வற்புறுத்தல் திருமணம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது

468

பெண் மாப்பிள்ளை இருவரின் முழு சம்மதம் இன்றி திருமணம் நிறைவேறாது

 

பெண் மாப்பிள்ளை இருவரும் திருமணத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போன்று திருமணம் செய்து வைப்பதற்கு அவர்கள் இருவரும் முழு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் திருமணம் நிறைவேறாது.

 

عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الْأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهُ

 

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) திருமணம் முடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச்) சொன்னேன். அத்திருமணத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

 

அறிவிப்பவர் :- கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 5138

 

♦️கன்னி கழிந்த பெண்கள் அதாவது திருமணம் முடித்து ஏதோ ஒரு வகையில் விடுபட்ட பெண்களை அவர்களுடைய முழு சம்மதத்துடன் திருமணம் பேச வேண்டும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பெண் அந்த திருமணத்தை முறித்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ وَلَا الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாதவரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6968 அபூதாவூத் 2092 அஹ்மது 7131

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ جَارِيَةً بِكْرًا أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ لَهُ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ كَارِهَةٌ فَخَيَّرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு கன்னிப் பெண் வந்து, அவள் விரும்பாத நிலையில் அவளின் தந்தை அவளுக்குத் திருமணம் முடித்து வைத்து விட்டதாகக் கூறினாள். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணிடம் நீ விரும்பினால் வாழ்ந்து கொள். இல்லையேல் திருமணத்தை முறித்துக் கொள் எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1875 அபூதாவூத் 2096 அஹ்மது 2469

 

🔸ஆரம்ப ஹதீஸில் திருமணம் முடித்து வைக்க முன்னர் கன்னிப் பெண்ணிடம் அனுமதி விருப்பம் கேட்க வேண்டும் என்ற கருத்தையும். மற்ற ஹதீஸில் கன்னிப் பெண்ணுக்கு அவள் அனுமதி இன்றி திருமணம் செய்து வைத்த காரணத்தால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணிடம் நீ விரும்பினால் வாழ்ந்து கொள். இல்லையேல் திருமணத்தை முறித்துக் கொள் எனக் கூறியதை நம்மால் காண முடிகிறது.

 

♦️அன்புக்குரிய பெற்றோர்களே! கன்னிப் பெண்ணுக்கு திருமணம் பேசுவதாக இருந்தாலும் சரி அவர்களுக்கு மாப்பிள்ளையை பேசி திருமணம் செய்து வைப்பதாக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணிடம் சம்மதம் கேட்ட வேண்டும். அவள் அதனை மறுத்த பின்னரும், தன் வரட்டு கௌரவித்தை காரணமாக வைத்து அந்த மாப்பிள்ளைக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

 

♦️குறிப்பு :- திருமணத்தில் ஆண் பெண் இருவரின் விருப்பமும் மிக அவசியமாகும். வற்புறுத்தல் திருமணம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. விரும்பாத பெண்ணையோ ஆணையோ நிர்ப்பந்தித்து திருமணம் செய்வித்தல் கூடாது. மேலும் திருமணச் சபைக்குச் செல்ல முன் வலிகாரர் பெண்ணிடம் திருமண சம்மதம் கேட்டுச் செல்லலாம். அவ்வாறு சம்மதம் கேட்கும் போது, இரு சாட்சிகளும் பெண்ணின் சம்மதத்தை முழுமையாக கேட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால் திருமணச் சபையில் அவ்விரு சாட்சிகளும் மாப்பிள்ளையின் சம்மதத்தையும் கேட்டுக் கொண்டால் அல்ஹம்துலில்லாஹ் திருமணம் நிறை வேறிவிடும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.