முஹம்மத் ﷺ அவர்கள் ஒளிமிக்கவர்கள். நூரே முஹம்மதிய்யா பற்றிய ஆய்வுத் தொகுப்பு
முஹம்மத் ﷺ அவர்கள் ஒளிமிக்கவர்கள். நூரே முஹம்மதிய்யா பற்றிய ஆய்வுத் தொகுப்பு
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️)
قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து பேரொளி (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க)ளும் தெளிவுமுள்ள (திர்குர்ஆன்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
சூரா மாயிதா ஆயத் 15
قد جاءكم من الله نورٌ : هو النبي صلى الله عليه وسلم . تفسير الجلالين “” قد جاءكم من الله نورٌ : يعني بالنور ، محمدا صلى الله عليه وسلم. تفسير الطبري “” : “” ثم أخبر تعالى عن القرآن العظيم الذي أنزله على نبيه الكريم فقال “قد جاءكم من اللّه نور وكتاب مبين. تفسير ابن كثير “” قد جاءكم من الله نور : أي ضياء؛ قيل : الإسلام. وقيل : محمد عليه السلام. تفسير القرطبي “” قد جاءكم من الله نور : ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﻨﻮﺭ : ﺍﻟﻨﺒﻲ ﻣﺤﻤﺪﺍً ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ. ﺯﺍﺩ ﺍﻟﻤﺴﻴﺮ ﻓﻲ ﻋﻠﻢ ﺍﻟﺘﻔﺴﻴﺮ ” تفسير احكام القران “” قد جاءكم من الله نور : ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﻨﻮﺭ : ﺍﻟﻨﺒﻲ ﻣﺤﻤﺪﺍً ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ. تفسير الرازي ” البحر المديد في تفسير القرآن المجيد “” قد جاءكم من الله نور : عظيم وهو نور الأنوار والنبي المختار صلى الله عليه وسلم. روح المعاني في تفسير القرآن العظيم “” قد جاءكم من الله نور : هو رسول الله صلى الله عليه وسلم. تفسير روح البيان
மேற்கூறிய இறைவசனத்தில் (من الله نور) அல்லாஹ்விடமிருந்து பேரொளி வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது (ﻳﻌﻨﻲ ﺑﺎﻟﻨﻮﺭ : ﺍﻟﻨﺒﻲ ﻣﺤﻤﺪﺍً ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ وسلم ) அல்லாஹ்வின் பேரொளி என்பதன் அர்த்தம் இருதிதூதரின் வருகை அதாவது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிக்கும்.
ஆதாரம் :- தப்ஸீர் ஜலாலைன்” தப்ஸீர் தபரி” தப்ஸீர் இப்னு கஸீர்” தப்ஸீர் குர்துபி” தப்ஸீர் ஸாதுல் மஸீர் அல் இல்முத் தப்ஸீர்” தப்ஸீர் அஹ்காம் அல் குர்ஆன்” தப்ஸீர் ராஸீ” தப்ஸீர் அல் குர்ஆன் அல் மஜீத்” தப்ஸீர் அல் குர்ஆனுல் அலீம்” தப்ஸீர் ரூஹுல் பயான் போன்ற அதிகமான தப்ஸீர் திர்குர்ஆன் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُوْرٌ عَلٰى نُوْرٍ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ், வானங்கள் பூமி (ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கும்) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக்கொண்டு) இருக்கின்றது. (அதில்) பாக்கியம் பெற்ற “ஜைத்தூன்” மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகின்றது. அது கீழ்நாட்டிலுள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெய் நெருப்புத் தொடாவிடினும் பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடிய வர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகின்றான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன்னுடைய தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் மிக்க அறிந்தவன்.
சூரா நூர் ஆயத் 35
مثل نوره كمشكاة فيها مصباح : ﻫﺬﺍ ﻣﺜﻞ ﺿﺮﺑﻪ ﺍﻟﻠﻪ ﻟﻨﺒﻴﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﺎﻟﻤﺸﻜﺎﺓ ﺻﺪﺭﻩ، ﻭﺍﻟﺰﺟﺎﺟﺔ ﻗﻠﺒﻪ، ﻭﺍﻟﻤﺼﺒﺎﺡ ﻓﻴﻪ ﺍﻟﻨﺒﻮﺓ. تفسير الطبري “” قال ابن الأنباري ” مثل نوره كمشكاة فيها مصباح : على معنى نور محمد صلى الله عليه وسلم “” فقال ابن جبير “مثل نوره : محمد صلى الله عليه وسلم. تفسير القرطبي “” مثل نوره : نور محمد صلى الله عليه وسلم. تفسير القرآن العظيم”” مثل نوره : محمد صلى الله عليه وسلم. الدر المنثور في التفسير بالمأثور
மேற்கூறிய இறைவசனத்தில் இறைவன் அவனுடைய ’ஒளியை மாடத்திற்கு ஒப்பாக்கி அல்லாஹ் கூறியுள்ளான். இந்த ஆயத்தில் (مثل نوره) அவனுடைய ஒளிக்கு உதாரணம் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலுள்ள (نوره) அவனுடைய ஒளி என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறிக்கும். காரணம் இறைவன் (உதாரணம்) ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவனாகும்.
