பராஅத் இரவு பற்றிய ஆய்வுத் தொகுப்பு

696

பராஅத் இரவு பற்றிய ஆய்வுத் தொகுப்பு

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

பராஅத் இரவு என்ற பெயர்

 

قال عكرمة :- كان ابن عباس رضي الله تعالى عنهما يسمي ليلة النصف من شعبان ليلة البراءة

تفسير الماوردي
تفسير العز بن عبد السلام

 

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஷஃபான் (பிறை 15) நடுப்பகுதி இரவிற்கு (லைலதுல் பராஅத்) விடுதலை பெரும் இரவு என்று பெயர் வைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

நூல் ஆதாரம் :- தப்ஸீருல் மாவர்தி, தப்ஸீருல் இஸ்ஸி இப்னு அப்துஸ் ஸலாம் போன்ற திருக்குர்ஆன் விளக்கவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

லைலதுல் பராஅத் என்ற பெயர் வருவதற்கான முக்கிய காரணம்

 

…بَلْ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: هَذِهِ اللَّيْلَةُ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلِلَّهِ فِيهَا عُتَقَاءُ مِنَ النَّارِ بِعَدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ

 

இறைத்தூதர் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள். ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து கூறினார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.

 

அறிவிப்பாளர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் பைஹகி” ஷுஃபுல் ஈமான் 3837

 

மேற்கூறிய ஹதீஸ் மூலாதாரமாக வைத்து புனிதமிக்க ஷஃபான் பிறை 15ம் இரவில் நரகவாசிகள் விடுதலை பெறும் காரணத்தால்! அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் கூறப்படுகிறது. மேலும் இந்த இரவுக்கு லைலதுல் முபாறகா, லைலதுர் ரஹ்மத், லைலதுஸ் ஸக் என்ற பெயர்களும் உண்டு.

 

♦️குறிப்பு :- பராஅத் இரவு என்ற பெயர்களும் ஏனைய பெயர்களும் குர்ஆன் ஹதீஸில் இடம் பெறவில்லை. அதனால் அது பித்அத் என்று கூறுபவர்களே! நடுநிலையாக சிந்தித்து பாருங்கள். தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், திடல் தொழுகை, ஷிர்க் ஒழிப்பு மாநாடு, இரத்த தானம், ஜும்ஆ ராத்திரி, பைசல் ஜமாஅத், சில்லா ஜமாஅத், கந்தூரி, இஜ்திமா? நோன்பு பள்ளி கஞ்சி போன்ற பெயர்கள் குர்ஆன் ஹதீஸில் உள்ளதா? இது பித்அத்து இல்லையா? மேற்கூறிய பெயர்கள் அனைத்தும் மார்க்க விஷயத்தில் அமல்களுடைய விஷயத்தில் தானே பயன் படுத்தப்படுகிறது.இதில் புத்தியுள்ளோர்களுக்கு நிறைய படிப்பினை உள்ளது.

 

பராஅத் இரவில் பாவ மன்னிப்பு

 

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِب رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا، وَصُومُوا نَهَارَهَا ؛ فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ : أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ؟ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ؟ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ؟ أَلَا كَذَا؟ أَلَا كَذَا؟ حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

 

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ‘என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கிறேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன்’ என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1388

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَطَّلِعُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى خَلْقِهِ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَيَغْفِرُ لِعِبَادِهِ إِلَّا لِاثْنَيْنِ : مُشَاحِنٍ وَقَاتِلِ نَفْسٍ

 

கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். ஒன்று பகைமை கொண்டவன் இரண்டு கொலை செய்தவன்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 6642

 

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் அல்லாஹ் தனது அடியார்களில் இணைவைத்தவர்கள், பகைமை கொண்வர்களை தவிர அனைவரின் பாவங்களையும் மன்னிக்கிறான்.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1390

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

 

அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 670 பைஹகி 3837 அஹ்மது 176

 

عَنْ أَبِي ثَعْلَبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ -: إِنَّ اللَّـهَ عَزَّ وَجَلَّ إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ اطَّلَعِ إِلَى خَلْقِهِ، فَيْغَفِرُ لِلْمُؤْمِنِينَ، وَيُمْلِي لِلْكَافِرِينَ، وَيَدَعُ أَهْلَ الْحِقْدِ بِحِقْدِهِمْ حَتَّى يَدَعُوهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஷஃபானுடைய பதினைந்தாவது இரவு வந்து விட்டால் அல்லாஹ் தன் படைப்பினங்களுக்கு முன் வந்து முஃமின்களுடைய பாவங்களை மன்னிக்கிறான் நிராகரிப்பாளர்களுக்கு (திருந்த) அவகாசமளிக்கிறான் பொறாமைக் காரர்களை அவர்கள் அதை விடும் வரை (பாவங்களை மன்னிக்காது) விட்டு விடுகிறான்.

