லைலதுல் கத்ர் 27ம் இரவு பற்றிய தெளிவு

109

லைலதுல் கத்ர் 27ம் இரவு பற்றிய தெளிவு

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ﴿٤
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ ﴿٥

 

عن ابن عباس رضي الله عنهما أنه قال (ليلة القدر) تسعة أحرف، وهو مذكور ثلاث مرات فتكون السابعة والعشرين

 

லைலதுல் கத்ரைப் பற்றி கூறப்பட்டுள்ள இன்னா அன்ஜல்னா சூராவில் லைலதுல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவைகள் கூறப்பட்டுள்ளன. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்தி ஏழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தி ஏழாம் இரவுதான் லைலதுல் கத்ர் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்று ஆதாரமாக அமைந்துள்ளது.

 

ஆதாரம் :- தப்ஸீர் அர்ராஸி 32

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخر

 

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்! என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2015

 

லைலத்துல் கத்ர் இரவு, ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்க வேண்டும். குறிப்பாக ரமளானின் கடைசி 7 நாள்கள் அதாவது 27 என்று மட்டுப்படுத்தி கூறப்படுவதை மேற்கூறப்பட்ட ஹதீஸில் நம்மால் காணமுடிகிறது.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَأَى رَجُلٌ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَى رُؤْيَاكُمْ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ

 

ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவில் லைலத்துல் கத்ர் இரவு இருப்பதாகக் கண்டார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறேன்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2073

 

லைலத்துல் கத்ர் இரவு 27ம் இரவு என்று ஸஹாபாக்கள் கண்ட கணவை மறுக்காமல் அதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிகரித்ததை நம்மால் காண முடிகிறது.

 

عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். லைலதுல் கத்ர் இரவானது, இருபத்தி ஏழாம் இரவாகும்.

 

அறிவிப்பவர் :- முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1178

 

லைலத்துல் கத்ர் இரவு 27 ம் இரவு என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

عَنْ عَبْدَةَ وَعَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ ، سَمِعَا زِرَّ بْنَ حُبَيْشٍ يَقُولُ سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ رَحِمَهُ اللَّهُ أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ ‏.ثُمَّ حَلَفَ لاَ يَسْتَثْنِي أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ فَقُلْتُ بِأَىِّ شَىْءٍ تَقُولُ ذَلِكَ يَا أَبَا الْمُنْذِرِ قَالَ بِالْعَلاَمَةِ أَوْ بِالآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ لاَ شُعَاعَ لَهَا

 

நான் உபை பின் கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ”தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ”வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்” என்று கூறுகிறாரே? என்று கேட்டேன். அதற்கு உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தி ஏழாம் இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு ”அல்லாஹ் நாடினால்” என்று கூறாமல் அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவே ஆகும் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸிர்ரு இப்னு ஹுபைஷ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2085

 

லைலத்துல் கத்ர் இரவில் நடைபெறும் நிகழ்வுகள் அடையாளங்கள் பற்றி நபிமொழிகள் கூறியுள்ளது. அவைகளை காரணமாக வைத்து லைலத்துல் கத்ர் இரவானது. 27 ம் இரவு தான் என்று ஸஹாபாக்கள் சில அடையாளங்களை வைத்து உருதியாக கூறியுள்ளதை நம்மால் காணமுடிகிறது.

 

عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ أُبَيٌّ فِي لَيْلَةِ الْقَدْرِ وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُهَا قَالَ شُعْبَةُ وَأَكْبَرُ عِلْمِي هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقِيَامِهَا هِيَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ

 

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவேயாகும் என்றே அநேகமாக நான் கருதுகிறேன்.

 

அறிவிப்பவர் :- ஸிர்ரு இப்னு ஹுபைஷ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 2086

 

லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றை கூறிய மறுகணம் லைலத்துல் கத்ர் இரவு 27 ம் இரவு என்று ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியுள்ளதை நம்மால் காணமுடிகிறது.

 

قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ عَلَى مِنْبَرِ حِمْصَ يَقُولُ قُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي شَهْرِ رَمَضَانَ لَيْلَةَ ثَلاَثٍ وَعِشْرِينَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ خَمْسٍ وَعِشْرِينَ إِلَى نِصْفِ اللَّيْلِ ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ حَتَّى ظَنَنَّا أَنْ لاَ نُدْرِكَ الْفَلاَحَ وَكَانُوا يُسَمُّونَهُ السُّحُورَ ‏

 

ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.

