மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்

109

மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்

 

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ

 

தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன் மிகத் தூய்மையானவன்; மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரையில்! அதன் சுற்றுப்புறங்களை அவன் (பரக்கத் மிக்கதாய்) அருள்வளம் மிக்கதாய் ஆக்கினான். (அல்குர்ஆன் : 17:1)

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ مَسْجِدِي هَذَا وَمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الْأَقْصَى

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது இந்த (மஸ்ஜிதுன் நபவி) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர (தொழும் நோக்கில்) வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் : 1394, திர்மிதி 325 இப்னு மாஜா 1404 நஸாயி 694, 2899

 

عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: هُوَ أَرْضُ الْمَحْشَرِ وَأَرْضُ الْمَنْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَتَحَمَّلَ إِلَيْهِ؟ قَالَ مَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَأْتِيَهُ فَلْيُهْدِ إِلَيْهِ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَإِنَّ مَنْ أَهْدَى إِلَيْهِ زَيْتًا كَانَ كَمَنْ قَدْ أَتَاهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நான் யா ரஸுலல்லாஹ்! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற பள்ளிகளில் தொழுவதை விட அங்கு ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை தொழுததைப் போன்றதாகும் என்று கூறினார்கள். அதற்கு நாங்கள் அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டோம். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அங்கு சென்று தொழமுடியாதவர் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக (ஜைதூன்) ஆலிவ் எண்ணெயை அனுப்பட்டும். அவ்வாறு அனுப்புபவர் அங்கு சென்றவர் போன்றவராவார் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- உஸ்மான் இப்னு அபூ ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது, அபூ யஹ்லா 7088

 

عَنْ زِيَادِ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْها، مَوْلَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ: ائْتُوهُ فَصَلُّوا فِيهِ وَكَانَتِ الْبِلَادُ إِذْ ذَاكَ حَرْبًا، فَإِنْ لَمْ تَأْتُوهُ وَتُصَلُّوا فِيهِ، فَابْعَثُوا بِزَيْتٍ يُسْرَجُ فِي قَنَادِيلِهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், யா ரஸுலல்லாஹ்! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அது சமயம் அந்த ஊர்களில் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது). நீங்கள் அங்கு சென்று தொழ முடியவில்லையென்றால் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக (ஜைதூன்) ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: ஸியாத் இப்னு அபூ ஸவ்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 457

 

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ أَنْ قَدِمَ الْمَدِينَةَ، سِتَّةَ عَشَرَ شَهْرًا، نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ. ثُمَّ حُوِّلَتِ الْقِبْلَةُ قَبْلَ بَدْرٍ بِشَهْرَيْنِ

 

மதீனாவிற்கு வந்த பின் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அதினாறு மாதங்கள் தொழுதனர். பின்பு பத்ருப் போருக்கு இரண்டு மாதத்திற்கு முன்னால் கிப்லா (வின் திசை) மாற்றப்பட்டது.

 

அறிவிப்பவர் :- ஸயீத் இப்னு முஸய்யப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஅத்தா மாலிக் 525

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ وَدَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا، فَقَالَ: أَيْنَ تُرِيدُ؟ قَالَ: أُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: صَلَاةٌ فِي هَذَا الْمَسْجِدِ أَفْضَلُ مِنْ مِائَةِ صَلَاةٍ فِي غَيْرِهِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பயணம் செல்லும் ஒரு மனிதரை வழியனுப்பினார்கள். அப்போது எங்கே செல்ல நாடுகிறீர்? என்று கேட்க, அந்த மனிதர் பைத்துல் மக்திஸ் என்று பதிலளித்தார். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர” என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஸயீத் அல்குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு ஹிப்பான் 1624

 

عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ، قُمْتُ فِي الحِجْرِ، فَجَلاَ اللَّهُ لِي بَيْتَ المَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விபரிக்கலானேன்.

 

அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3886

 

عَنْ مُعَاذِ بْنِ جَبَل رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةَ خُرُوجُ الدَّجَّالِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஜெரூஸலாம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.

 

அறிவிப்பவர் :- முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 8297

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.