மனித படைப்பின் மண் கோணங்கள்
மனித படைப்பின் மண் கோணங்கள்
الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ
குர்ஆன் கூறுகிறது அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
சூரா ஸஜ்தா ஆயத் 7
وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
குர்ஆன் கூறுகிறது உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
சூரா அன்பியா ஆயத் 30
اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
சூரா சஃப்பாத் ஆயத் 11
وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
குர்ஆன் கூறுகிறது ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
சூரா ஹிஜ்ர் ஆயத் 26
اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
சூரா ஆல இம்ரான் ஆயத் 59
♦️ மேற்கூறிய ஐந்து விதமான ஆயத்துக்களையும் நன்றாக கூர்ந்து கவனியுங்கள். ஆரம்ப ஆயத்தில் களி மண்ணிலிருந்து மனிதனை படைக்க ஆரம்பித்தான் என்றும். இரண்டாவது ஆயத்தில் உயிருள்ள ஒவ்வொன்றையும் தண்ணீரிலிருந்து படைத்தான் என்றும். மூன்றாவது ஆயத்தில் பிசுபிசுப்பன களிமண்ணிலிருந்து படைத்தான் என்றும். நான்காவது ஆயத்தில் ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் படைத்தான் என்றும். ஐந்தாவது ஆயத்தில் ஆரம்ப மனிதர் ஆதமை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
♦️இறைவன் ஆரம்பமாக களி மண்ணை எடுத்துக் கொண்டான். பின்னர் அந்த களி மண்ணில் தண்ணீரை கழந்தான். அதன் பின்னர் அந்த மண் பிசுபிசுப்பன களிமண்ணாக மாறியது. அதன் பின்னர் அந்த களி மண்ணில் நிரம் கருப்பாக மாற்றம் அடைந்தது. அதன் பின்னர் அந்த மண்ணிலிருந்து ஆரம்ப மனிதரை இறைவன் படைத்து விட்டு “குன்” (ஆகுக) எனக் கூறினான். உடனே அது உயிர்பெற்று எழுந்தது. இதுவே மனித துவக்கத்தின் ஆரம்பமும் இறைவனின் மாபெரும் அத்தாட்சியும் ஆகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்