வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாள்
வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாள்
ஜும்ஆவிற்காக நேரங்காலத்துடன் நடந்து வருவதின் சிறப்பு
عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، قَالَ: سمعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَبَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى، وَلَمْ يَرْكَبْ فَدَنَا مِنَ الْإِمَامِ، فَاسْتَمَعَ، وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ أَجْرُ صِيَامِهَا وَقِيَامِهَا
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். வெள்ளிக்கிழமை அன்று தலையை கழுகி உடல் முழுவதும் குளித்து . வெகு சீக்கிரம் புறப்பட்டு . வாகனத்தில் ஏறாமல் நடந்தே (ஜும்மாவுக்கு) சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து கொத்பாவை வீனாக்கிடாமல் கூர்மையாக செவியேற்றால் நடந்த ஒவ்வொரு கால் எட்டுக்கும் ஒரு வருடம் முழுவதும் நின்று வணங்கிய நன்மையும் . நோன்பு பிடித்த நன்மையும் கிடைத்து விடும்.
அறிவிப்பவர் :- அவ்ஸ் இப்ன் அவ்ஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அஹ்மது 16173
ஜும்ஆ தினங்களில் அதிகம் ஸலவாத்து சொல்லுங்கள். அவைகள் என் கப்ரில் எடுத்துக்காட்டப்படும்.
عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ” أَكْثِرُوا الصَّلاَةَ عَلَىَّ يَوْمَ الْجُمُعَةِ فَإِنَّهُ مَشْهُودٌ تَشْهَدُهُ الْمَلاَئِكَةُ وَإِنَّ أَحَدًا لَنْ يُصَلِّيَ عَلَىَّ إِلاَّ عُرِضَتْ عَلَىَّ صَلاَتُهُ حَتَّى يَفْرُغَ مِنْهَا قَالَ قُلْتُ وَبَعْدَ الْمَوْتِ قَالَ وَبَعْدَ الْمَوْتِ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ فَنَبِيُّ اللَّهِ حَىٌّ يُرْزَقُ
ஒரு முறை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களான ஸஹாபாப் பெருமக்களிடம்,
“வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். அன்றைய நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன.” என்றார்கள். அப்போது, நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா? என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி
முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்று விடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன என்று கூறியதுடன், “நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 1706
ஜும்ஆ முபாரக் தினத்தில் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَأَنْ يَسْتَنَّ وَأَنْ يَمَسَّ طِيبًا إِنْ وَجَدَ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; மேலும் பல்துலக்குவதும், கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்.
அறிவிப்பவர் :- அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 880
غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ وَسِوَاكٌ وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ
இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும்,கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்.
அறிவிப்பவர் :- அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 1537
குறிப்பு :- ஜும்ஆ முபாரக் தினங்களில் எவ்வாறு நாம் குளித்து சுத்தம் சேர்க்கிறோமோ அதே போன்று நறுமணங்களை பூசிக் கொள்ள வேண்டும் என்ற நற்செய்தியை நபிமார்கள் பறைசாற்றுகிறது. ஜும்ஆ தினங்களில் நறுமணம் பூசிக் கொள்வது நபிவழி ஸுன்னாவாகும்.
ஜும்ஆ தினங்களில் குளித்து கொள்ளுங்கள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِذَا جَاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ ، فَلْيَغْتَسِلْ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 877
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.
அறிவிப்பவர் :- அபூ ஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 879
குறிப்பு :- ஜும்மா நாளில் குளித்துக் கொள்வது முக்கியமான ஓர் ஸுன்னத்தாகும். இருப்பினும் ஹம்பலி மத்ஹப் பிரகாரம் ஜும்ஆ நாளில் குளித்து கொள்வது கட்டாயமாகும். இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் ஜும்ஆ நாளில் நறுமணம் பூசுவது பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்