ஆதாரம் தப்ஸீர் தபரி” தப்ஸீர் குர்துபி” தப்ஸீர் அல் குர்ஆன் அல் அலீம்” அத்துர்ருல் மன்சூர் போன்ற அதிகமான தப்ஸீர் திர்குர்ஆன் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
குர்ஆன் கூறுகிறது நபியே! நிச்சயமாக நாம் உங்களை (மனிதர்களுக்குச்) சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் அல்லாஹ்வினுடைய உத்தரவுப்படி (மக்களை நீங்கள்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்கள்)
சூரா அஹ்ஜாப் ஆயத் 45, 46
மேற்கூறிய இறைவசனம் போன்று இன்னும் சில ஆயத்துக்கள் இடம் பெற்றுள்ளன அவை பின்வருமாறு :-
جعل فيها سراجا و وقمرا منيرا
الفرقان : 61
(சூரியனை) ஒளியாகவும், சந்திரனைப் பிரகாசம் தரக்கூடியதாகவும் அமைத்தான். மேலும்
وجعل الشمس سراجا
نور : 16
சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான். மேலும்
وجعلنا سراجا وهاجا
النبأ : 13
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் (ஒளி) தீபமாக அமைத்தோம்.
இதே போன்று தான் மேற்கூறப்பட்ட இறைவசனத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி கூரும் போது (وسراجا منيرا) பிரகாசிக்கும் ஓர் விளக்கு அதாவது ஒளி சிந்தும் ஓர் விளக்காக (நபியே! நீங்கள் இருக்கின்றீர்கள்) என்பதாகக் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
குர்ஆன் கூறுகிறது (அன்றி) அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவைகள் அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின்பால் செலுத்துகின்றன. அன்றி அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
சூரா பகரா ஆயத் 257
قال بن حيان : الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور” يعني : أهل الكتاب ، كانوا آمنوا بمحمد صلى الله عليه وسلم “” يخرجونهم من النور” يعني من إيمانهم بمحمد صلى الله عليه وسلم . تفسير القرآن العظيم
மேற்கூறிய இறைவசனத்தில் இறைவன் இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இருளிலிருந்து வெளியேற்றுகிறான்) என்பதன் அர்த்தம் வேதத்துடையோர் வழிகேட்டில் இருந்தார்கள் அதனை இறைவன் இருளிலிருந்தார்கள் என்பதாகக் கூறியுள்ளான். மேலும் (அந்த இருளை நீக்கி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான்) என்பதன் அர்த்தம் வழிகேட்டிலிருந்த வேதத்துடையோர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டார்கள். அதனை இறைவன் (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் ஒளியின் பக்கம் அவர்களை செலுதாதுன்கிறான் என்பதாகக் கூறியுள்ளான்.
குறிப்பு :- (ظلم) இருள் என்பது வழிகேட்டை குறிக்கும் (نور) ஒளி என்பது இஸ்லாம் அதாவது இஸ்லாத்தை ஏற்பதற்கு முக்கிய காரணக்கர்தராக இருந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறிக்கும் என்பதை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.
ஆதாரம் :- தப்ஸீர் அல் குர்ஆனுல் அலீம் போன்ற தப்ஸீர் திர்குர்ஆன் விரிவுரை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
குர்ஆன் கூறுகிறது இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைபடுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை.
சூரா தவ்பா ஆயத் 32
يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ
குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந்த நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்.
சூரா ஸஃப்பு ஆயத் 8
نور الله” محمد صلى الله عليه وسلم. والمراد بنور الله : نبوة النبى صلى الله عليه وسلم. التفسير الوسيط للقرآن الكريم”” ويأبى الله إلا أن يتم نوره” أي : يعني دينه ويظهر كلمته ويتم الحق الذي بعث به محمدا صلى الله عليه وسلم” ولو كره الكافرون. تفسير البغوى
மேற்கூறிய இரு இறைவசனங்களிளும் இடம் பெற்றுள்ள (نور الله) அல்லாஹ்வின் ஒளி என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். அவர்களுடைய நபித்துவம் மக்கள் மத்தியில் பிரகடனப்படுத்தப்பட்டதை குறிக்கும். காஃபிர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழித்து விட முடிவு செய்தனர். ஆனால் இறைவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து ஏகத்துவ பணிகளையும் எந்தவித தடையின்றி முழுமையாக பூர்த்தியாக்கினான்.
