பெண் மாப்பிள்ளை இருவரும் இன்றி திருமணம் நிறைவேறாது

284

பெண் மாப்பிள்ளை இன்றி திருமணம் நிறைவேறாது

 

وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۙ‏

 

குர்ஆன் கூறுகிறது உங்களை (ஆண் பெண் எனும்) இணைகளாக ஜோடியாக நாம் படைத்தோம்.

சூரா நபா ஆயத் 8

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُزَوِّجُ الْمَرْأَةُ الْمَرْأَةَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் வேறொரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது.

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1882

 

♦️ஆண்களை படைத்து அவர்களுக்கு உற்ற துணைகளுக்காக பெண்களை அல்லாஹ் படைத்துள்ளான். ஒரு ஆண் ஷரியத்து முறைப்படி பெண்ணை திருமணம் செய்யாமல். ஒரு ஆண் மற்றொரு ஆணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ ஜோடியாக திருமணம் என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடடுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிது.

 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயம் முற்றாக அழிக்கப்பட்டது

 

فَكُلًّا اَخَذْنَا بِذَنْبِهٖ‌ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا‌ وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّيْحَةُ‌ وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَ‌ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا‌ وَمَا كَانَ اللّٰهُ لِيَـظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது இறுதியில், (ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட) ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம். பிறகு, அவர்களில் சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை நாம் பூமியில் புதைத்து விட்டோம். அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்து விட்டோம். அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக் கொண்டிருந்தார்கள்.

சூரா ஆன்கபூத் 40

 

♦️லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பேச்சை மீறியவாறு அவர்களின் சமுதாயம் ஒரு ஆண் மற்றொரு ஆணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ தகாத பாலியல் ரீதியாக உறவு கொண்ட காரணத்தால் அச்சமூகத்தை அல்லாஹ் முழுமையாக அழித்து விட்டான்.

 

♦️குறிப்பு :- திருமணப் பெண், அவளுக்கு ஜோடியாக ஆணை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஆண் மற்றொரு ஆணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த அனுமதியும் இல்லை. சிலர்கள் திருமணம் என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடடுவது விபச்சாரத்தை விடவும் கொடியதாகும். ஷரியத்து சட்டப் பிரகாரம் பெண் மாப்பிள்ளை இருவரும் இல்லை என்றால் அதற்கு திருமணம் என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.