வுளூச் செய்வது பற்றிய தகவல்கள்

173

வுளூவின் பர்ளுகள் ஆறாகும்

 

1) வுளூவின் கடமைகளை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்துச் செய்தல். 

2) அந்த நிய்யத்துடன் முகத்தைக் கழுவுதல் 

♦️குறிப்பு :- முகம் என்பது நீளத்தால் தலையில் உரோமம் முளைக்கும் இடத்திலிருந்து நாடிக் குழியுட்படவுபுள்ள இடமாகும். அகலத்தால் செவிகளுக்கிடையிலுள்ள பாகமாகும்.

3) இரு கைகளையும் (முழங்கையுட்பட) கழுவுதல்.

4) தலையில் சில பகுதியை தண்ணீரால் தடவுதல். 

5) இருகால்களையும் கரண்டையுட்பட கழுவுதல் 

6) மேற்கூறப்பட்ட ஒழுங்கு தவறாது ஒன்றன்பின் ஒன்றாகச் செய்தல்.

 

வுளூவின் ஸுன்னத்துக்கள் பத்தாகும்

 

1) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதிக் கொள்ளுதல். 

2) இரு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுதல். 

3) வாய் கொப்பளித்தல். 

4) வாயுடன் நாசிக்கும் நீர் செலுத்துதல். 

5) முகம் கழுவும் போது தாடியைக் குடைந்து கழுவுதல். 

6) வலது பாகத்தை முதலில் கழுவுதல். 

7) தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல். 

8) இரு காதுகளையும் மஸ்ஹு செய்தல். 

9) காலின் விரல்களை கோரிக் கழுவுதல். 

10) ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று முறை கழுவுதல். 

 

வுளூவின் ஷர்த்துக்கள் ஆறாகும்

 

1) முஸ்லிமாயிருத்தல் 

2) பகுத்தறிந்து கொள்ளும் புத்தியுள்ளவனாயிருத்தல். 

3) வுளூ பர்ளு என்று அறிந்திருத்தல். 

4) வுளூவின் முறைகளை முழுமையாக அறிந்திருத்தல். 

5) வுளூச் செய்வதற்கான துப்புரவான தண்ணீரைத் தேர்ந்தெடுத்தல். 

6) வுளூச் செய்யும் பர்ளான உறுப்புக்களில் தண்ணீர் படாமல் தடை செய்யக்கூடியவைகளை முற்றாக நீக்கிக் கொள்ளுதல். 

 

வுளூவை முறிக்கும் காரியங்கள் நான்காகும்

 

1) முன் துவாரத்தால் அல்லது பின் துவாரத்தால் காற்று, சிறுநீர், மலம், இரத்தம், மதி, வதி வெளிவருதல். 

2. பித்தட்டு பூமியில் நன்கு சரியாக அமையாமல், நித்திரை செய்தல். மற்றும் போதை, பைத்தியம் போன்றவைகளினால் உணர்விழந்து போகுதல். 

3 சுய உணர்வு இல்லாமல் போகுதல். ஆண், பெண் குறி பின் துவாரம் ஆகியவற்றை தொடுதல். 

4. தனக்கு விவாகம் செய்யத் தகுமான மாதரைத் திரையின்றித் தொடுதல். அதாவது திருமணத்திற்கு ஹலாலான ஆண் பெண்கள் திரையின்றி தொடுவதன் மூலம் இருவரின் வுளூவும் முறிந்து விடும்.   

 

வுளூ இல்லாதவர்கள் செய்யக்கூடாத காரியங்கள் மூன்றாகும் 

 

1) தொழுதல். 

2) குர்ஆனைத் தொடுதல் 

3) கஹ்பா எனும் அல்லாஹ்வின் புனித ஆலயத்தை தவாபு செய்தல்.

 

உளூவின் மக்ரூஹுகள் பத்தாகும்

 

1) அடர்த்தியான தாடியை கோதி கழுவாமலிருத்தல்.  

2) கை கால்களை கழுவுவதில் இடது பாகங்களை முற்படுத்துதல்.  

3) கண்களுக்குள் நீர் செலுத்துதல்.  

4) நீரை முகத்தில் அடித்துக் கழுவுதல்  

5) அவரவர் முகத்திற்கு நேராக அல்லது கிப்லாவின் திசை நோக்கி துப்புதல்.  

6) உளூவின் உறுப்புகளை மூன்று முறைகளை விட அதிகமாகவோ குறைவாகவோ கழுவுதல்.  

7) மிஸ்வாக் செய்வதை விடுதல்  

8) தேவையின்றி பிறரின் உதவியினால் உளூச் செய்தல்  

9) உளூச் செய்யும் போது நீரை உதறுதல்.  

10)  வெயிலில் சூடான நீரினால் உளுச் செய்தல். 

 

சில சமயங்களில் வுளூ செய்வது ஸுன்னத்தாகும்

 

1) குர்ஆனை தொடாமல் ஓதுவதற்கு வுளூ செய்வது  

2) மய்யித்தை குளிப்பாட்டியதற்காக அதனை சுமந்ததற்காக வுளூ செய்வது 

3) மார்க்க நூல்களை படிப்பதற்காக வுளூ செய்வது 

4) ஆண்-பெண் உறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளை தொட்டதற்காக வுளூ செய்வது 

5)  மனைவியுடன் இணைந்து கொள்வதற்காக வுளூ செய்வது 

6) உறங்குவதற்காக வேண்டி வுளூ செய்வது. 

7) மார்க்க விஷயங்களை படிப்பதற்காக பயான்கள் கேட்பதற்காக வுளூ செய்வது. 

8) நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களை ஸியாரத் செய்வதற்காக வுளூ செய்வது. 

9) அதான்” பாங்கு சொல்வதற்காக வுளூ செய்வது. 

10) மஸ்ஜிதுகளில் நுழைவதற்காக வுளூ செய்வது. 

11) பெருந்துடக்குள்ளவர்கள் குளிப்பதற்காக வுழூ செய்வது. இன்னும் சில செயல்கள் மூலமாகவும் வுளூ செய்து கொள்வது ஸுன்னத்தாகும். 

إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ القِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الوُضُوءِ فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக என்னுடைய உம்மத்தினர்கள் மறுமை நாளில், உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர் :- நுஐம் அல் முஜ்மிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் 📚 புஹாரி 136 

யா அல்லாஹ்! மறுமை நாளில் எங்களை ஒளி மிக்கவர்களாக ஆக்கி அருள்வாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.