மழை இல்லாத போது, மழை பொழியும் போது, மழை பொழிந்த பின் ஓதும் துஆக்கள்
மழை வேண்டும் போது ஓத வேண்டிய துஆ
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مُرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ
யா அல்லாஹ்! எங்களுக்கு உதவிகரமான, மகிழ்ச்சிகரமான, பசுமை ஏற்படுத்தக்கூடிய மழையைப் பொழிய செய்வாயாக! நன்மை தரக்கூடிய நட்டம் ஏறபடுத்தாத விரைவான தாமதமாகாத மழையை பொழியச் செய்வாயாக!
اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا
யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக! யா அல்லாஹ்! மழை பொழிய செய்வாயாக!
اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ
யா அல்லாஹ்! உன் அடியார்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவாயாக! மேலும் உனது அருளை பரப்புவாயாக! வறண்டு கிடக்கும் இந்த உனது ஊருக்கு உயிர் கொடுப்பாயாக!
மழை பொழியும் போது ஓத வேண்டிய துஆ
اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
யா அல்லாஹ்! பயனுள்ள மழையாக இதை ஆக்குவாயாக!
மழை பொழிந்த பின்னர் ஓத வேண்டிய துஆ
مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ
அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது.
அதிகளவில் மழை பொழியும் போது ஓத வேண்டிய துஆ
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
யா அல்லாஹ்! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்