 

அறிவிப்பவர் :- நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் நஸாயி 238

 

ரமளான் மாதம் 23 ம் இரவில் மூன்றின் ஒரு பகுதியில் தொழுதார்கள். 25 ம் இரவில் பாதிவரை தொழுதார்கள். 27 ம் இரவில் இரவு முழுவதும் நின்று வணங்கினார்கள். தொழுதார்கள். என்று நபிமொழிகளில் குறிப்பிட்டு கூறுவதன் மூலம் லைலத்துல் கத்ர் இரவு 27 ம் இரவு என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

 

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ ثَلاثٍ وَعِشْرِينَ فِي شَهْرِ رَمَضَانَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الأَوَّلِ ثُمَّ قَالَ لا أَحْسَبُ مَا تَطْلُبُونَ إِلا وَرَاءَكُمْ ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ خَمْسٍ وَعِشْرِينَ إِلَى نِصْفِ اللَّيْلِ ثُمَّ قَالَ لا أُحْسَبُ مَا تَطْلُبُونَ إِلا وَرَاءَكُمْ فَقُمْنَا مَعَهُ لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ حَتَّى أَصْبَحَ وَسَكَتَ

 

ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். தொழுது முடிந்த உடன் நீங்கள் தேடும் (லைலத்துல் கத்ர்) பின்னால் வரும் என்றார்கள். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். தொழுது முடிந்த உடன் நீங்கள் தேடும் (லைலத்துல் கத்ர்) பின்னால் வரும் என்றார்கள். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம். அதற்கு “பிறகு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்து விட்டார்கள்.

 

அறிவிப்பவர் :- ஆபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 20585

 

ரமளான் மாதம் 23 ம் இரவில் மூன்றின் ஒரு பகுதியில் தொழுதார்கள். 25 ம் இரவில் பாதிவரை தொழுதார்கள். 27 ம் இரவில் இரவு முழுவதும் நின்று வணங்கினார்கள். தொழுதார்கள். மேலும் 23 ம் இரவு 25 ம் இரவில் தொழுது முடிந்த உடன் நீங்கள் தேடும் (லைலத்துல் கத்ர்) பின்னால் வரும் என்று கூறிய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 27 ம் இரவில் மௌனமாக இருந்து விட்டார்கள். ஆக 27ம் இரவு லைலத்துல் கத்ர் இரவு என்பதற்கு நபிமொழிகளில் அதிக சான்றுகள் உள்ளதை நம்மால் காண முடிகிறது.

 

♦️குறிப்பு :- லைலதுல் கத்ர் இரவு, ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, (( 27 )) 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்று ஹதீஸ்கள் பறைசாற்றுகிறது. குறிப்பாக 27 ம் இரவில் லைலத்துல் கத்ர் இரவு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற கருத்தை வலுவாகவே ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. ஆக ஒற்றை படை இரவுகளில் நாம் நின்று வணங்க வேண்டும். குறிப்பாக ரமளான் 27 ம் இரவில் குறிப்பாக நின்று வணங்க வேண்டும் என்பதை ஹதீஸ்கள் நமக்கு ஆர்வம் ஊட்டுவதை நம்மால் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்

 

லைலதுல் கத்ர் இரவின் 10 அடையாளங்கள். அவை பின்வருமாறு

 

♦️1) 🌅 லைலதுல் கத்ர் இரவானது ஒளி வீசும் நிலவுள்ள இரவைப் போன்று

♦️2)தெளிந்த பிரகாசமாக இருக்கும்.

♦️3) 🌴அந்த இரவில் (மரம் செடி கொடிகள்) அமைதியான காட்சி அளிக்கும்.

♦️4)🏔️ அந்த இரவில் சூடோ குளிரோ இருக்காது.

♦️4) 🌠 அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது.

♦️5) 🐶 நாய் குரைக்காது.

♦️6) 💧சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.

♦️7) 🌋 லைலதுல் கத்ர் இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்.

♦️8) 🌄 அன்றைய தினத்தில் சூரியன் உதிக்கும் போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும்.

♦️9) 🌒 அன்றைய தினத்தில் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும்.

♦️10) ☠️ அன்றைய தினத்தில் சூரியன் உதிக்கும் போது ஷைத்தான் வெளியேற மாட்டான்.

 

நூல் ஆதாரம் 📖 :- மஜ்மஃ அஸ்ஸவாயிது 1356

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.