வரதட்சணை சீதனம் பற்றிய தெளிவு
வரதட்சணை சீதனம் பற்றிய தெளிவு
மனமகனுக்கு பெண் வீட்டினரால் மிக்க மனமகிழ்ச்சியோடு கொடுக்கப்படும் உபகரண பொருட்கள் சீதனம் ஆகாது. அது அல்லாமல் கேட்டு வாங்கும் பொருட்கள் மாத்திரமே சீதனம் ஆகும்.
اَلْيَوْمَ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ وَطَعَامُ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ حِلٌّ لَّـکُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ وَلَا مُتَّخِذِىْۤ اَخْدَانٍ وَمَنْ يَّكْفُرْ بِالْاِيْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவைகள் அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டுவிட்டன. வேதத்தையுடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்.) அன்றி, எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இவற்றை) நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்பான்.
(அல்குர்ஆன் : 5:5, 33:50)
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ تَزَوَّجْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ قَالَ مَا سُقْتَ إِلَيْهَا قَالَ نَوَاةً مِنْ ذَهَبٍ أَوْ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ‘யா ரஸூலல்லாஹ்! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டேன்!’ என்றார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ‘அவளுக்கு என்ன மஹர் கொடுத்தீர்?’ எனக் கேட்டார்கள். ‘ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!’ என அவர் பதில் கூறினார். அதற்கு ‘ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 2049 முஸ்லிம் 1427 நஸாயி 3352
மனமகன் திருமணம் முடிக்கும் போது மனமகளுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்ற கருத்தை குர்ஆன் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فِي خَمِيلٍ وَقِرْبَةٍ وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا إِذْخِرٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மகள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல்பை, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையானை ஆகியவற்றைக் கொடுத்து (மனமகன் வீட்டுக்கு) அனுப்பி வைத்தார்கள்.
அறிவிப்பவர் :- அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 643, 715
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய மகளுக்கு திருமணம் முடித்து வைத்து சில உபகரண பொருட்களை மனமகிழ்ச்சியோடு தன் மகளிடம் கொடுத்து மனமகன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தன் பெண்பிள்ளை மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்ற நோக்கில் பெண் வீட்டினர்களால் கொடுக்கப்படும் உபகரண பொருட்கள் வசதி வாய்ப்புக்கள் வரதட்சணை, சீதனம் என்ற சொல்லில் அடங்காது. அது அல்லாமல் உங்கள் பெண் பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் அதற்கு பதிலாக இன்னென்ன உபகரண பொருட்களை நீங்கள் தரவேண்டும் என்ற உடன் படிக்கையுடன் நடாத்தப்படும் திருமணங்கள் மாத்திரமே ஆண்மை அற்ற வரதட்சணை, சீதனத் திருமணம் என்று பொருள் கொள்ளப்படும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் பொருந்திக் கொள்ளும் மார்க்கம் மற்றும் குணத்தைக் கொண்டவர் உங்களிடம் பெண் கேட்டால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு செய்யாவிடில் பூமியில் சோதனையும், பெரிய குழப்பமும் ஏற்பட்டுவிடும்.
அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 1084 இப்னு மாஜா 1967
மார்க்க குணமுள்ள வாலிப ஆண்களும் பெண்களும் இந்த உலகில் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் திருமணம் என்று வரும் போது வசதிபடைத்த பெண் வீட்டார்கள் சொத்து செல்வமுள்ள ஆண்மகனை தேடுவதும். வசதிபடைத்த ஆண் வீட்டார்கள் சொத்து செல்வமுள்ள பெண்மகளை தேடுவதும், ஏழை வீட்டில் பிறந்தவன் தகுதியுள்ள பட்டம் படிப்பு தனக்கு இருக்கும் காரணத்தால் வசதி வாய்ப்புக்கள் உள்ள மனமக்களை தேடுவதும் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இதன் காரணத்தினால் மனவேதனை அடையும் பல வாலிப ஆண் பெண் பிள்ளைகளில் சிலர்கள் அல்லாஹ்வின் மீது பொருப்பு சாட்டிவிட்டு பொறுமையுடன் இருக்கிறார்கள். இன்னும் சிலர்கள் பொறுமை இன்றி தவறான வழிகளை நாடிச் செல்கிறார்கள். இதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
குறிப்பு :- அதிகமான உலமாக்கள் அது அல்லாதோர்கள் கூட பெண்களின் வீடுகளில் வாழுகின்ற காரணத்தால் அவர்கள் அனைவரும் வரதட்சணை சீதனம் எடுத்தவர்கள் என்று நாம் கூறிவிட மாட்டோம். அவ்வாறு கூற முற்பட்டால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த வீடு தன் துணைவி ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீடாகும். அதேபோல் அது அல்லத துணைவியார்களின் வீடுகளிலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. முடிந்த வரை பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்