 

அறிவிப்பவர் :- அபூ ஷஃலபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் கன்ஜூல் உம்மால் 233

 

பராஅத் இரவில் விசேஷ தொழுகை

 

عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ رَفَعَهُ قَالَ مَنْ صَلَّى لَيْلَةَ النِّصْفِ مِنْ رَمَضَانَ، وَلَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ مِائَةَ رَكْعَةٍ يَقْرَأُ فِيهَا بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ أَلْفَ مَرَّةٍ، لَمْ يَمُتْ حَتَّى يُبَشَّرَ بِالْجَنَّةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ரமலான் மாதம் நடுப்பகுதி பதினைந்தாம் இரவிலும், ஷஃபான் மாதம் நடுப்பகுதி பதினைந்தாம் ஆம் இரவிலும் இக்லாஸ் சூராவை ஆயிரம் தடவை ஓதி எவர் நூறு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

 

அறிவிப்பவர் :- முஹம்மத் இப்னு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 2263

 

பராஅத் நோன்பு

 

عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، وَكَانَ يَقُولُ “” خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَا دُووِمَ عَلَيْهِ، وَإِنْ قَلَّتْ “” وَكَانَ إِذَا صَلَّى صَلاَةً دَاوَمَ عَلَيْهَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஃபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘நற்செயல் களில் உங்களில் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான் என்றும் அவர்கள் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 1970

 

عَنْ أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ

 

நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், யா ரஸுலல்லாஹ்! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உஷாமத் இப்னு ஷைய்து ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 2357

 

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا، وَصُومُوا نَهَارَهَا

 

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள்.

 

அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1388

 

பராஅத் இரவில் கப்று ஜியாரத்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

 

ஒரு நாள் இரவு நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ மையவாடிக்கு வந்த போது தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள். ​​நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக நிச்சயமாக ஷஃபான் மாதத்துடைய பதினைந்தாம் நாளின் இரவில் அல்லாஹ் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.

​​

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மது 26018, மிஷ்காத் 1299

 

பராஅத் இரவின் சிறப்புகள்

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

 

அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் திர்மிதி 670 பைஹகி 3837 அஹ்மது 17

 

عَنْ عَطَاءِ بْنِ يَسَار رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ وَذَلِكَ أَنَّهُ تُنْسَخُ فِيهِ آجَالُ مَنْ يَمُوتُ فِي السَّنَةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போல் வேறு எந்த மாதத்திலும் நோற்பவர்களாக இருக்கவில்லை. அந்த ஆண்டு மரணிக்க உள்ளவர்களின் தவணை அம்மாதத்தில் மாற்றப்படுகிறது என்பதே இதற்குக் காரணமாகும்.

 

அறிவிப்பவர் :- அதாவு இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீஷைபா 9764

 

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَل تدرين مَا هَذِه اللَّيْل؟ يَعْنِي لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ قَالَتْ مَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ فِيهَا أَنْ يُكْتَبَ كلُّ مَوْلُودٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا أَنْ يُكْتَبَ كُلُّ هَالِكٍ مِنْ بَنِي آدَمَ فِي هَذِهِ السَّنَةِ وَفِيهَا تُرْفَعُ أَعْمَالُهُمْ وَفِيهَا تَنْزِلُ أَرْزَاقُهُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? எனக் கேட்டு விட்டுக் கூறினார்கள். இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 1302

 

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது என்ற கருத்தை தரும் நபிமொழிகள் மிஷ்காத் ஷரீபில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகளை காரணமாக வைத்து தான் மூன்று யாஸீன் ஓதப்படுகிறது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மூன்று யாஸீன் ஓதுவதன் நோக்கம்

 

♦️1) பாவமன்னிப்புத் தேடியும், அல்லாஹ்வை வணங்குவதற்கும், நன்மைகள் இன்னும் செய்வதற்கும் தன்னுடைய ஆயுளை நீடிப்பதற்கும் முதல் யாஸீன் ஓதப்படுகிறது.

 

♦️2) ரிஸ்க் எனும் உணவு விச்தீரனம் பெறவும், பலாய், முஸீபத்துகள் மற்றும் பிறரின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்பு தேடுவதற்கும் இரண்டாம் யாஸீன் ஓதப்படுகிறது.

 

♦️3) அல்லாஹ்வின் உதவியைத் தவிர்த்து பிறரின் உதவியை விட்டும் நீங்கியிருப்பதற்கும், இன்ப சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி மூன்றாம் யாஸீன் ஓதப்படுகிறது.

