லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது என்றால் அதை விடவும் சிறந்தது எது?
லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது என்றால் அதை விடவும் சிறந்தது எது?
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
குர்ஆன் கூறுகிறது நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.
சூரா கத்ர் ஆயத் 1
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
குர்ஆன் கூறுகிறது கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
சூரா கத்ர் ஆயத் 2
இறைவன் இறைவேதம் திருக்குர்ஆனை இறக்கி வைத்து லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது என்றால்! அந்த திருக்குர்ஆன் இறங்கிய அந்த இடத்திற்கு எந்த அளவு சிறப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِيْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰى قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَّبُشْرٰى لِلْمُؤْمِنِيْنَ
குர்ஆன் கூறுகிறது (உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி என (நபியே! நீங்கள் யூதர்களை)க் கேளுங்கள். நிச்சயமாக அவர் இதனை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உங்களது உள்ளத்தில் (குர்ஆனை) இறக்கிவைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.
சூரா பகரா ஆயத் 97
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْـقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛ كَذٰلِكَ ۛ لِنُثَبِّتَ بِهٖ فُـؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِيْلًا
குர்ஆன் கூறுகிறது (நபியே) இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
சூரா அல் புர்கான் ஆயத் 32
இறைவேதம் திருக்குர்ஆனை படிப்படியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் இறைவன் இறக்கி வைத்துள்ளான் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
குறிப்பு :- மேற்கூறிய இறைவசனங்களை கூர்ந்து கவனிக்கும் போது இறைவன் இறைவேதம் திருக்குர்ஆனை இறக்கி வைத்த லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்றால்! அதை விடவும் சிந்தித்து இறைவேதம் திருக்குர்ஆன் இறங்கிய இடமாகும். அந்த இடம் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த உள்ளம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்