முஹம்மத் ﷺ அவர்களின் பாரம்பரிய தூய வம்சத்தின் சிறப்புக்கள்

78

முஹம்மத் ﷺ அவர்களின் பாரம்பரிய தூய வம்சத்தின் சிறப்புக்கள்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : بُعِثْتُ مِنْ خَيْرِ قُرُونِ بَنِي آدَمَ قَرْنًا فَقَرْنًا حَتَّى كُنْتُ مِنَ القَرْنِ الَّذِي كُنْتُ فِيهِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாகவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டேன்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3557 அஹ்மது 8857

 

عَنْ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللهَ اصْطَفَى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنِي هَاشِمٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இறைவன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா”வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா”வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.

 

அறிவிப்பவர் :- வாஸிலா பின் அல்அஸ்கஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2276 திர்மிதி 3606

 

عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي مِنْ خَيْرِهِمْ مِنْ خَيْرِ فِرَقِهِمْ وَخَيْرِ الْفَرِيقَيْنِ ثُمَّ تَخَيَّرَ الْقَبَائِلَ فَجَعَلَنِي مِنْ خَيْرِ قَبِيلَةٍ ثُمَّ تَخَيَّرَ الْبُيُوتَ فَجَعَلَنِي مِنْ خَيْرِ بُيُوتِهِمْ فَأَنَا خَيْرُهُمْ نَفْسًا وَخَيْرُهُمْ بَيْتًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் படைப்பினங்களை படைத்த போது அதில் என்னையே சிறந்த படைப்பாகவும் (அந்த படைப்பில்) வமிசாவழியினரை அமைக்கையில் என்னையே சிறந்தவராகவும், அந்த வமிசாவழியில் ஆத்மாக்களை உருவாக்கையில் என்னையே சிறந்த ஆத்மாவாகவும், அந்த ஆத்மாக்களில் குடும்பத்தினரை ஏற்படுத்தும் போது அதில் என்னையே சிறந்த குடும்பமாகவும் ஆக்கினான்.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3607

 

عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَلَغَهُ بَعْضُ مَا يَقُولُ النَّاسُ فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ تَعَالَى وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ مَنْ أَنَا؟ قَالُوا أَنْتَ رَسُولُ اللَّهِ قَالَ أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ، فَجَعَلَنِي فِي خَيْرِ خَلْقِهِ وَجَعَلَهُمْ فِرْقَتَيْنِ فَجَعَلَنِي فِي خَيْرِ فِرْقَةٍ وَجَعَلَهُمْ قَبَائِلَ فَجَعَلَنِي فِي خَيْرِ قَبِيلَةٍ، وَجَعَلَهُمْ بُيُوتًا فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ بَيْتًا فَأَنَا خَيْرُكُمْ بَيْتًا وَخَيْرُكُمْ نَفْسًا

 

ஒரு முறை மக்கள் பேசிகொண்ட சில விஷயங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டின. அப்பொழுது அவர்கள் உடனே மிம்பரில் ஏறினார்கள். மக்களிடம், “நான் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தாங்கள் அல்லாஹ்வின் இறைத்தூதர் என பதிலளித்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவேன். நிச்சயமாக அல்லாஹ் படைப்புகளைப் படைத்தான். என்னை அப்படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆக்கினான். அந்த மக்களை அல்லாஹ் இரண்டு பிரிவினர்களாக ஆக்கினான். அதில் சிறந்த பிரிவினரில் நின்றும் என்னை ஆக்கினான். அம்மக்களை பல கோத்திரங்களாக அல்லாஹ் ஆக்கினான். அவற்றில் சிறந்த கோத்திரத்தில் நின்றும் அல்லாஹ் என்னை ஆக்கினான். அவர்களை அல்லாஹ் பல வீடுகளாக (குடும்பத்தார்களாக) ஆக்கினான். அவற்றில் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் உங்களில் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். நான் உங்களில் சிறந்தவனாக இருக்கிறேன்.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 1788, 17517 பைஹகி” தலாயிலுன் நுப்வா 94

 

