வித்ரு தொழுகையும் அதன் நேரமும்
வித்ரு தொழுகையும் அதன் நேரமும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلاَةِ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلاَمُ: اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى
ஒரு மனிதர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹ் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது (வித்ராக) ஒற்றையாக ஆக்கி விடும்” என்பதாக கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 990
வித்ரு தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழுது வாருங்கள் மேலும் இரவின் கடைசிப் பகுதியில் விழித்தெழுந்த பின் சுபஹ் தொழுகையை பற்றி அஞ்சினால் தஹஜ்ஜத் தொழுகைக்கு பிறகு வித்ரு தொழுகையை ஒரு ரக்அத்தாக தொழுது கொள்ளளாம்.
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَافَ أَنْ لاَ يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ فَإِنَّ صَلاَةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் (வித்ரு தொழுகையை) ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே (வித்ரு தொழுகையை) ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்ததாகும்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் : முஸ்லிம் 1802
வித்ரு தொழுகையை இரவின் கடைசிப் பகுதியில் தொழுவது சிரமமாக இருந்தால் இரவின் ஆரம்ப பகுதி இஷா தொழுகைக்குப் பிறகு தாராளமாக தொழுது கொள்ளளாம் என்டிருந்தாலும் வித்ரு தொழுகையை இரவின் கடைசிப் பகுதியில் விழித்தெழுந்து தஹஜ்ஜத் தொழுகைக்கு பின் வித்ரு தொழுகையை தொழுவது மிகச் சிறந்ததாகும்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர் :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 996
இரவின் எல்லா பகுதிகளிலும் வித்ரு தொழுகையை நிறைவேற்றலாம் அதாவது இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து (சுபஹ்) அதிகாலைப் பொழுது உதயமாகும்வரை தாராளமாக வித்ரு தொழுகையை தொழுது கொள்ளளாம்.
குறிப்பு :- வித்ரு தொழுகை ஒற்றைப்படையாக தொழும் ஓர் சுன்னத்து தொழுகையாகும் இத்தொழுகையின் நேரம் இரவின் எல்லா பகுதிகளிலும் இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து வைகறை பொழுது உதயமாகும் வரை (சுபஹ் தொழுகை வரை) தாராளமாக தொழுது கொள்ளளாம் . இதில் குறைந்தது ஒரு ரக்அத்து, மூன்று ரகாஅத்து, இதில் அதிகமானது ஐந்து ரக்அத்து, ஏழு ரக்அத்து, ஒன்பது ரக்அத்து, பதினொரு ரக்அத்துகளாகும், வித்ரு தொழுகையை இரண்டு ரக்அத்துக்கு ஒரு ஸலாமாகவும், ஒரு ரக்அத் மற்றொரு ஸலாமாகவும் தொழுது கொள்ள வேண்டும் இத்தொழுகையை இரவின் கடைசிப் பகுதியில் விழித்தெழுந்து தஹஜ்ஜத் தொழுகைக்கு பின் வித்ரு தொழுகையை தொழுது கொள்வது மிகச் சிறப்புக்குரியதாகும்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்