபஹ் பாங்கு சொல்வதற்கு முன்பு வரை ஸஹர் உணவு உட்கொள்ள முடியும்)

♦️2) சுபஹ் நேரத்தை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது.

♦️3) சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பது.

♦️4) மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது.

♦️5) நோன்பு திறந்தவுடன் கீழ் கானும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

 

اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَعَلٰى رِزْقِكَ اَفْطَرْتُ فَتَقَبَّلْ مِنِّىٓ

 

அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ அலைக்க தவக்கல்து வஅலா ரிஜ்கிக அப்தர்து, பஃதக்ப்பல் மின்னீ

அர்த்தம் :- யா அல்லாஹ்! உனக்காக நோன்பு நோற்றேன். உன் மீது விசுவாசம் கொண்டேன். உன்னிடமே (எனது காரியத்தை) பாரம் சாட்டினேன். உனது உணவைக் கொண்டே நோன்பு திறந்தேன். எனவே (என்னுடைய நோன்பை) நீ அங்கீகரித்தருள்வாயாக.

♦️8) மற்றவர்களுக்கும் நோன்பு திறக்க கொடுப்பது.

♦️9) ஹைலு நிபாஸ், ஜனாபத் போன்ற பெறும் தொடக்கை விட்டும் சுத்தமாவதற்காக சுபஹுக்கு முன்பு குளித்துக் கொள்வது.

♦️10) பகல் நேரத்தில் உணவு வகைகள் மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களை நுகர்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

♦️11) ரமலான் பிந்திய பத்தில் அதிகமாக ஸதகா தான தர்மங்களை அள்ளிக் கொடுப்பது.

♦️12) திருக்குர்ஆனை அதிகமாக ஓதுவது.

♦️13) அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது.

♦️14) ரமலான் பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது.

 

நோன்பின் போது வெறுக்கப்பட்ட காரியங்கள்

 

♦️1) ஹைலு, ஜனாபத் குளிப்பை பிற்படுத்துவது.

♦️2) உணவு வகைகளை ருசி பார்ப்பது.

♦️3) பகல் முழுவதும் மௌனமாக இருப்பது.

♦️4. பகல் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.

♦️5) உளூச் செய்யும் போது வாய், மூக்குக்கு தண்ணீரை அளவு கடந்து செலுத்துவது.

♦️6) லுஹருக்குப் பின்னர் பல் துலக்குவது.

 

நோன்பை முறிக்கும் காரியங்கள்

 

♦️1) வேண்டும் என்றே உடல் உறவு கொள்வது.

♦️2) வேண்டுமென்றே இந்திரியத்தை வெளிப்படுத்துவது.

♦️3) வேண்டுமென்றே வாந்தி எடுப்பது.

♦️4) காரல் வெளி வந்தபின் அதனை மீண்டும் விழுங்குவது. (கொஞ்சம் கொஞ்சம் எச்சி விழுங்குவதால் பெரும்பாலும் நோன்பு முறியாது)

♦️5) வேண்டுமென்றே உணவை உட்கொள்வது

♦️6) வேண்டுமென்றே முங்கி குளித்து வாய்க்குள் தண்ணீர் செலுத்துவது.

♦️7) ஹைலு, நிபாஸ், மதமாற்றம், பைத்தியம், பகல் முழுவதும் மயக்கம் போன்றவைகள் ஏற்படுவது.

 

நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளவர்கள்

 

♦️1) கடுமையான வியாதிகள்.

♦️2) நீண்ட நேரம் பிரயாணம் செய்யக்கூடியவர்கள்

♦️3) உணவு இன்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தவர்கள்.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.