பிறக்கும் குழந்தைகளின் காதில் பாங்கு இகாமத் கூறுவது நபிவழியாகும்

92

பிறக்கும் குழந்தைகளின் காதில் பாங்கு இகாமத் கூறுவது நபிவழியாகும் 

 

عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ أَبِي رَافِعٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ حِينَ وُلِدَا، وَأَمَرَ بِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹசன் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் பிறந்தபோது அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறினார்கள். மேலும் (மற்றவர்களுக்கும்) அதைக் கட்டளையிட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ராஃபிஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1514

 

عَنْ أَبِيهِ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ 

 

பாதிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஸன் பின் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பெற்றெடுத்த போது, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு சொல்வதை நான் பார்த்தேன்.

 

ஆதாரம் :- திர்மிதி 1514

 

இந்த ஹதீஸை பதிந்த இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மேற்கூறிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

 

قال المنذري : وأخرجه الترمذي وقال : هذا حديث حسن صحيح

 

இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் இப்னு உபைதில்லாஹ் என்பவர் பலஹீனமானவர் என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. இருப்பினும் மேற்கூறிய ஹதீஸில் கூறப்படும் கருத்துக்களை கொண்டு தாராளமாக அமல் செய்யமுடியும் என்ற கருத்தையும் அறிஞர்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றனர்.

 

பிறந்த குழந்தையின் காதில் ஆரம்பத்தில் அம்மா அப்பா, டாடி மம்மி சொல்லும் ஹிந்து சமூகத்தினரை ஆதரிக்கும் நவீன இஸ்லாமிய சமுதாயமே. பிறந்த குழந்தை இவ்வுலகில் ஆரம்பமாக கேற்க வேண்டிய வார்த்தை அம்மா, அப்பா டாடி மம்மி அல்ல. அதற்கு மாற்றாமாக உள்ள அல்லாஹு அக்பர் என்னும் ஏகத்துவ வார்த்தையையாகும். வஹாபிஷ சிந்தனைகளை  நிருத்தி விட்டு பிறக்கும் குழந்தைகளுக்கு அல்லாஹ்வை நினைவு கூறும் பாங்கு இகாமத் கூறுவது ஏற்றமானதாகும். அதுவே நபிவழி ஸுன்னத்தாகும்.

 

குறிப்பு :- பிறக்கும் (குழந்தைகள்) மனிதர்களுக்கு தொழுகை இன்றி பாங்கு இகாமத் கூறுவது நபிவழியாகும். மரணிக்கும் மனிதர்களுக்கு பாங்கு இகாமத் இன்றி தொழுகை நடத்தப்படும். இதனை புரிந்து கொண்டவர்களை இஸ்லாமிய அறிஞர்கள் என்கிறோம். இதனை மறுப்பவர்களை வஹாபிஷ அறிஞர்கள் என்கிறோம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.