முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்ற இறைவசனமும் அதன் விளக்கமும்
முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் என்ற இறைவசனமும் அதன் விளக்கமும்
📚 :- திருக்குர்ஆன் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஷைத்தான் தீன்டியுள்ளதாகவும் அந்த தீங்கிலிருந்து இறைவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாதுகாப்பதற்காக வேண்டி அருளப்பட்ட சூராக்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம். அதில் முடிச்சுகளில் ஊதும் (பெண்கள்) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்தது ஆண் என்பதாக இடம் பெற்றுள்ள காரணத்தால் திருக்குர்ஆனுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் முற்றிலும் முறன் என்பதாகக் கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதமும் அதற்குறிய விளக்கமும்.
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ
இறைவன் கூருகிறான் இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் (பெண்களின்) தீங்கை விட்டும்.
சூரா பலக் ஆயத் 4
(நஃப்ஃபாஸாத்) என்ற அறபு சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் இலக்கண அடிப்படையில் பெண்பாளாக இருந்தாலும். பொருள் அடிப்படையில் அது பொதுவாக சொல்லப்படுபவையாகும். எனவே இங்கு மனித இணத்தில் உள்ள அல்லது ஜின் இனத்தில் உள்ள ஆண் பெண் என இரு சாராரையும் பொதுவாகவே குறிக்கும். உதாரணமாக
وَالنّٰزِعٰتِ غَرْقًا ۙ
இறைவன் கூருகிறான் பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக.
சூரா அன்நாஸிஆத் ஆயத் 1
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۘ
இறைவன் கூறுகிறான் ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக.
சூரா அன்நஸிஆத் ஆயத் 5
فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ
இறைவன் கூருகிறான் (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)
சூரா அல்முர்ஸலாத் ஆயத் 5
மலக்குகள் பற்றி குறிப்பிடும் போது. நாஸியாத், முதாபிராத், முல்கியாத், என்ற அரபுச் சொல் பயன் படுத்தப்படுகிறது. இவையெல்லாம் பெண்பாளை குறிக்கும் சொற்களாகும். இதனைக் காரணமாக வைத்து மலக்குகளை பெண்கள் என்பதாகக் கூறமுடியுமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். மலக்குகளை பெண்கள் எனக்கூருவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறனாகும்.
وَجَعَلُوا الْمَلٰٓٮِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبَادُ الرَّحْمٰنِ اِنَاثًا اَشَهِدُوْا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْــٴَـــلُوْنَ
குர்ஆன் கூறுகிறது அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
சூரா ஜுக்ரூப் ஆயத் 19
மலக்குகளை பெண்கள் என்பதாகக் கூருவது முற்றிலும் தவரு என்பதை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது மலக்குமார்களை பெண்பாலில் பொதுப்படையாக கூரப்பட்ட காரணத்தால் அவர்களை பெண்கள் எனக்கூருவது முற்றிலும் தவறாகும். அதே போண்று தான் முடிச்சுகளில் ஊதும் (பெண்கள்) என்று பெண்பாலில் மொழியாக்கம் செய்தாலும் அவைகள் பொதுப்படையாக கூறப்பட்டவையாகும். மேலும் அரபு மொழியில் இலக்கண ரீதியில் பாலின வேறுபாட்டுடன் குறிப்பிடுவது பயன்பாட்டில் உள்ளது. அரபு படித்தவர்கள் அனைவரும் தெளிவான முறையில் இதனை புரிந்து கொள்வார்கள். உதாரணமாக
( கர்ப்பிணி حامل )
கற்பினி பெண்ணை குறிக்க (حامل) ஹாமில் என்ற அரபுச் சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஹாமில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.
( மாதவிடாய் حائض )
மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை குறிக்க (حائض) ஹாயில் என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஹாயில் என்பது இலக்கணப்படி ஆண்பாலாகும்.
கர்பினி பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களையும் ஆண்பாலில் கூறப்பட்ட காரணத்தால் இவர்கள் அனைவரும் பெண்கள் அல்ல அதற்கு மாற்றமாக ஆண்கள் என்பதாகக் கூறமுடியுமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள. எனவே முடிச்சுகளில் ஊதும் (பெண்கள்) என்று மொழியாக்கம் செய்தாலும். அது மனித ஜின் இனத்தில் உள்ள ஆண், பெண் என இரு சாராரையும் பொதுவாகக் குறிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
♦️குறிப்பு :- மேற்கூறிய இறைவசனம் சூனியம் செய்த மனிதனை குறித்து பேசவில்லை. ஒரு வேளை சூனியம் செய்த மனிதனை குறித்து பேசி இருந்தாலும் சூனியம் பற்றி இடம் பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முறன் கிடையாது. ஏனெனில் அது பொதுவாக கூறப்பட்டவையாகும். மேலும் முடிச்சுக்களிள் ஊதும் (பெண்களின்) தீங்கு என்பதாக கூறியதன் அர்த்தம். சூனியம் எதை கொண்டு வைக்கப்பட்டதோ அத்தகையே ஜின் இனத்திலுள்ள ஆண் பெண் என இரு சாராரையும் பொதுப்படையாக குறிக்கும். இன்னும் தெளிவான முறையில் கூறப்போனால் ஷைத்தானுடைய தீங்கை பொதுவாகக் குறிக்கும். இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்ததாக இடம் பெற்றுள்ள எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மேற்கூறிய இறைவசங்கள் எந்த விதத்திலும் எக்காலத்திலும் முறன்படாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்