ஷபாஅத் குப்ரா மாபெரும் பரிந்துரை பற்றிய ஆய்வுத் தொகுப்பு

321

ஷபாஅத் குப்ரா மாபெரும் பரிந்துரை பற்றிய ஆய்வுத் தொகுப்பு

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

மறுமை நாளில் ஷபாஅத் எனும் பரிந்துரையானது, அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களும் அது அல்லாத அமல்களும் ஏகத்துவ கலிமாவை மொழிந்த அடியார்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பரிந்து பேசுவதாகவும். இவை ஷபாஅத் குப்ரா என்றும் ஷபாஅத் ஷுஹ்ரா என்றும் இரு விதமாக பார்க்கப்படுகிறது. ஷபாஅத் குப்ரா எனும் மாபெரும் பரிந்துரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரயோத்திகமாக கொடுக்கப்பட்டது. ஷபாஅத் ஷுஹ்ரா எனும் சிறிய பரிந்துரை நபிமார்கள், நல்லடியார்கள், மலக்குகள் அது அல்லாத ஸாலிஹான அமல்களுக்கும் கொடுக்கப்பட்டதாகும்.

 

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ

 

குர்ஆன் கூறுகிறது இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சூரா பகரா ஆயத் 48

 

மறுமையில் ஷபாஅத் பரிந்துரை செய்பவர்கள் எவரும் இல்லை என்று இன்னும் சில இறைவசனங்கள். சூரா பகரா 123, 254 சூரா அன்ஆம் ஆயத் 51, 70 94 சூரா ஸுஃரா ஆயத் 100 சூரா சஜதா ஆயத் 4 சூரா யாஸீன் ஆயத் 23

 

நபிமார்கள் நல்லடியார்கள் அது அல்லாத எவர்களும் மறுமையில் அல்லாஹ்வின் அனுமதி இன்றி சுயமாக ஷபாஅத் பரிந்துரை செய்ய முடியாது என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى

 

குர்ஆன் கூறுகிறது அவர்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை; எவருக்காகப் பரிந்துரை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களை தவிர!

சூரா அன்பியா ஆயத் 28

 

மறுமையில் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவனிடம் அடியார்கள் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்று இன்னும் சில இறைவசனங்கள். சூரா பகரா ஆயத் 255 சூரா தாஹா ஆயத் 109 சூரா ஸபா ஆயத் 23 சூரா நஜ்ம் ஆயத் 26

 

🔶மறுமையில் சுயமாக எவர்களும் பரிந்துரை செய்ய மாட்டார்கள், இருப்பினும் எவர்களுக்கு அல்லாஹ் பரிந்துரை செய்ய நாடுகிறானோ அவர்களை தவிர என்ற மேற்கூறிய இறைவசனங்கள் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்கள் அவனின் அனுமதி கொண்டு ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸபாஅத் குப்ரா என்னும் மாபெரும் பரிந்துரை

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الآخِرَةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன். என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 5970

 

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُيِّرْتُ بَيْنَ الشَّفَاعَةِ وَبَيْنَ أَنْ يَدْخُلَ نِصْفُ أُمَّتِي الْجَنَّةَ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ لِأَنَّهَا أَعَمُّ وَأَكْفَى أَتُرَوْنَهَا لِلْمُتَّقِينَ لَا وَلَكِنَّهَا لِلْمُذْنِبِينَ الْخَطَّائِينَ الْمُتَلَوِّثِينَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது சமுதாயத்தில் பாதி நபர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பது, அல்லது பரிந்துரை செய்வது (இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும்) தேர்வு செய்யும் உரிமை எனக்கு (இறைவனால்) வழங்கப்பட்டது. நான் பரிந்துரை செய்வதைத் தேர்வு செய்தேன். ஏனென்றால் அது தான் நிறைவானதாகவும், விசாலமானதாகவும் உள்ளது. அந்தப் பரிந்துரை இறையச்சமுள்ளவர்களுக்கு என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை நிச்சயமாக அது பாவக்கறை படிந்த பாவிகளுக்கே உரியது.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா அல் அஸ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4301

 

