மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுவது பற்றிய தெளிவு

95

மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுவது பற்றிய தெளிவு

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

♦️கிருஸ்தவர்களின் பண்டிகை :- ஆங்கிலப் புத்தாண்டு, தேவமாதா பரிசுத்தரான திருநாள், புனித வெள்ளி, ஈஸ்டர் டே, தேவமாதா காட்சியருளிய திருநாள், தேவமாதா பிறந்த நாள், தேவ மாதா கருவுற்ற நாள், கிறிஸ்துமஸ் ஈவ், கிறிஸ்துமஸ், நியூ ஈயர்ஸ் ஈவ் போன்ற பண்டிகை பெருநாட்கள் உள்ளது.

 

♦️தமிழர்களின் பண்டிகை :- போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தீபாவளி, சித்திரை வருசப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, கார்த்திகை, யுகாதி போன்ற பண்டிகை பெருநாட்கள் உள்ளது.

 

♦️பௌத்தர்களின் பண்டிகை :- வெஸக், பொசன் போன்ற பண்டிகை பெருநாட்கள் உள்ளது.

 

♦️யூதர்களின் பண்டிகை :- பஸ்கா, புளிப்பில்லாத அப்ப, முதற்பலனாகிய கதிர்கட்டு, பெந்தெகொஸ்தே, எக்காளப், பாவ நிவாரணப், கூடாரப் போன்ற பண்டிகை பெருநாட்கள் உள்ளது

 

மேற்கூறிய பண்டிகைகளுக்கு முஸ்லிம்கள் வாழ்த்துக் கூறுவதை பொதுவாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்டான நான்கு மத்ஹபுகளிலிலும் தடுக்கப்பட்ட ஒன்றாகும். இதில் ஓர் விதிவிலக்கு உள்ளது. தெளிவான முறையில் கூறப்போனால் நாம் மாற்று மத பெரும்பாலான மக்கள் இருக்கும் பகுதிகளில் சிறுபான்மையினராக நல்லிணக்கத்தோடு எந்தவித பிரச்சினை குழப்பங்கள் இல்லாத நிலையில் சில நாடுகளில் வாழ்ந்து வருக்கிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் நல்லிணக்கம் என்ற நோக்கில் அவர்களுடைய பண்டிகை பெருநாட்களில் வார்த்தை அளவில் அவர்களுக்கு நாம் வாழ்த்து சொல்வதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

عن أبي عبيدة بن محمد بن عمار بن ياسر قال أخذ المشركون عمار بن ياسر فعذبوه حتى قاربهم في بعض ما أرادوا، فشكا ذلك إلى النبي صلى الله عليه وسلم، فقال النبي صلى الله عليه وسلم: “كيف تجد قلبك؟ قال مطمئنا بالإيمان قال النبي صلى الله عليه وسلم “إن عادوا فعد” ورواه البيهقي بأبسط من ذلك، وفيه أنه سب النبي صلى الله عليه وسلم وذكر آلهتهم بخير، وأنه قال: يا رسول الله، ما تُركتُ حتى سَببتك وذكرت آلهتهم بخير! قال: “كيف تجد قلبك؟” قال: مطمئنا بالإيمان. فقال: “إن عادوا فعد”. وفي ذلك أنزل الله: { إِلا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإيمَانِ }

 

