மிஃராஜ் நோன்பும் மிஃராஜ் இரவும்
மிஃராஜ் நோன்பும் மிஃராஜ் இரவும்
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ رَضِىَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” فِي رَجَبٍ يَوْمٌ وَلَيْلَةٌ مَنْ صَامَ ذَلِكَ الْيَوْمَ ، وَقَامَ تِلْكَ اللَّيْلَةَ كَانَ كَمَنْ صَامَ مِنَ الدَّهْرِ مِائَةَ سَنَةٍ وَقَامَ مِائَةَ سَنَةٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள், நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும்.
அறிவிப்பவர் :- ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 96
ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவு எனக் கருதப்படுகிறது.
عَنْ حَضْرَتْ اَبِـيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَنِ النَّبِيّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ من صام يوم السابع والعشرين من رجب كتب له ثواب
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு (அல்லாஹ்) அதற்குறிய நற்கூலியை கொடுப்பான்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இஹ்யா 274
குறிப்பு :- ரஜப் மாதத்திலுள்ள 27ம் அன்று பகல் நேரங்களில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். அதன் இரவு நேரங்களில் அதிகளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு கொள்ளுங்கள். ஏனெனில் அந்த இரவில் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்கள். மேலும் அந்த இரவில் தான் தொழுகை பரிசாக வழங்கப்பட்டது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்