🔶ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதனை ஒவ்வொரு இறைத்தூதர்களும் இவ்வுலகில் பயன்படுத்தி விட்டார்கள், இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தவிர என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا. فَيَأْتُونَ آدَمَ…. فَيَقُولُونَ فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا…. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، فَيَسْتَحِي ائْتُوا نُوحًا…. فَيَأْتُونَهُ، فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ…. فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ. فَيَأْتُونَهُ، فَيَقُولُ : لَسْتُ هُنَاكُمُ، ائْتُوا مُوسَى ؛ عَبْدًا كَلَّمَهُ اللَّهُ، وَأَعْطَاهُ التَّوْرَاةَ. فَيَأْتُونَهُ، فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ… فَيَقُولُ ائْتُوا عِيسَى ؛ عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ، وَرُوحَهُ. فَيَقُولُ لَسْتُ هُنَاكُمُ…. ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَا تَأَخَّرَ. فَيَأْتُونِي، فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي، فَيُؤْذَنُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் (முஃமின்கள்) இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடலாம் என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறுவார்கள். நீங்கள் (நபி) நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள், உடனே, இறைநம்பிக்கையாளர்கள் அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம் அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை, அல்லாஹ் உரையாடிய, தவ்ராத் (வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸா (அலை) அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறுவார்கள். பிறகு, ‘நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈஸாவிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறுவார்கள். பிறகு நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செல்லுங்கள்’ என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும்.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் :- புகாரி 3361, 6565, 7410, 7439, 7510, 7516 முஸ்லிம் 193, 193 இப்னு மாஜா 4312 தாரமீ 53 அஹ்மது 2692, 12153, 12824, 13562, 13590

 

🔶மஃஸர் மைதானத்தில் முஃமின்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனை செய்துவிட்டு ஒவ்வொரு இறைதூதர்களிடத்திலும் சென்று எங்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுங்கள் என்று கோருவார்கள் என்றும் அந்த பரிந்துரைகள் மறுக்கப்படும் என்றும் இறுதியில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று எங்களுக்காக வேண்டி பரிந்துரை செய்யுங்கள் என்று கோருவார்கள் அச்சமயம் அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி பரிந்துரை செய்ய அனுமதி கேட்க அனுமதி வழங்கப்படும்.

 

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மஃஸர் மைதானத்தில் ஏனைய நபிமார்கள் ஷபாஅத் பரிந்துரை செய்ய முன் வரவில்லை என்ற காரணத்தால்! அவர்களுக்கு பரிந்துரை இல்லை என்று மேற்கூறிய ஹதீஸை வைத்து கூற முற்படுவது முற்றிலும் தவறாகும். கீழ் கானும் ஹதீஸை கூர்ந்து கவனியுங்கள்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன் முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 6079 திர்மிதி 3148 அபூதாவுது 4675 இப்னு மாஜா 4308

 

🔶முதன் முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன் முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே என்ற கருத்தை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்! ஆரம்ப பரிந்துரை ஷபாஅத் குப்ரா எனும் மாபெரும் பரிந்துரையாகும். இது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரயோத்திகமாக கொடுக்கப்பட்டது. இந்த ஷபாஅத் பரிந்துரை முடிந்த பின்னர் தான் ஏனைய நபிமார்கள் நல்லடியார்கள் மலக்குகள் அது அல்லாத சாலிஹான அமல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஷபாஅத் ஷுஹ்ரா சிறிய பரிந்துரை செய்ய முடியும் என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ஷபாஅத் ஷுஹ்ரா பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

♦️1) நகரவாசிகளுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ عِمْرَانَ ابْنِ حُصَيْنٍ رَضِي اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” (இந்த) முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் நரக விடுதலை பெற்றோர் என்று பெயரிட்டு அழைக்கப்படுவார்கள்.

 

அறிவிப்பவர் :- இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 6566

 

♦️2) அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் மரணிப்பவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு, எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்.

 

அறிவிப்பவர் :- அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 338

 

♦️3) பாவம் புரிந்தவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُيِّرْتُ بَيْنَ الشَّفَاعَةِ وَبَيْنَ أَنْ يَدْخُلَ نِصْفُ أُمَّتِي الْجَنَّةَ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ لِأَنَّهَا أَعَمُّ وَأَكْفَى أَتُرَوْنَهَا لِلْمُتَّقِينَ لَا وَلَكِنَّهَا لِلْمُذْنِبِينَ الْخَطَّائِينَ الْمُتَلَوِّثِينَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது சமுதாயத்தில் பாதி நபர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பது, அல்லது பரிந்துரை செய்வது (இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும்) தேர்வு செய்யும் உரிமை எனக்கு (இறைவனால்) வழங்கப்பட்டது. நான் பரிந்துரை செய்வதைத் தேர்வு செய்தேன். ஏனென்றால் அது தான் நிறைவானதாகவும், விசாலமானதாகவும் உள்ளது. அந்தப் பரிந்துரை இறையச்சமுள்ளவர்களுக்கு என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லை நிச்சயமாக அது பாவக்கறை படிந்த பாவிகளுக்கே உரியது.

