பெருநாள் தொழுகையை தொழுவதற்கு சிறந்த இடம் எது?

69

பெருநாள் தொழுகையை தொழுவதற்கு சிறந்த இடம் எது?

 

عمر بن الخطاب رضي الله عنه قام على المنبر فقال : يا أيها الناس إن رسول الله صلى الله عليه وسلم كان يخرج بالناس إلى المصلى يصلي بهم لأنه أرفق بهم وأوسع عليهم وأن المسجد كان لا يسعهم

السنن الكبرى – البيهقي – ج ٣ – الصفحة ٣١٠

 

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரில் ஏறி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவார்கள், காரணம் என்னவெனில் அது அவர்களுக்கு இலகுவாகவும் போதுமானதாகவும் இருந்தது. மேலும் அவர்களுக்கு பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்ற போதுமானதாக இருக்கவில்லை.”

 

ஆதாரம் :- அஸ்ஸூனன் அல் குப்ரா 3/31

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் வெவ்வேறு ஊருகளுக்கும் வெவ்வேறு நாடுகளுக்கும் வியாபார விஷயமாக இஸ்லாத்தை பற்றி எடுத்துகூறும் விஷயமாக பிரயாணம் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

 

வெவ்வேறு நாடுகளுக்கு பிரயாணம் செய்த ஸஹாபாக்கள் ஊருக்கு சில சந்தர்ப்பங்களில் வந்து செல்லும் வழக்கம் இருந்தாலும் குறிப்பாக பெருநாள் தினங்களில் எல்லா ஸஹாபாக்களும் தன் குடும்பத்துடன் பெருநாளை கொண்டாட தாங்கள் ஊருக்கு வந்து விடுவார்கள். அச்சமயம் அன்றைய காலத்தில் பள்ளியில் பெருநாள் தொழுகை நடத்த இடவசதி இல்லாமல் போனது. இதன் காரணமாகவே வெட்டவெளியை நாடி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு ஊரில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற பள்ளிகளில் இடவசதி இருந்தால். வெட்டவெளியில் தொழுவதை விட பள்ளியில் தொழுவது சிறந்ததாகும். தற்போதைய நம் நாட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளியில் கூட்டாக தொழுவதை விட வீடுகளில் தொழுவது சிறந்ததாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.