நோன்பு நிய்யத்தை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் என்று கூறலாமா?
நோன்பு நிய்யத்தை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் என்று கூறலாமா?
ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ
குர்ஆன் கூறுகிறது இரவு வரும் வரை நோன்பை பூர்த்தி செய்யுங்கள்.
சூரா பகரா ஆயத் 187
நோன்பு என்பது இரவில் கிடையாது. பகலில் மாத்திரம் தான் நோன்பு என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஆயத்தை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
غد :- ﻳﻌﻨﻲ ذهب في الصباح (وطلوع الشمس)
நாளை என்ற அரபிச் சொல் غد என்ற சொல்லுக்கு அதிகாலை என்ற அர்த்தமே உண்டு. மேலும் நாளை என்ற தமிழ் சொல்லுக்கு மறுநாள், அதிகாலை, பிற்பகல் என்ற அர்த்தம் தான் உண்டு என்பதை நாம் ஆரம்பித்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا بِلاَلُ أَذِّنْ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَداً
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பிலாலே! மக்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள். நாளை அவர்கள் நோன்பு பிடிக்கட்டும்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 691 அபூ தாவூத் 2340
மேற்கூறிய ஹதீஸில் இன்று அவர்கள் நோன்பு பிடிக்கட்டும் என்று கூறவில்லை. அதற்கு மாற்றமாக நாளை அவர்கள் நோன்பு பிடிக்கட்டும் என்று தான் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
♦️குறிப்பு :- இன்று நோன்பு பிடிக்கிறேன் என்று நிய்யத்து வைத்தால் இரவு பகல் ஒரு நாளை முழுமையாக குறிக்கும். நோன்பு என்பது பகலில் மாத்திரம் தான். எனவே இன்று நோன்பு பிடிக்கிறேன் என்று நிய்யத்து வைப்பது ஹராம் கூடாது. நாம் நோன்பு நிய்யத்து வைக்கும் போது நாளை பிடிக்கிறேன் என்று நிய்யத்து வைக்க வேண்டும். நாளை என்பது மறுநாள், அதிகாலை, பிற்பகல் என்ற அர்த்தத்தை குறிக்கும். அதாவது சுபஹ் தொழுகையில் இருந்து மஃரிப் தொழுகை வரை குறிக்கும். இவ்வாறு தான் நிய்யத்து வைக்க வேண்டும்.
நோன்பு நிய்யத்து :-
نويت صوم غد عن أداء فرض رمضان هذه السّنة لله تعالى
(நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா)
பொருள் :- இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்