 

அல்லாஹ்விடம் கையேந்தும் தம் தேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் யாஸீன் சூராவை வஸீலாவாக முன்நிறுத்தி பரக்கத்து நிறைந்த பராஅத் இரவில் மக்கள் ஒன்றினைந்து வீடுகளிலும் மஸ்ஜிதுகளிலும் ஓதி வருகிறார்கள்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ… وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ ؛ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்து திருக்குர்ஆனை ஓதினால் அவர்கள் மீது சகீனத் என்னும் அமைதி இறங்கும். இறையருள் ரஹ்மத் அவர்களை மூடிக்கொள்ளும். மலக்குகள் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி தன்னிடமிருப்பவர்களிடம் பெருமையாக எடுதுக் கூருகிறான்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2699 இப்னு மாஜா 225

 

عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاح رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَرَأَ (يس) فِي صَدْرِ النَّهَارِ قضيت حَوَائِجه

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்.

 

அறிவிப்பவர் :- அதாஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 3461

 

عَن مَعْقِلُ بْنُ يَسَارٍ الْمُزنِيّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَرَأَ (يس) ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ تَعَالَى غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبه

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யாஸீன் திருகுர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

 

அறிவிப்பவர் :- மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 2178

 

♦️குறிப்பு :- திருக்குர்ஆனை ஓதுவற்கு நேரம் காலம் கிடையாது. வீடுகளிலும் மஸ்ஜிதுகளிலும் கூட்டமாக ஓதினால் ரஹ்மத் இறங்குவது மட்டுமின்றி மலக்குகளின் துஆ கிடைக்கப்பெறும். மேலும் திருக்குர்ஆனை ஓதுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக யாஸீன் ஸூராவை ஓதி துஆ கேட்டால் தேவைகள் நிறை வேற்றப்படும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறும் போது பராஅத் இரவில் குர்ஆனை ஓதக் கூடாது என்று கூறும் இந்த கூமுட்டை வஹாபிகள் நாம் என்னவென்று வர்ணிப்பது? அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்

 

இஸ்லாம் கூறும் பராஅத் ரொட்டி அன்னதானம்

 

ஷபே பராஅத் அன்று அதிகமான இடங்களில் பராஅத் ரொட்டி உணவு அன்னதானம் கொடுப்பது ஏன்?

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ… لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ… وَفِيهَا تَنْزِلُ أَرْزَاقُهُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் தான் (மனிதர்)ளின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 1302

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ ‏تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, நீர் (ஏழைகளுக்கு) உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 12

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! ஸலாமை பரப்புங்கள் (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2485 இப்னு மாஜா 1334

 

நிச்சயமாக தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை அணைத்துவிடும். கெட்ட மரணத்தையும் தடுத்து விடும். அறிவிப்பவர் ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரழி ஆதாரம் ஜாமிஉத் திர்மிதி 1/8402 நிச்சயமாக ஒரு முஸ்லிமின் தர்மம் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் தீய மரணத்தையும் தடுக்கும் அறிவிப்பவர் அம்று இப்னு அவ்ப் ரழி ஆதாரம் முஃஜமுல் கபீர் 17/22

 

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் தான் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறக்கி வைக்கப்படுகிறது. இவைகளை காரணமாக வைத்து தான் ரிஸ்க் எனும் வாழ்வாதரம் உணவு நமக்கு இறங்கும் அந்த நாளில் மக்களுக்கு நாம் உணவழிக்கின்றோம். மேலும் இஸ்லாத்தின் சிறந்த பண்புகளில் முக்கியமான ஒன்று தான் உணவளிப்பது அன்னதானம் செய்வது என்ற கருத்தை நாம் எக்காலமும் மறந்து விடக்கூடாது.

 

பராஅத் இரவு பற்றிய நபிமொழிகளை ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானது என்று கூறும் போலி தவ்ஹீத் வஹாபிஷ அமைப்பின் முக்கிய இமாம் அல்பானி

 

(((صحيح الجامع)))

773 – إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ اطَّلَعَ اللهُ إِلَى خَلْقِهِ فَيَغْفِرُ لِلْمُؤْمِنِيْنَ وَيُمْلِي لِلْكَافِرِيْنَ وَيَدَعُ أَهْلَ الْحِقْدِ بِحِقْدِهِمْ حَتَّى يَدَعُوْهُ

تخريج السيوطي ( هب ) عن أبي ثعلبة الخشني . تحقيق الألباني ( حسن ) انظر حديث رقم : 771 في صحيح الجامع

2700 – إِنَّ اللهَ تَعَالَى لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيْعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

تخريج السيوطي ( هـ ) عن أبي موسى .تحقيق الألباني ( حسن ) انظر حديث رقم : 1819 في صحيح الجامع .

