பாவங்களை அழிக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

89

பாவங்களை அழிக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

 

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ

 

குர்ஆன் கூறுகிறது (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். எனவே அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.

சூரா ஆல இம்ரான் ஆயத் 159

 

وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَآٮِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது யூதர்களிலிருந்தும் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் கண்டு கொண்டே இருப்பீர்! எனவே நீர் அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

சூரா மாயிதா ஆயத் 13

 

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.

சூரா நிஸா ஆயத் 64

 

♦️இறைவன் பாவங்களை மன்னிக்கிறான் இருப்பினும் அந்த பாவங்களை மன்னிப்பதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணக்கர்தராக இருக்கிறார்கள் என்பதாக மேற்கூறப்பட்ட ஆயத்துக்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️பாவங்களை மன்னிப்பதற்கு காரணக்கர்தராக இருப்பவர்களை பாவத்தை மன்னிப்பவர் என்று பேச்சு வழக்கில் கூறலாம் அதில் குற்றம் இல்லை. உதாரணமாக ஒரு மனிதர் மூலம் இறைவன் நம்மை பாதுகாக்க அல்லது உதவி செய்ய காரணமாக ஆக்கியுள்ளான் என்றால் இப்போது இறைவன் பாதுகாத்தான் இறைவன் உதவி செய்தான் என்று கூறுவதை விட இந்த மனிதர் பாதுகாத்தார் உதவி செய்தார் என்று கூருவதே அதிகமாகக் காணப்படுகிறது.

 

♦️எனவே பாவங்களை மன்னிப்பதற்கு காரணக்கர்தராக இருக்கக்கூடிய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாவத்தை மன்னிப்பவர் என்று பேச்சு வழக்கில் தாராளமாக கூரலாம் அதில் எவ்வித குற்றமும் இல்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا العَاقِبُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது புகழப்பட்டவர் ஆவேன். நான் அஹ்மத் இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

 

அறிவிப்பவர் :- ஜுபைர் இப்னு முத்யிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3532 முஸ்லிம் 2354

 

♦️குப்ர் இறைமறுப்பு என்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும் அந்த பெரும் பாவங்களில் ஒன்றான இறைமறுப்பை அளிப்பவர்கள் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பதாக மேற்கூறப்பட்ட ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

குறிப்பு :- பாவங்களை மன்னிப்பதற்கு காரணக்கர்தராக இருக்கக்கூடிய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து பாவத்தை மன்னிப்பவர் என்று பேச்சு வழக்கில் தாராளமாக கூரலாம். மேலும் குப்ர் இறைமறுப்பு என்பது பெரும் பாவம் அந்த இறைமறுப்பை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளிப்பவர்கள். எனவே தான் பாவங்களை அளிப்பவர்கள் என்பதாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்துக் கூறப்படுகிறதே அன்றி வேறில்லை.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.