வானம் கூரை முகடானது

52

வானம் கூரை முகடானது

 

وَالسَّقْفِ الْمَرْفُوْعِۙ‏

 

குர்ஆன் கூறுகிறது உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!

சூரா தூர் ஆயத் 5

 

الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً

 

குர்ஆன் கூறுகிறது அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.

சூரா பகரா ஆயத் 22

 

♦️வானத்தை பற்றி கூறும் போது அது கூரை, முகடு என்பதாக திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறப்படுகிறது. நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது போல் தோற்றம் அளிக்கும் வானம். வெயிலும் மழையும் மனித உடலை அடைவழைத்துக் கொள்ளும் வானம் எப்படிக் கூரையாக முடியும்?” என்று சிலர்களின் எண்ணமாகும்.

 

فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَحِفْظًا ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏

 

குர்ஆன் கூறுகிறது ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

சூரா ஸஜதா ஆயத் 12

 

♦️மேகத்தை உற்று நோக்கிப் பார்க்கும் நவீன மனித சக்தி கருவிகள் முழுமையாக வானலோகத்தை உற்று நோக்கி பார்க்க முடியவில்லை. காரணம் ஏழு வானங்களை தட்டுதட்டாக முகடாக இறைவன் படைத்துள்ளான். இந்த ஏழு வானங்களை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஹ்ராஜ் விண்ணுலகப் பயனத்தின் போது பார்வையிட்டது போல வேறு எந்த மனிதரும் பார்வையிடவில்லை. மேலும் வானம் என்ற சொல் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது.

 

الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً

 

குர்ஆன் கூறுகிறது அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச் செய்கிறான்.

சூரா பகரா ஆயத் 22

 

اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِىْ جَوِّ السَّمَآءِ مَا يُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏

 

குர்ஆன் கூறுகிறது வான(மண்டல)த்தின் வெளியில் கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

சூரா நஹ்ல் ஆயத் 79

 

♦️வானத்திற்கு கீழ் பகுதியான மேகங்களில் இருந்தே மழை பொழிகிறது, மேலும் மேகத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் தான் காற்றின் மூலம் பறவைகள் பறந்து செல்கிறது. இதுபோன்ற வெட்ட வெளிகளை மேற்கூறப்பட்ட ஆயத்துக்கள் வானம் என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிடுகிறது. ஆக இவ்வான இடங்கள் கூரை, முகடாக உள்ளது என நவீன ஆய்வுகள் உருதிப் படுத்துகிறது.

 

♦️சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. சந்திரனுக்கு அருகிலுள்ள பூமியிலும் ஏறத்தாழ இதே அளவு வெப்பம் தான் இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி அளவுக்குத்தான் பூமியில் வெப்பம் உள்ளது. இதற்குக் காரணம், நமக்கு மேலே உள்ள காற்றுக்கூரை தான் மேலும் தரையிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது. இது சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம் முழுமையாக பூமியைத் தாக்காமல் காக்கின்றது. மேலும் பூமியை நோக்கி வரும் சூரியனின் வெப்பம், சந்திரனின் வெப்பம், வேரு சில நச்சு கதிர்கள், வின் கற்கள், எறி கற்கள் போன்ற தீய ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் கூரை, முகடாக வானம் (மேகம் காற்று) அமைந்துள்ளதை நம்மால் காணமுடிகிறது. எனவே தான் வானம் கூரை, முகடாக உள்ளது எனக்கூரும் திருக்குர்ஆன் ஆயத்துக்கள் இறைவனின் அத்தாட்சியாக அமைந்துள்ளது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.