முஹம்மத் ﷺ அவர்கள் ஒளி கிடையாது என்பதாகக் கூறும் வாதமும் அதற்குறிய தெளிவும்

342

முஹம்மத் ﷺ அவர்கள் ஒளி கிடையாது என்பதாகக் கூறும் வாதமும் அதற்குறிய தெளிவும்

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்மையில் ஒளியாக இருந்திருந்தால் என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக என்றெல்லாம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆக்களை கேட்டிருப்பார்களா? என்ற கேள்வியை வாதங்களாக முன் வைக்கின்றனர்.

 

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا، وَفِي بَصَرِي نُورًا، وَفِي سَمْعِي نُورًا، وَعَنْ يَمِينِي نُورًا، وَعَنْ يَسَارِي نُورًا، وَفَوْقِي نُورًا، وَتَحْتِي نُورًا، وَأَمَامِي نُورًا، وَخَلْفِي نُورًا، وَعَظِّمْ لِي نُورًا

 

யா அல்லாஹ்! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக என்று (இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்கக்கூடியவர்களாக) இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். முஸ்லிம் 6316 ஆதாரம் முஸ்லிம் 763, 763 763, அபூ தாவூத் 1353 நஸாயி 1121 அஹ்மது 2567, 3194, 3301, 3541

 

عَنْ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏‏ وَاللَّهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.

 

அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6307, அஹ்மது 7793, 8493

 

இருவிதமான ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப ஹதீஸில் என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக என்றெல்லாம் இறைத்தூதர் அவர்கள் துஆ கேட்டுள்ளார்கள் மற்ற ஹதீஸில் ஒரு நாளைக்கு 70 தடவைக்கு மேல் பாவமன்னிப்பு துஆக் கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

 

என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக என்றெல்லாம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ கேட்டதைக் காரணமாக வைத்து அவர்கள் பேரொளி கிடையாது என்று முடிவு செய்யலாமா? மேலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாளைக்கு 70 தடவைக்கு மேல் பாவமன்னிப்பு துஆக் கேட்கக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் இதனைக் காரணமாக வைத்து அவர்கள் அதிகம் அதிகமாக பாவம் செய்துள்ளார்கள் அதனால் தான் பாவமன்னிப்பு தேடுகிறார்கள் என்று முடிவு செய்யலாமா? என்பதை கீழ் கானும் இறைவசனங்களை மூலமாக வைத்து சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ‏

 

குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து பேரொளி (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க)ளும் தெளிவுமுள்ள (திர்குர்ஆன்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

சூரா மாயிதா ஆயத் 15

 

لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏

 

குர்ஆன் கூறுகிறது (நபியே) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் (பாவங்கள்) அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்.

சூரா பத்ஹ் ஆயத் 2

 

ஆரம்ப வசனத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரொளி என்பதாகவும் மற்ற வசனத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் பின் பாவம் மன்னிக்கப்பட்டவர்கள் என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக என்று துஆ கேட்டதைக் காரணமாக வைத்து அவர்கள் பேரொளி கிடையாது என்று முடிவு செய்வது திர்குர்ஆனுக்கு முற்றிலும் முறனாகும். அதே போன்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாளைக்கு 70 தடவைக்கு மேல் பாவமன்னிப்பு துஆக் கேட்டதைக் காரணமாக வைத்து அவர்கள் அதிகம் அதிகமாக பாவம் செய்துள்ளார்கள் அதனால் தான் அவர்கள் பாவமன்னிப்பு தேடுகிறார்கள் என்று முடிவு செய்வதும் திர்குர்ஆனுக்கு முற்றிலும் முறன் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

குறிப்பு :- முன் பின் பாவம் மன்னிக்கப்பட்ட இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று மீண்டும் மீண்டும் துஆ கேட்பதை போன்று தான். நூரே முஹம்மதிய்யா எனும் மாபெரும் பேரொளியாக திகழும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக என்றெல்லாம் மீண்டும் மீண்டும் துஆ கேட்டுள்ளார்கள். இதில் எவ்வித குற்றமும் இல்லை. இவ்வாறு துஆ கேட்பதெல்லாம் அவர்களின் நடைமுறையில் உள்ளது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.