பெண்பிள்ளை நமக்கு கிடைத்த வரம் அதிர்ஷ்டமாகும்
பெண்பிள்ளை நமக்கு கிடைத்த பெரும்வரம் அதிர்ஷ்டமாகும்
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النِّسَاءَ قُلْنَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْعَلْ لَنَا يَوْمًا. فَوَعَظَهُنَّ وَقَالَ أَيُّمَا امْرَأَةٍ مَاتَ لَهَا ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ كَانُوا حِجَابًا مِنَ النَّارِ قَالَتِ امْرَأَةٌ وَاثْنَانِ؟ قَالَ وَاثْنَانِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பெண்கள் (வந்து) எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் ‘ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் மரணித்து விட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்’ எனக் கூறியதும் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் இறந்தால்? எனக் கேட்டதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு குழந்தை இறந்தாலும் தான் என்றார்கள்.
அறிவிப்பவர் :-அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 1249
عَنْ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ كَانَ لَهُ ثَلاثُ بَنَاتٍ فَصَبَرَ عَلَيْهِنَّ وَأَطْعَمَهُنَّ وَسَقَاهُنَّ وَكَسَاهُنَّ مِنْ جِدَتِهِ كُنَّ لَهُ حِجَابًا مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எவரிடத்தில் மூன்று பெண்மக்கள் இருந்து அவர்களடித்தில் பொருமையோடு நடந்து அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்க பானமும், உடுத்த உடையும் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து கொடுத்தாரோ அவருக்கு அந்த பெண்பிள்ளைகள் கியாமநாளிலே நரகத்திலிருந்து திரையாக, தடுப்பாக ஆகியிருப்பர்கள்.
அறிவிப்பவர் :- உத்பா இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 3669
♦️அன்புக்குரிய பெற்றோர்களே! குழந்தைகளை ஒழுங்கு முறைப்படி பராமரித்து கொள்ளுங்கள், அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உங்களுக்காக பரிந்துரை செய்வார்கள். இன்றும் சில ஹதீஸ்களில் அல்லாஹ் பெற்றோர்களை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் வரை அவர்களுக்காக அவர்களின் குழந்தைகள் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்களும் அது அல்லாத சில ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
♦️குறிப்பு :- பெண்குழந்தைகள் கிடைக்கப் பெற்றால் சில பெற்றோர்களின் முகம் வாடிவிடுகிறது. அன்புக்குரிய பெற்றோர்களே! அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். பெண்பிள்ளைகளை நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். பெண்மக்களை திருமணம் செய்பவர்களே! அவர்களுடன் நல்ல முறையில் வாழ்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எதுவும் செய்து விடாதீர்கள். அவர்களை வெறுக்காதீர்கள். அழிந்து போகக்கூடிய இந்த உலகில் அவர்களுக்கு நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அழிவே இல்லாத மறுமை வாழ்க்கையில். நீங்கள் அந்த பெண்மக்களுக்கு செய்த நற்காரியங்கள் மூலம் அவர்கள் நரகில் இருந்து உங்களை பாதுகாக்கும் திரையாக இருப்பார்கள் என்ற இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்