ளுஹர் தொழுகைக்கு பின் ஓதும் துஆ
ளுஹர் தொழுகைக்கு பின் ஓதும் துஆ
اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ اكْتُبْ لِكُلِّ وَاحِد مِنَّا بَرآءَةً مِّنَالنَّارِ. وَاَمَانًا مِّنَ الْعَذَابِ وَخَلَاصًا مِّنَ الْحِسَابِ. وَجَوَازًاعَلَ الصِّرَاطِ وَنَصِيْبًا مِّنَ الْجَنَّةِ وَاْلفَوْزَ بِالْجَنَّةِ وَنَجَاتًا مِنَ النَّارِ. وَالْعَفْوَ عِنْدَالْحِسَابِ. اَللّهُمَّ اَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْاُمُوْرِ كُلِّهَا وَاَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْاخِرَةِ تَوَفَّنَا مُسْلِمِيْنَ وَاَلْحِقْنَا بِالصَّالِحِيْنَ. وَصَلَّي اللّهُ عَلي خَيْرِ خَلْقِه سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ
இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே எங்களில் ஒவ்வொருவர் (அனைவர்)க்காகவும் நரகத்தை விட்டும் விமோசனத்தை (ஏட்டில்) எழுதி அருள் புரிவாயாக! இன்னும் வேதனையை விட்டும் அமைதியையும் கணக்கு வழக்கை விட்டு நிம்மதியையும் பாலத்தின் மீதுமு கடக்கலையும் சுவர்க்கத்திலிருந்து நற்பாக்கியத்தையும் சுவர்;க்கத்தில் ஜெயத்தையும் (நரக) நெருப்பிலிலிருந்து விமோசனத்தையும் கணக்கு பார்ப்பதில் மன்னிப்பையும் அருள் புரிவாயாக! இறைவனே, எல்லாக் காரியங்களிலும் அதன் முடிவை எங்களுக்கு அழகானதாய் (நன்மையாய்) செய்தருள்வாயாக! உலக தொல்லையிலும் மறுமையின் வேதனையிலும் எங்களுக்கு (நலவான) நற்கூலியருள்வாயாக! எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்களை உத்தமர்களுடன் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வுடை ஸலவாத்தும் அவனுடைய சிருஷ்டிகளில் சிரேஷ்டமானவரான எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்