வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது பற்றிய தெளிவு
வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது பற்றிய தெளிவு
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوَتْرِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ருடைய குனூத்தில் நான் ஓதுவதற்காக சில வார்த்தைகளை கற்றுத் தந்தார்கள்.
அறிவிப்பவர் :- ஹஸன் இப்னு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூ தாவூத் 1425 இப்னு மாஜா 1178 அஹ்மது 1718
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَنَتَ فِي الْوِتْرِ قَبْلَ الرُّكُوعِ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு (தொழுகையில்) ருகூக்கு பின்னால் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர் :- உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். நஸாயி 1700
குறிப்பு :- இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகையில் குனூத் ஓதியதாக சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் வித்ரு தொழுகையின் கடைசி ரகாத்தில் ருகூக்கு முன்னர் குனூத் ஓதியாதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற காரணத்தால்! வித்ரு தொழுகையில் பொதுவாக குனூத் ஓதுவதில் எவ்வித குற்றமும் கிடையாது. இருப்பினும் ரமலான் மாதத்தின் பிற்பகுதி 15 நாட்களில், வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது ஏற்றமானதாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்