மஃரிப் தொழுகைக்கு பின் ஓதும் துஆ
மஃரிப் தொழுகைக்கு பின் ஓதும் துஆ
اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ اِنَّا اَمْسَيْنَا مِنْكَ فِي نِعْمَةٍ وَّعَافِيَةٍ وَّسِتْرٍ فَاَتِمَّ نِعْمَتَكَ عَلَيْنَا وَعَافِيَتّكَ وَسِتْرَكَ فِي الدِّيْنِ وَالدُّنْيَا وَالْاخِرَةِ اٍنَّكَ عَلي كُلِّ شَيْئٍ قَدِيْرٌ, وَبِلْاِجَابَةِ جَدِيْرٌ, نِعْمَ الْمَوْلي وَنِعْمَ النَّصِيْرُ, اَللّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ (٧) اَللّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ سَالِمِيْنَ وَاَذْخِلْنَا الْجَنَّةَ بِسَلاَمٍ اامِنِيْنَ وَقِنَا رَبَّنَا شَرَّ الظَّالِمِيْنَ, فَانْصُرْنَا عَلي الْقَوْمِ الْكَافِرِيْنَ, اِلهَنَا وَارْزُقْنَا النَّظْرَ اِلي لِقَآءِ وَجْهِكَ الْكَرِيْمِ. مَعَ لِقَآءِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّي اللّهُ عَلَيْهِ وَ سَلَّمَ اَجْمَعِيْنَ وَالْحَمْدُللّهِ رَبِّ الْعلَمِيْنَ
இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே! நாங்கள் உன்னிடமிருந்து பாக்கியத்தையும் சேமத்தையும், பாதுகாப்பையும் பெற்று மாலை நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, எங்கள் மீது உன்னுடைய பாக்கியத்தையும் சேமத்தையும் உன்னுடைய பாதுகாப்பையும் பரிபூரணமாக்கி அருள்வாயாக! சன்மார்க்கத்திலும் உலக விசயத்திலும் மறுமையிலும் எங்களுக்கு (அதனை) அருள்வாயாக! நிச்சயமாக நீ சகல விசயங்களின் மீதும் மகா சக்தியுடையவனாக இருக்கின்றாய்., பதில் அளிப்பதில் துரிதமானவனாக இருக்கின்றாய். எஜமானரில் நீயே நல்லவன், உதவி புரிபவரில் நீயே நல்லவன். இறைவனே எங்களை நரக தீயிலிருந்து காப்பாற்றுவாயாக (7முறை) இறைவனே நாங்கள் சேமமடைந்தவர்களாக எங்களை நரகத்திலிருந்து காப்பாயாக! எங்கள அமைதியாகவும் சேமமாகவும் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாகயாக. எங்கள் இரட்சகனே இன்னும் எங்களைக் கொடுமைக்காரர்களின் தீங்கை விட்டும் காப்பாயாக! காஃபிரான (தீய) கூட்டத்தார் விசயத்திலும் எங்களுக்கு உதவி செய்வாயாக! எங்களுக்கு உன்னுடைய சிற்பபான திருமுக சந்திப்பின் போது நன்கு தரிசிசக்க பாக்கியம் அருள்வாயாக! எங்கள் தலைவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸவ்வம் அவர்களுடைய சந்திப்பு பாக்கியமும் அருள்வாயாக! புகழ் உரை அனைத்தும் சர்வலோக ரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்