ஆதாரம் :- தப்ஸீர் அல்வஸீத், தப்ஸீர் பகவி போன்ற தப்ஸீர் திர்குர்ஆன் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ : سُئِلَ البَرَاءُ رَضِيَ اللَّهُ عَنْهُ ,أَكَانَ وَجْهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، مِثْلَ السَّيْفِ ؟ قَالَ : لاَ بَلْ مِثْلَ القَمَرِ
பராஉ இப்னு ஆஸிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகம் (பிரகாசத்தில்) வாளைப் போன்று இருந்ததா என்று?’ கேற்க அதற்கு அவர்கள் ‘இல்லை, ஆனால் சந்திரனைப் போல (ஒளி பிரகாசமாக) இருந்தது’ என்றார்கள்.
அறிவிப்பவர் :- அபூ இஸ்ஹாக் ஸபீஈ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் புஹாரி 3552 முஸ்லிம் 2344 திர்மிதி 3636 தாரமீ 65 அஹ்மது 18478, 20998
عَنْ كَعْبَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سُرَّ اسْتَنَارَ وَجْهُهُ حَتَّى كَأَنَّهُ قِطْعَةُ قَمَرٍ وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ مِنْهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு சந்தோசம் மேலிட்டால், அவர்களின் அழகு திருமுகம் சந்திரனின் ஒரு துண்டு போல் (ஒளி பிரகாசமாக) இலங்கிகொண்டிருக்கும். இதனை நாங்கள் (மிக தெளிவாகவே) அறிந்துக்கொள்வோம்.
அறிவிப்பவர் :- கஹ்பு இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3556, 4418 முஸ்லிம் 2769 அஹ்மது 15789, 27176 மிஷ்காத் 5798
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى الْقَمَرِ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ، فَإِذَا هُوَ عِنْدِي أَحْسَنُ مِنَ الْقَمَرِ
சந்திரன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்க கண்டேன், அச்சமயம் அவர்களையும் பார்த்தேன். சந்திரனையும் பார்த்தேன். அவர்கள் தான் சந்திரனை விட எனக்கு அழகாக (ஒளி பிரகாசமாக) தோன்றினார்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் இப்னு சமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2811 தாரமீ 58
ஆரம்ப ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்திரனை போன்று ஒளி பிரகாசமானவர்களாக இருந்தார்கள் என்றும் அடுத்த ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்திரனின் ஒரு துண்டு போல் ஒளி பிரகாசமாக இலங்கக்கூடியவர்கள் என்றும் அதற்கடுத்த ஹதீஸில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்திரனை விட அழகாகவும் ஒளி பிரகாசமாகவும் இருந்தார்கள் என்ற கருத்துக்களை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட மிக அழகான எந்த ஓர் வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் (ஒளி பிரகாசம்) ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3648 அஹ்மது 8604, 8943 மிஷ்காத் 5795
عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ، قَالَ لِلرَّبِيعِ بِنْتِ مُعَوِّذٍ : صِفِي لِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لَوْ رَأَيْتَهُ لَقُلْتَ الشَّمْسُ طَالِعَةٌ
நான் ரபய்யிஃ ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘அருமை மகனே! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை நீ பார்த்தாயானால், சூரியன் உதிப்பதாகவே காண்பாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ உபைதா இப்னு முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 60 மிஷ்காத் 5793
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியனை போன்று ஒளி பிரகாசமானவர்களாக இருந்தார்கள் என்ற கருத்துக்களை மேற்கூறிய இருவிதமான ஹதீஸ்களும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول أَفْلَجَ الثَّنِيَّتَيْنِ إِذَا تَكَلَّمَ رُئِيَ كَالنُّورِ يَخْرُجُ مِنْ بَيْنِ ثَنَايَاهُ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பற்கள் இடைவெளிவிட்டதாகவும் அவர்கள் பேசினால் அப்பற்களுக்கு இடையிலிருந்து ஓர் ஒளி வெளிப்படுவது போன்றிருக்கும்.
அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரமீ 2742
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்பற்கள், இடைவெளி விட்டதாகவும் அவர்கள் பேசினால் அப்பற்களுக்கு இடையிலிருந்து ஓர் ஒளி பிரகாசம் வெளிப்படும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
وَقَالَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَتْنِي أُمِّي أَنَّهَا شَهِدَتْ وِلَادَةَ آمِنَةَ بِنْتِ وَهْبٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا شَيْءٌ أَنْ أَنْظُرَ إِلَيْهِ مِنَ الْبَيْتِ إِلَّا نُورٌ، وَإِنِّي لَأَنْظُرُ إِلَى النُّجُومِ تَدْنُو حَتَّى إِنِّي لَأَقُولُ لَتَقَعَنَّ عَلَيَّ
அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெறும் வேளை, அன்றைய இரவு ஓர் காட்சியைக் கண்டேன். வானத்து நட்சத்திரங்கள் என் மேல் விழுந்து விடும் என்று நான் நினைக்கும் அளவுக்குக் கீழே இறங்கக் கண்டேன். பிள்ளை பெற்றதும் என்னை நோக்கி வந்த ஒளியினால் நாங்கள் இருந்த வீடு பிரகாசித்தது.
அறிவிப்பவர் :- எனது தாயார் எனக்கு அறிவித்ததாக உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி” ஷுஃபுல் ஈமானில் 1285 தப்ரானி” அல்முஃஜமுல் கபீர் 629
عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَالُوا لَهُ أَخْبِرْنَا عَنْ نَفْسِكَ. قَالَ نَعَمْ أَنَا دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ وَبُشْرَى عِيسَى عَلَيْهِمَا السَّلَامُ، وَرَأَتْ أُمِّي حِينَ حَمَلَتْ بِي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُورٌ أَضَاءَتْ لَهُ قُصُورُ الشَّامِ. أَنَا دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ وَبُشْرَى عِيسَى عَلَيْهِمَا السَّلَامُ، وَرَأَتْ أُمِّي حِينَ حَمَلَتْ بِي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُورٌ أَضَاءَتْ لَهُ قُصُورُ الشَّامِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யா ரஸுலல்லாஹ்! உங்களைப் பற்றி எங்களிடம் தெரிவியுங்கள் என்று (ஸஹாபாக்கள்) கேட்ட போது, நான் எனது தந்தை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை ஆவேன். மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நற்செய்தியாவேன். மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது தாயார் (நான் பிறக்கும் போது என்) ஒளி தோன்றக் கண்டார்கள். அந்த ஒளியின் வெளிச்சத்தில் சிரியாவின் கோட்டைகள் பிரகாசத்தால் ஒளி வீசியது என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் :- காலித் இப்னு மஃதான் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் ஹாகிம்” முஸ்தத்ரக் 2/600 தப்ஸீர் தபரி 1/566
عَنْ عِرْبَاض بْن سَارِيَة رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْت رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُول إِنِّي عَبْد اللَّه وَخَاتَم النَّبِيِّينَ وَإِنَّ آدَم لَمُنْجَدِلٌ فِي طِينَته وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ إِنِّي دَعْوَة أَبِي إِبْرَاهِيم وَبِشَارَة عِيسَى بِي وَرُؤْيَا أُمِّي الَّتِي رَأَتْ وَكَذَلِكَ أُمَّهَات النَّبِيِّينَ يَرَيْنَ وَإِنَّ أُمّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَأَتْ حِين وَضَعَتْهُ نُورًا أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான். மேலும் நபிமார்களின் முத்திரையாவேன். (அப்போது) நிச்சயமாக ஆதம் தனது களி மண்ணுக்கிடையில் இருந்தார். இதைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நற்செய்தியும், என் தாய் கண்ட காட்சியும் ஆவேன். அவ்வாறு தான் நபிமார்களின் அன்னையர் காண்பார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரை அவர்கள் பெற்ற போது ஓர் ஒளி அவர்களுக்குப் பிரகாசித்தது அதில் சிரியாவின் கோட்டைகள் தெரிந்தன.
அறிவிப்பவர் :- இர்பாள் இப்னு சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 17163
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த அச்சமயம் ஓர் ஒளி வெளிப்பட்டதாகவும் அந்த ஒளியின் பிரகாசத்தால் அவ்வீடும் சிரியாவில் உள்ள கோட்டைகளும் ஜொலித்தது என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் இவ்வையகத்திற்கு பெரொளியாகவும் ஒளி சிந்தும் விளக்கமாகவும் சூரிய சந்திரனை போன்று ஒளி பிரகாசம் உடையவர்களாகவும் அனுப்பி வைத்துள்ளான். எனவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளித்தோற்றத்தில் மனித உடல் அமைப்பில் இருந்தாலும் எதார்த்தத்தில் அவர்கள் நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்