2779 – إِنَّ اللهَ يَطَّلِعُ عَلَى عِبَادِهِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِلْمُؤْمِنِيْنَ وَيُمْلِي لِلْكَافِرِيْنَ وَيَدَعُ أَهْلَ الْحِقْدِ بِحِقْدِهِمْ حَتَّى يَدَعُوْهُ

تخريج السيوطي ( طب ) عن أبي ثعلبة .تحقيق الألباني ( حسن ) انظر حديث رقم : 1898 في صحيح الجامع .

7717 – فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ يَغْفِرُ اللهُ لِأَهْلِ الْأَرْضِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

تخريج السيوطي ( هب ) عن كثير بن مرة الحضرمي مرسلا .تحقيق الألباني ( صحيح ) انظر حديث رقم : 4268 في صحيح الجامع

 

(((صحيح الترغيب والترهيب)))

1026 – ( حَسَنٌ صَحِيْحٌ )
وعن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن

(رواه الطبراني وابن حبان في صحيحه) صحيح الترغيب والترهيب – (ج 1 / ص 248)

2767 – ( حَسَنٌ صَحِيْحٌ )
وعن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن

(رواه الطبراني في الأوسط وابن حبان في صحيحه والبيهقي) صحيح الترغيب والترهيب – (ج 3 / ص 33)

2770 – ( صَحِيْحٌ لِغَيْرِهِ )
وعن مكحول عن كثير بن مرة عن النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يغفر الله عز وجل لأهل الأرض إلا مشرك أو مشاحن
(رواه البيهقي وقال هذا مرسل جيد) صحيح الترغيب والترهيب – (ج 3 / ص 34)

2771 – ( صَحِيْحٌ لِغَيْرِهِ )
قال الحافظ ورواه الطبراني والبيهقي أيضا عن مكحول عن أبي ثعلبة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى عباده ليلة النصف من شعبان فيغفر للمؤمنين ويمهل الكافرين ويدع أهل الحقد بحقدهم حتى يدعوه (قال البيهقي وهو أيضا بين مكحول وأبي ثعلبة مرسل جيد قال الحافظ ويأتي في باب الحسد حديث أنس الطويل إن شاء الله تعالى) صحيح الترغيب والترهيب – (ج 3 / ص 34)

 

வஹாபிஷ வாதிகளே! பராஅத் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறும் வஹாபிஷ இமாம் அல்பானியை வழிகேடன் என்று கூறுவதற்கு போலி தவ்ஹீத் வஹாபிஷ வாதிகளில் யாருக்கும் சக்தி இல்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

பராஅத் துஆ

 

دعاء ليلة النصف من شعبان

 

யார் பராஅத் துஆவை ஓதுவார்களோ, அவர்களுடைய வாழ்வில் அல்லாஹ் விரித்தியை உண்டு பண்ணுவான் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

 

اللَّهُمَّ يَا ذَا الْمَنِّ وَلَا يُمَنُّ عَلَيْهِ، يَا ذَا الْجَلَالِ وَالإِكْرَامِ، يَا ذَا الطَّوْلِ وَالإِنْعَامِ. لَا إِلَهَ إِلَّا أَنْتَ ظَهْرَ اللَّاجِئينَ، وَجَارَ الْمُسْتَجِيرِينَ، وَأَمَانَ الْخَائِفِينَ. اللَّهُمَّ إِنْ كُنْتَ كَتَبْتَنِي عِنْدَكَ فِي أُمِّ الْكِتَابِ شَقِيًّا أَوْ مَحْرُومًا أَوْ مَطْرُودًا أَوْ مُقَتَّرًا عَلَيَّ فِي الرِّزْقِ، فَامْحُ اللَّهُمَّ بِفَضْلِكَ شَقَاوَتِي وَحِرْمَانِي وَطَرْدِي وَإِقْتَارَ رِزْقِي، وَأَثْبِتْنِي عِنْدَكَ فِي أُمِّ الْكِتَابِ سَعِيدًا مَرْزُوقًا مُوَفَّقًا لِلْخَيْرَاتِ، فَإِنَّكَ قُلْتَ وَقَوْلُكَ الْحَقُّ فِي كِتَابِكَ الْمُنَزَّلِ عَلَى لِسَانِ نَبِيِّكَ الْمُرْسَلِ: ﴿يَمْحُو اللهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ﴾، إِلهِي بِالتَّجَلِّي الْأَعْظَمِ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَهْرِ شَعْبَانَ الْمُكَرَّمِ، الَّتِي يُفْرَقُ فِيهَا كُلُّ أَمْرٍ حَكِيمٍ وَيُبْرَمُ، أَنْ تَكْشِفَ عَنَّا مِنَ الْبَلَاءِ مَا نَعْلَمُ وَمَا لَا نَعْلَمُ وَمَا أَنْتَ بِهِ أَعْلَمُ، إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ. وَصَلَّ اللهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الأُمِّيِّ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ

 

ஆதாரம் :- இப்னு அபீஷைபா 30128

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.