மாற்றுமத வேதங்களில் நபி முஹம்மத் ﷺ அவர்களை பற்றிய முன் அறிவிப்பு

68

மாற்றுமத வேதங்களில் நபி முஹம்மத் ﷺ அவர்களை பற்றிய முன் அறிவிப்பு

 

ஓர் அன்னிய நாட்டில் ஓர் சீர்த்திருத்தவாதி தன் சீடர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்.

 

வேதநூல் :- பவிஷ்ய புராணம் பாகம் 3 சூத்திரம் 3 சுலோகம் 5/8

 

(தீர்க்கதரிசி) அவர்கள் லிங்க சேதம் ஸுன்னத் செய்திருப்பார்கள், தலையில் குடுமி இருக்காது, தாடி வைத்திருப்பார்கள். சப்தம் போட்டு அழைப்பார்கள், முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்.

 

வேதநூல் :- பவிஷ்ய புராணம் பாகம் 3, சூத்திரம் 3, சுலோகம் 25

 

ஹிந்துக்களின் வேதநூல்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய முன் அறிவிப்பு அதிகம் உள்ளது.

 

வேதநூல் :- பவிஷ்ய புராணம் பர்வம் 3 காண்டம் 3 அத்தியாயம் 3 சுலோகம் 5/8 அதர்வண வேதம் புத்தகம் 20 வேதவரி 127 மந்திரம் 1/14 ரிக் வேதம் புத்தகம் 1 மந்திரம் 9 சமய வேதம் அக்னி மந்திரம் 64 யஜுர் வேதம் அத்தியாயம் 31 வசனம் 18 போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஏசு நாதர் தன் சீடர்களுக்கு கூறினார். ”நான் உங்களுக்கு சொல்வது உண்மை. நான் போவதே உங்களுக்கு நல்லது. நான் போகாவிடில் தேற்றரவாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்.. நான் உங்களுக்கு சொல்லவேண்டியவை இன்னும் பல உண்டு. ஆனால் அவற்றை உங்களால் தாங்க முடியாது. உண்மையின் ஆவியானவர் வந்தபின் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் பேசுவதை தாமாக பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார். வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

 

வேதநூல் :- யோவான் அதிகாரம் 16 வசனம் 7/13 வரை இடம்பெற்றது

 

கிருஸ்தவர்களின் வேதநூல்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய முன் அறிவிப்பு அதிகம் உள்ளது.

 

வேதநூல் :- ஏசாயா அதிகாரம் 42 வசனம் 1,9 மத்தேயு அதிகாரம் 15 வசனம் 24,25 ஏசாயா அதிகாரம் 42 வசனம் 10,11 ஆதியாகமம் அதிகாரம் 25 வசனம்13 மத்தேயு அதிகாரம் 21 வசனம் 7,9 ஆதியாகமம் அதிகாரம் 21 வசனம் 12,21 சங்கீதம் அதிகாரம் 45 வசனம் 2,3 மத்தேயு அதிகாரம் 21 வசனம் 33, 44 போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மோசே (மூஸா) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. உன் தேவனாகிய கர்த்தர் உன் மக்களில் நின்றும் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்கு செவிமடுப்பாயாக” இவ்வாறு தங்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருப்பதை வேதக்காரர்கள் நன்கு அறிவார்கள்.

 

வேதநூல் :- உபாகமம் அதிகாரம் 18 வசனம் 15

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.