பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்து கொள்வதில் எவ்வித குற்றமும் இல்லை
பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அணிந்து கொள்வதில் எவ்வித குற்றமும் இல்லை
فَاتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ، وَنَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை தயாரித்துக் கொண்டார்கள். அதன் மின்னும் வெண்மையை நான் (இன்னும்) பார்ப்பதைப் போன்றுள்ளது. அதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 7162
فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று (எழுதப்பட்டு) அதாவது பொறிக்கப்பட்டிருந்த மோதிரத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை(விரலில்) அணிந்திருந்தார்கள் என்ற கருத்தை மேற்கூறிய நபிமொழி நமக்கு தெளிவு படுத்துகிறது.
அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 65
فَقُلْتُ لِقَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : مَنْ قَالَ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ؟ قَالَ : أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ
(இந்த நபிமொழி அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் ‘முஹம்மத்ர் ரசூலுல்லாஹ்’ என்றிருந்தது என்று உங்களிடம் யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கவர் ‘அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் கூறினார்கள் என்றார்கள்.
நூல் ஆதாரம் :- புஹாரி 65
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்