அனைத்து தொழுகைகளுக்குரிய நேரங்கள்

146

அனைத்து தொழுகைக்குரிய நேரங்கள் 

 

ளுஹர் தொழுகை

 

♦️ளுஹர் தொழுகையின் நேரம் :- சூரியன் உச்சியை விட்டும் விலகியதிலிருந்து சூரிய வெளிச்சத்தில் ஒரு பொருளின் நிழல் அந்தப் பொருளின் அளவுடையதாக வுரம் நேரம் வரை ழுகர் தொழலாம். ஆனால் உச்சியிலிருக்கும் போது அந்தப் பொருளுக்கு நிழல் எந்த சூரியன் அளவு இருந்ததோ அந்த அளவையும் சேர்த்துக் கணக்கிடல் வேண்டும். 

 

அஸர் தொழுகை

 

♦️அஸர் தொழுகையின் நேரம் : ழுஹருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் அஸ்தமமாகும் (மறையும்) வரையிலாகும். 

 

மஃரிப் தொழுகை

 

♦️மஃரிப் தொழுகையின் நேரம் : சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரையிலாகும்.  

 

இஷா தொழுகை

 

♦️இஷா தொழுகையின் நேரம் செம்மேகம் மறைந்ததிலிருந்து கிழக்குத் திசையில் உண்மையான வெண்மை தோன்றும் வரையிலாகும். 

 

ஷுபஹ் தொழுகை

 

♦️ஷுபஹ் தொழுகையின் நேரம் :- கிழக்குத் திசையில் உண்மையான வெண்மை தோன்றியதிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலாகும்.

 

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. 
அல்குர்ஆன் 4 : 103

 

ஸுன்னத் தொழுகை நேரங்கள்

 

தஹஜ்ஜத் தொழுகை :-

இத்தொழுகை விழித்தெழுந்து தொழும் ஓர் தொழுகையாகும். இதற்கு கியாமுல் லைல் இரவில் நின்று தொழுதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தொழுகையின் நேரம் இரவின் சிறிது நேரமாகிலும் நித்திரை செய்து இரவின் நடு பகுதியில் அல்லது இரவின் கடைசி பகுதியில் விழித்தெழுந்து. வைகறை பொழுது உதயமாகும் வரை சுபஹ் நேரம் வரை இத்தொழுகையை நிறைவேற்றலாம்.

 

வித்ரு தொழுகை :-

ஒற்றைப்படையாக தொழும் ஓர் தொழுகையாகும் இதற்கு ஸலாதுல் லைல் (இரவு தொழுகை) என்ற பெயர்களை கொண்டும் அழைக்கப்படுகிறது. இத்தொழுகையின் நேரம் இரவின் எல்லா பகுதிகளிலும் இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து வைகறை பொழுது உதயமாகும் வரை (சுபஹ் தொழுகை வரை) தாராளமாக தொழுது கொள்ளளாம்.

 

தராவீஹ் தொழுகை :-

ஓய்வு பெற்று ராகத்து பெற்று தொழும் ஓர் தொழுகையாகும். இதற்கு கியாமுர் ரமலான் ரமலானில் நின்று தொழுதல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இத்தொழுகை ரமலான் மாதத்தில் மாத்திரம் தொழக்கூடிய முக்கியமான ஓர் ஸுன்னத்து தொழுகையாகும் ரமலான் மாதம் முப்பது நாட்களும் இஷாவின் பிந்தின ஸுன்னத்து தொழுகைக்குப் பின்னர் இத்தொழுகையைத் தொழவேண்டும். இஷா தொழுகைக்குப் பிறகிலிருந்து வைகறைப் பொழுது சுபஹ் வரை இத்தொழுகையின் நேரமாகும். 

 

பெருநாள் தொழுகை :-

இத்தொழுகையின் நேரமானது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் வரையிலாகும், அதாவது ளுஹர் வரைக்கும். 

 

ளுஹா தொழுகை :-

இத்தொழுகையின் நேரமானது சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் ளுஹர் தொழுகையின் வக்து வரை இதன் நேரமாகும். 

 

அவ்வாபீன் தொழுகை :-

மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமையான தொழுகையாகும். 

 

தஸ்பீஹ் தொழுகை :-

வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுது கொள்ள முடியும். 

 

ஸலாத்துல் இஸ்திஸ்கா :-

மழை தேடித் தொழும் தொழுகை. இத்தொழுகை மழை இன்றி தவிக்கும் நேரத்தில் 3 நாட்கள் நோன்பு நோற்ற பின் 4வது நாளும் நோன்பு நோற்ற நிலையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொழுவதாகும். 

 

ஸலாத்துல் குஸூபைன் :-

சூரிய சந்திர கிரகணத் தொழுகை. இத்தொழுகை சூரிய சந்திர கிரகணங்கள் பிடிக்கத் துவங்கியது முதல் அது நீங்கும் வரை அல்லது கிரகணம் பிடித்த நிலையிலேயே சூரியன் மேற்கில் மறையும் வரை அல்லது சந்திர கிரகணம் ஏற்பட்ட நிலையில் காலை பொழுது புலரும் வரை கிரகணத் தொழுகைகளைத் தொழுவது முக்கியமான ஸுன்னத்தாகும். 

 

ஸலாத்துல் உளு :-

உளுச் செய்த பின் தொழக்கூடிய தொழுகை என்று இதற்குப் பெயர். தஹிய்யதுல் உளூ என்று என்றும் கூறப்படும். தஹிய்யத்துல் உளூ என்றால் உலூவின் காணிக்கையாகும். இத்தொழுகை உளுச் செய்த பின்னர் தொழுது கொள்ள முடியும். 

 

இஸ்திகாராத் தொழுகை :-

இஸ்திகாரா என்பது நலவைத் தேடுதல் என்பதாகும். வியாபாரம் விவாகம். விவசாயம், வீடு கட்டுதல் பிரயாணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நற்காரியங்களைத் தொடங்கும் போது இத்தொழுகையை தொழுது கொள்ளலாம்.

 

தஹிய்யத்துல் மஸ்ஜித் :-

மஸ்ஜிதின் காணிக்கைத் தொழுகை என்பதாகும். மஸ்ஜித்துக்கு வருபவர், அங்கு சென்று இருப்பதற்கு முன்னர் இத்தொழுகையை தொழுது கொள்வது ஸுன்னத்தாகும்.   

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்.

Leave A Reply

Your email address will not be published.