முஃமின்கள் கப்ரு வணங்கி கஃபா வணங்கி ஹஜருல் அஸ்வத் கல் வணங்கிகளா? தெளிவு

66

முஃமின்கள் கப்ரு வணங்கி கஃபா வணங்கி ஹஜருல் அஸ்வத் கல் வணங்கிகளா? தெளிவு

 

தவ்ஹீத் வஹாபிகளின் வாதம்.

 

காஃபிகள் சிலைகளை முத்தமிடுவது போன்று முஸ்லிம்களும் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை முத்தமிடுகிறார்கள். ஆக கப்ரை முத்தமிட்டாள் அதில் தலையை வைத்தால் கப்ரு வணங்கியாம்?

 

ஹிந்துக்களின் வாதம்.

 

நாங்கள் கோயிலுக்கு சென்று சிலைகளை சுற்றிவந்து அதனை கும்பிடுவது போன்று முஸ்லிம்களும் மக்காவிற்கு சென்று கஃபாவை சுற்றிவந்து அதனை முத்தமிடுகிறார்கள். ஆக கஃபாவை சுற்றிவந்து முத்தமிட்டாள் அதில் தலையை வைத்தால் கஃபா வணங்கியாம்?

 

கிருத்துவர்களின் வாதம்

 

நாங்கள் ஏசுநாதரை சிலை செய்து அதனை ஜபம் செய்து வருகிறோம். அவர் எங்களின் பாவங்களை தன்வசம் இழுத்துக் கொள்வார். அதே போன்று முஸ்லிம்களும் மக்காவிற்கு சென்று ஹஜருல் அஸ்வத் கல் பாவங்களை தன்வசம் இழுத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டுகிறார்கள். ஆக ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டாள். ஹஜருல் அஸ்வத் கல் வணங்கியாம்.

 

ஆக முஸ்லிம்கள் முஃமின்கள் அல்லாஹ் என்ற பெயரில் கல்லை தான் வணங்குகிறார்கள் என்று வஹாபிகளுளும் ஹிந்துக்களும் கிருஸ்தவர்களும் அவநம்பிக்கை கொள்கின்றனர். இஸ்லாத்தை பொருத்த வரை அழிந்து போகக்கூடிய ஏதாவது ஒரு பொருளை முத்தமிட்டாள் அது வணக்கம் ஆகாது. அது கல்லாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி குழைந்தைகலாக இருந்தாலும் சரி, பூக்களாக இருந்தாலும் சரி. அது அல்லாதவைகளாக இருந்தாலும் சரி அதனை தாராளமாக முத்தமிடலாம். இதில் சந்தேகம் ஏற்பட்டால். இந்த செயல் கூடுமா? அல்லது கூடாதா? என்ற கேள்வியை வாதமாக முன் வைக்கப்பட வேண்டுமே தவிர ஷிர்க் இணைவைப்பு என்ற கேள்வியை வாதமாக முன் வைக்கக் கூடாது. அப்படி முன் வைப்பவர்கள் குர்ஆன் ஹதீஸை ஒழுங்குமுறைப்படி படிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும்.

 

குறிப்பு :- இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ரு தர்ஹாக்களை முத்தமிட்டாள். கஃபாவை முத்தமிட்டாள். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டாள். அது அல்லாத கண்ணியமாக இடங்களை அல்லது ஒரு பொருளை முத்தமிட்டாள் அதில் எவ்வித குற்றமும் இல்லை. தாராளமாக அவைகளை முத்தமிடலாம். அது சுஜூதாக ஆகாது. அதனை வணங்கி வழிபட்டதாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டோர்கள் முஸ்லிம்களை தவறாக விமானங்கள் செய்த காரணத்தினால் முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக ஆகிவிட மாட்டோம் என்பதை நாம் ஆரம்பத்தில் ஞாபகம் ஊட்டிக் கொள்கிறோம். இதில் குர்ஆன் ஹதீஸிக்கு முறனாக நாம் கூறியிருந்தால் தாராளமாக குர்ஆன் ஹதீஸை முன் வைத்து தாராளமாக பேச முடியும். பேசுபவர்கள் ஆலிம்களாக இருந்தால் நன்றாக இருக்கும். கொள்கை வெறி வேண்டாம் நிதானமாக பேசுங்கள். இஸ்லாம் தெளிவான மார்க்கமாகும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.