பெண் பிள்ளைகள் தன் முகத்தை மறைப்பது பற்றிய தெளிவு
பெண் பிள்ளைகள் தன் முகத்தை மறைப்பது பற்றிய தெளிவு
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பெண்கள் (அடக்கமாக) மறைவாக இருக்க வேண்டியவர்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் ஷைத்தான் அவர்களை சிறப்பாக (கவர்சியாக்கி) காட்டுகின்றான்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 திர்மிதி 1093
மேற்கூறிய ஹதீஸ் பிரகாரம் பெண் பிள்ளைகள் மறைவாக இருக்க வேண்டும். அவர்களை ஷைத்தான் அன்னிய ஆண்களுக்கு கவர்ச்சியாக காட்டுகிறான். ஆக கவர்ச்சி என்பது பெண் உடல் முழுவதையும் குறிக்கும். இதை காரணமாக வைத்து பெண் பிள்ளைகள் ஏனையவைகளை மறைப்பது போன்று தன் முகத்தை மறைப்பது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا” يَا أَسْمَاءُ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتْ الْمَحِيضَ لَمْ تَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلا هَذَا وَهَذَا وَأَشَارَ إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ
அஸ்மாவே! நிச்சயமாக ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளின் உடலில் இதனையும், இதனையும் தவிர வேறு எப்பகுதியும் வெளியே தெரியலாகாது’ என்று கூறி தனது முகத்தையும் இரு கரங்களையும் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 அபூ தாவூத் 4104
عَنْ أَسْمَاءَ رَضِيَ اللَّهُ عَنْهَا” قَالَتْ :- نُغَطِّيَ وُجُوهَنَا مِنَ الرِّجَالِ، وَكُنَّا نَتَمَشَّطُ قَبْلَ ذَلِكَ
நாங்கள் ஆண்களிடமிருந்து எங்கள் முகங்களை மறைத்துக் கொள்வோம். இதற்கு முன்பே தலைவாரிக் கொள்வோம்.
அறிவிப்பவர் :- அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் 📚 இப்னு குஷைமா 2511 ஹாகிம் 1607 ஹதீஸ் ஸஹீஹ்
மேற்கூறிய இரு ஹதீஸ்களையும் நன்றாக பாருங்கள். ஆரம்ப ஹதீஸில் பெண் பிள்ளைகள் தன் முகம் இரு கரங்களை தவிர மற்றவைகளை மறைக்க வேண்டும் என்றும். அடுத்த ஹதீஸில் ஆண்களிடமிருந்து பெண் பிள்ளைகள் தன் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
♦️குறிப்பு :- முகத்தைத் திறப்பதனால் “பித்னா” வுக்கு உட்படும் சூழல் இருப்பின் அதனை மறைத்துக் கொள்ள வேண்டும். முகத்தை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதில் கருத்து வேறுபாடு உள்ளது. மேலும் பெண் பிள்ளைகள் தன் முகத்தை மறைப்பது முற்றிலும் தவறு அது ஹராம் எனக் கூறுபவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் மடையர்களாகும்.
🔸சிலர்களின் வாதம் :- சில பெண்கள் அன்னிய ஆண்களுடன் தவறான வழியில் செல்வதற்கு முகத்திரை முக்கிய காரணம். இதனைக் காரணமாக வைத்து தான் முகம் மூடுவது ஹராம் எனக் கூறுவோரின் வாதம் முற்றிலும் தவறாகும். உதாரணமாக ஷஹ்ரான் போன்ற வஹாபிஷ தீவிரவாதிகள் கருப்பு ஜுப்பா அணிந்து பெரிய தாடி வைத்துள்ளனர். ஆக தவறான வழியில் செல்வதற்கு ஜுப்பாவும் பெரிய தாடியும் முக்கிய காரணம். இதனால் தான் நான் ஜுப்பா போடுவதில்லை. பெரிய தாடி வைப்பதில்லை. இவ்வாறான செயல் ஹராம் என்று நான் கூறினால் அதனை உங்களால் ஏற்க முடியுமா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
🔸ஆக ஒரு சில பெண் பிள்ளைகள் அன்னிய ஆண்களுடன் தவறான வழியில் செல்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய மூல காரணம். அன்னிய ஆண்களுடன் சர்வ சாதாரணமாக பேசி பழகுவதும். வெக்கம் ஒழுக்கம் இஸ்லாமிய பற்று இல்லாமல் இருப்பதும். குறிப்பாக தன் முக அழகை அன்னிய ஆண்களுக்கு காட்டுவது அதாவது வெழிப்படுத்துவதாகும். இதனால் தான் பெண் பிள்ளைகள் அன்னிய ஆண்களுடன் தவறான வழியில் செல்வதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைகிறது.
♦️குறிப்பு :- பெண் பிள்ளைகள் தன் முக அழகை ஆரம்பத்தில் இருந்தே அன்னிய ஆண்களுக்கு காட்டாமல் மறைத்திருந்தால் எந்த விதத்திலும் தவறான வழிக்கு எந்த ஒரு பெண் பிள்ளைகளும் போக மாட்டார்கள். போக வேண்டிய அவசியமும் இல்லை என்ற கருத்தை இங்கு நாம் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். பெண் பிள்ளைகள் முகத்தை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்களுடைய நாட்டுச் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தன்னுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெண் பிள்ளைகள் நடுநிலையாக முடிவு செய்து கொள்ள முடியும். இந்த விஷயத்தில் வற்புறுத்தல் கிடையாது. அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்