இறைநிராகரிப்பாளர்கள் ஒருமுறை அம்மார் இப்னு யாஸிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பிடித்துச் சென்று கடும் சித்ரவதைகளைச் செய்தனர். சித்ரவதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களை விட்டு விடுமாறு அவர்களிடம் கோரினார்கள். அதற்கு, இறைநிராகரிப்பாளர்கள் ”எங்கள் கடவுளர்களை நீர் வாழ்த்திப் பேச வேண்டும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நீர் திட்ட வேண்டும்” என்றனர். இதை கேட்ட அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள் கூறியது போன்று நடந்து கொண்டார்கள். பின்பு அங்கிருந்து விடுதலையாகி நேராக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபைக்கு முன்வந்து நடந்த சம்பவத்தை விளக்கி என்னுடைய நிலை என்ன? என்பது போல் கேட்டார்கள். அப்பொழுது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அவர்களின் முன்பாக நீர் என்னைத் திட்டும் போதும், அவர்களின் கடவுளர்களை வாழ்த்தும் போதும் உம்முடைய (உள்ளம்) இதயத்தின் ஓட்டம் எவ்வாறிருந்தது? என்று கேட்டார்கள். அதற்கு, அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “யா ரஸுலல்லாஹ்! அப்போது என் இதயம் ஈமானால் இலங்கிக் கொண்டிருந்தது. என் உள்ளத்தில் ஈமான் முழுமையாக, நிரப்பமாக இருந்தது” என்று பதில் கூறினார்கள். அச்சமயம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அப்படியென்றால் அவர்கள் மீண்டும் உம்மை சிறைபிடித்தால்! முன்பு போல் கூறச் சொன்னால் தாராளமாகக் கூறுவீராக! என்று கூறினார்கள். அச்சமயம் கீழ் கானும் வசனங்கள் இறங்கியது.

 

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّ بِالْاِيْمَانِ

 

குர்ஆன் கூறுகிறது (ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அவன் அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன்மீது யாதொரு குற்றமுமில்லை.) (அல்குர்ஆன் : 16:106)

 

நூல் ஆதாரம் :- தப்ஸீர் இப்னு கஸீர், பைஹகி போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மாற்று மதத்தவர்களின் பண்டிகை பெருநாட்களை நாம் கொண்டாக்கூடாது. அது போல அவர்களின் பண்டிகை பெருநாட்களை விமர்சனங்கள் செய்யக்கூடாது. பிரச்சனை சன்டை சச்சரவு ஏற்படுத்தாமல் இருக்கும் நோக்கிலும், நல்லிணக்கம் என்ற நோக்கிலும் அவர்களின் பண்டிகை நாட்களில் வார்த்தை அளவில் வாழ்த்து கூறுவதில் எவ்வித குற்றமும் இல்லை என்ற கருத்தை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

♦️குறிப்பு :- நாம் கூறிய சட்டங்களை வஹ்ஹாபிஷ அமைப்புக்கள் மறுக்க முடியாது. ஷவூதி கட்டார் போன்ற வஹாபிஷ நாடுகளில் ஆங்கிலப் புத்தாண்டு அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. இது தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இலங்கை தப்லீக் உலமாக்கள் நல்லிணக்கம் என்ற பெயரில் மற்று மத சகோதரர்களுடன் அவர்களின் சமய நிகழ்வில் விளக்கு பிடித்ததை ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். மேலும் பீஜே போன்றவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடுகளில் மாற்று மதத்தவர்கள் வணங்கும் போது எப்படி கும்பிடுவார்களோ அதேபோல் பீஜேயும் கைகளை ஒட்டிய வண்ணம் வணக்கம் என்ற செயல் வடிவில் கும்பிட்டு காட்டியதையும் ஞாபகம் ஊட்டுகிறோம் மேலும் தவ்ஹீத் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பீஜேயின் மகள் சூனியக்காரி வேடம்போட்டு ஆட்பாட்டத்தில் கழந்து கொண்டதையும் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். ஆக உள்ளத்தால் உறுதியாக ஈமான் கொண்ட நிலையில் நல்லிணக்கம் என்ற நோக்கில் மாற்று மத நிகழ்வில் கழந்து கொள்வது குற்றமில்லை என்றால்! தெளிவுக்காக வேண்டி கும்பிடுவது வணக்கம் போடுவது சூனியக்காரி வேடம் போடுவதும் குற்றமில்லை என்றால்! சன்டை சச்சரவு பிரச்சினை வராமல் இருக்க நல்லிணக்கம் என்ற நோக்கில் வாத்தை அளவில் முஸ்லிம்கள் பண்டிகை வாழ்த்து கூறுவதில் எவ்வித குற்றமும் இல்லை.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.