ﻋَﻦْ ﺃَﻧَﺲِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ﻗَﺎﻝَ ﻭَﺧَﻄَﺐَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﻨَّﺎﺱَ ﻓَﻘَﺎﻝَ ﺃَﻧَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟْﻤُﻄَّﻠِﺐِ ﺑْﻦِ ﻫَﺎﺷِﻢِ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﻣَﻨَﺎﻑِ ﺑْﻦِ ﻗُﺼَﻲِّ ﺑْﻦِ ﻛِﻼﺏِ ﺑْﻦِ ﻣُﺮَّﺓَ ﺑْﻦِ ﻛَﻌْﺐِ ﺑْﻦِ ﻟُﺆَﻱِّ ﺑْﻦِ ﻏَﺎﻟِﺐِ ﺑْﻦِ ﻓِﻬْﺮِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚِ ﺑْﻦِ ﺍﻟﻨَّﻀْﺮِ ﺑْﻦِ ﻛِﻨَﺎﻧَﺔِ ﺑْﻦِ ﺧُﺰَﻳْﻤَﺔَ ﺑْﻦِ ﻣُﺪْﺭِﻛَﺔَ ﺑْﻦِ ﺇِﻟْﻴَﺎﺱِ ﺑْﻦِ ﻣُﻀَﺮَ ﺑْﻦِ ﻧِﺰَﺍﺭٍ ﻭَﻣَﺎ ﺍﻓْﺘَﺮَﻕَ ﺍﻟﻨَّﺎﺱُ ﻓِﺮْﻗَﺘَﻴْﻦِ ﺇِﻻ ﺟَﻌَﻠَﻨِﻲ ﺍﻟﻠَّﻪُ ﻓِﻲ ﺍﻟْﺨَﻴْﺮِ ﻣِﻨْﻬُﻤَﺎ ﺣَﺘَّﻰ ﺧَﺮَﺟْﺖُ ﻣِﻦْ ﻧِﻜَﺎﺡٍ ﻭَﻟَﻢْ ﺃَﺧْﺮُﺝْ ﻣِﻦْ ﺳِﻔَﺎﺡٍ ﻣِﻦْ ﻟَﺪُﻥْ ﺁﺩَﻡَ ﺣَﺘَّﻰ ﺍﻧْﺘَﻬَﻴْﺖُ ﺇِﻟَﻰ ﺃَﺑِﻲ ﻭَﺃُﻣِّﻲ ﻭَﺃَﻧَﺎ ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻧَﺴَﺒًﺎ

 

ஒரு முறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அதில் கூறினார்கள் நான் அப்துல்லாஹ்வின் மகன் ஆவேன். அவர் அப்துல் முத்தலிபின் மகனாவார். அவர் ஹாஷிமின் மகனாவார். அவர் அப்து மனாஃபின் மகன் ஆவார். அவர் குஸய்யின் மகன் ஆவார். அவர் கிலாபின் மகன் ஆவார். அவர் முர்ராவின் மகன் ஆவார். அவர் கஅபின் மகன் ஆவார். அவர் லுஅய்யின் மகன் ஆவார். அவர் காலிபின் மகன் ஆவார். அவர் ஃபிஹ்ரின் மகன் ஆவார். அவர் மாலிகின் மகன் ஆவார். அவர் நள்ரின் மகன் ஆவார். அவர் கினானாவின் மகன் ஆவார். அவர் குஷைமாவின் மகன் ஆவார். அவர் முத்ரிகாவின் மகன் ஆவார். அவர் இல்யாஸின் மகன் ஆவார். அவர் முளரின் மகன் ஆவார். அவர் நிஸாரின் மகன் ஆவார். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால், அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என் பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் நிக்காஹ் மூலம் வெளியானேன். விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களின் வமிசத்தில் சிறந்தவனாக இருக்கிறேன்.

 

அறிவிப்பவர் :- அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஹாகிம் 360 பைஹகி” தலாயிலுன் நுப்வா 582

 

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ قَلَّبْتُ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَلَمْ أَجِدْ رَجُلًا أَفْضَلَ مِنْ مُحَمَّدٍ وَقَلَّبْتُ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا فَلَمْ أَجِدْ بَيْتًا أَفْضَلَ مِنْ بَنِي هَاشِمٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் (ஒரு விடயத்தை) தெரிவித்தார்கள், நான் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி மண்ணுலகம் (முழுவதும்) திரும்பிப் பார்த்தேன். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட சிறந்த மனிதரை நான் பெற்றுக் கொள்ளவில்லை. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி மண்ணுலகம் (முழுவதும்) திரும்பிப் பார்த்தேன். பனூ ஹாஷிம் குடும்பத்தை விட வேறு சிறந்த குடும்பத்தினரை நான் பார்க்கவில்லை என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் தப்ரானி” அவ்சத் 258 இப்னு கஸீர்” பிதாயா வன் நிஹாயா 3/367

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَسَمَ الْخَلْقَ قِسْمَيْنِ فَجَعَلَنِي فِي خَيْرِهِمَا قِسْمًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்களை இருபிரிவினராக பிரிகின்ற போது அவற்றில் சிறந்த பிரிவில் என்னை இறைவன் அமைத்தான்.

 

அறிவிப்பவர் :- அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” தலாயிலுன் நுபுவ்வா 1/112

 

குறிப்பு :- சிறப்புக்குரிய பாரம்பரிய பரம்பரை” வம்சா வழியிலேயே இறைவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளான். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சத் தொடர் ஆரம்ப மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலைமுறை வரை வந்த ஓர் பிரிவினர் சிறப்பானவர்களாகவே இருந்தனர் என்பதை மேற்கூறிய திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.