வஹியை மட்டுமே பின்பற்றலாமா?

105

வஹியை மட்டுமே பின்பற்றலாமா?

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا

 

குர்ஆன் கூறுகிறது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்!.

சூரா அன்பால் ஆயத் 46

 

قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ‌ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْ‌ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا‌ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏

 

குர்ஆன் கூறுகிறது நீர் கூறும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.

சூரா நூர் ஆயத் 54

 

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவான முறையில் கூறிக் காட்டுகிறது. இருப்பினும் இதே போன்ற இறைவசனம் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் என்ற கருத்தையும் ஆணித்தரமாக கூறுகிறது அவை பின்வருமாறு.

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏

 

குர்ஆன் கூறுகிறது நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்.) பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்; இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது.

சூரா நிஷா ஆயத் 59

 

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் என்றால் எந்த அமைப்பில் இதனை புரிந்து கொள்வது. அதிகாரம் உடையவர்கள் மார்க்க விஷயத்திலும் இருக்கிறார்கள். மார்க்கம் அல்லாத உலக விஷயங்களிலும் இருக்கிறார்கள். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஜனாதிபதி அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவரும் அதிகாரம் உடையவர்கள், உலக விஷயம் மார்க்கத்திற்கு முறன் இல்லாத முறையிலும் ஜனநாயகம் என்ற ரீதியிலும் அவர்களுக்கு கீழ்படிவது அவசியமும். மார்க்க விஷயத்தில் அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் அல்லாஹ் ரஸூலை தவிர்த்து அதிகாரம் உடையவர்கள் என்று யாரை கூறுகிறான்.

 

عن عنبسة، عن ليث قال: سأل مسلمةُ ميمونَ بن مهران عن قوله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال أصحاب السرايا على عهد النبي صلى الله عليه وسلم

 

عن عكرمة أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال أبو بكر وعمر رضي الله عنهما

 

عن مجاهد في قوله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال كان مجاهد يقول أصحاب محمد النبي صلى الله عليه وسلم

 

عن مجاهد في قوله: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال أولي الفقه منكم

 

عن ابن أبي نجيح وأولي الأمر منكم قال أولي الفقه في الدين والعقل

 

عن ابن عباس قوله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يعني أهل الفقه والدين

 

عن عطاء بن السائب في قوله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم قال أولي العلم والفقه

 

عن عبد الملك، عن عطاء وأولي الأمر منكم قال: الفقهاء والعلماء

 

عن مجاهد قوله وأولي الأمر منكم قال هم أهل الفقه والعلم

 

மார்க்க விஷயத்தில் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் என்பதாகக் கூறப்பட்டது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்து மார்க்க ஞானத்தை கற்றுக் கொண்ட ஸஹாபாக்களை குறிப்பது மட்டுமின்றி அவர்கள் வழிவந்த மார்க்க ஞானம் கொடுக்கப்பட்ட மார்க்கப்பட்டுள்ள அஹ்லுஸ் ஸுன்னா புகஹாக்கள் உலமாக்கள் எனும் இமாம்கள் அறிஞர் பெருமக்களை பொதுவாகக் குறிக்கும் என்ற கருத்தை ஸஹாபாக்கள் அது அல்லாத பல அறிஞர்களும் மேற்கூறிய வசனத்திற்கு விளக்கம் கூறியுள்ளதை குர்ஆன் விளக்கவுரை பல தப்ஸீர்கள் வழியாக நம்மால் காண முடிகிறது.

 

ஸஹாபாக்கள் அறிஞர் பெருமக்களின் கருத்துக்களின் ஏதும் குழப்பம் பிரச்சினை இருந்தால் நீங்கள் அல்லாஹ் ரஸூலின் பக்கம் மீளவேண்டும் என்ற கருத்தையும் மேற்கூறிய இறைவசனம் கூறுகிறது. இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஸஹாபாக்கள் அறிஞர் பெருமக்களின் கருத்துக்களின் குர்ஆன் ஹதீஸிக்கு மாற்றமான எந்த ஒரு முறன்பாடுகளும் இல்லை என்பதே அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களின் நிலைப்பாடு. யூத நஸாராக்கள் குர்ஆனில் பிழைகள் இருக்கிறது என்று தவறாக கூறுவதை போன்று வஹாபிஷ ஷீஆ அமைப்புக்களும் ஸஹாபாக்கள் அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸிக்கு முறன் என்று யூத நஸாராக்கள் போன்று தவறாக மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களின் பொய் பிரச்சாரம் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களுக்கு ஒரு போதும் ஆதாரம் கிடையாது.

 

எனவே அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஆனித்தனமாக கூறும் போது. முஸ்லிம் என்ற பெயரளவில் உள்ள ஓர் கூட்டம் அல்லாஹ் ரஸூலுக்கு மட்டுமே நாங்கள் கீழ்படிவோம் மார்க்க விஷயத்தில் அதிகாரம் உடைய ஸஹாபாக்கள் இமாம்கள் அறிஞர் பெருமக்களுக்கு கீழ்ப்படிய மாட்டோம் என்று வாதிட்டால் அவர்கள் வழிகெட்ட கொள்கையில் நின்றும் உள்ளவர்களாகும்.

 

குறிப்பு :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஸஹாபாக்கள் அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் அறிஞர் பெருமக்கள் சட்டம் கூறினால் அவைகளுக்கு கீழ்படிவது அவசியமும். குர்ஆன் ஹதீஸிக்கு மாற்றமாக குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் வஹாபிஷ ஷீஆ இமாம்கள் அறிஞர் பெருமக்கள் சட்டம் கூறினால் அவைகளுக்கு கீழ்படிவது அவசியம் இல்லை. வஹியை மட்டுமே ஒருவன் பின்பற்ற நாடினால் கீழ்படிய நாடினால் அவன் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும், இன்னும் உங்களில் அதிகாரம் உடைய ஸஹாபாக்கள் அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் அறிஞர் பெருமக்களும் கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.