 

அறிவிப்பவர் :- அபூ மூஸா அல் அஸ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4301

 

♦️4) பெரும்பாவம் புரிந்தவர்களுக்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது சமுதாயத்தில் பெரும்பாவம் புரிந்தவர்களுக்கு எனது ஷபாஅத்து பரிந்துரை உண்டு.

 

அறிவிப்பவர் :- அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2359

 

♦️5) பாங்கு துஆ ஓதுவதன் மூலம் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ

 

[اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும் அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 616 திர்மிதி 211

 

பாங்கு துஆ

  اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمـدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة العالية الشريفة وابعثه مقاما محمودن الذي وعدته وارزقنا شفاعته وأوردنا خوضه يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله على محمد و اله وصحبه أجمعين والحمد لله رب العالمين 

 

அல்லாஹும்ம றப்ப ஹாதிஹித் தஃவததித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமதி ஆத்தி ஸய்யிதனா முஹம்மதனில் வஸீலத்த வல்பழீலத்த வத்தரஜதர் ரபீ அத்தல் ஆலியத்தஷ் ஷரீபத்த, வப்அதுஹு மகாமன், மகுமூதனில்லதீ வஅத்தஹுவர் ஜுக்னா, ஷுபா அதஹு வஅவ்ரித்னா ஹவ்ழஹு யவ்மல்கியா மத்தி, இன்னக்க லாதுக்லிபுல் மீஆத் வஸல்லல்லாஹு அலா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மான் வல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன். 

 

🔶குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமையில் செய்யும் மாபெரும் ஸபாஅத்” நமக்காக வேண்டி இறைவனிடம் பரிந்து பேசுவார்கள் இதற்கும் வஸீலா என்றும் கூறப்படும் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்

 

♦️6) மதீனா நகரில் மரணிப்பவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنِ ابْنِ عُمَر رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَمُتْ بِهَا فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் புனித மதீனாவில் மரணிப்பதற்கான பாக்கியம் கிடைத்தால் அவர் அங்கேயே மரணிக்கட்டும். ஏனென்றால் அங்கு மரணிப்பவர்களுக்கு நிச்சயமாக நான் ஷபாஅத் பரிந்துரை செய்வேன்.

 

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி3917 இப்னு மாஜா 3112 அஹ்மத் 5437 மிஷ்காத் 240

 

♦️7) அஸ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ் என்று பாங்கில் கூறியதை செவிமடுத்து இரண்டு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு அவர்களின் கண்களில் வைத்து தடவிக் கொள்பவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيق رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ لَمَّا سَمِعَ قَوْلِ الْمُؤَذِّنِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّه قَالَ هَذَا وَقَبَّلَ بَاطِنَ الأُنْمُلَتَيْنِ السَّبَّابَتَيْنِ وَمَسَحَ عَيْنَيْهِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَعَلَ مِثْلَ مَا فَعَلَ خَلِيلِي فَقَدْ حَلَّتْ عَلَيْهِ شَفَاعَتِي

 

நிச்சயமாக அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஅத்தின் ,”அஸ்ஹது அன்ன முஹம்மதன் ரஸூலுல்லாஹ்” என்று (பாங்கில்) கூறியதை செவிமடுத்த போது அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் இரண்டு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு அவர்களின் கண்களில் வைத்து தடவினார்கள். அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் தோழர் செய்தது போல் யார் செய்கிறாறோ அவருக்கு எனது ஷபாஅத்து கிடைத்து விட்டது.

 

ஆதாரம் :- பிர்தௌஸி, மகாஸித் அல் ஹஸனா 1021

 

♦️8) இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளா ஷரீப் கப்ரை ஸியாரத் செய்பவர்களுக்கு அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய கப்ரை ஸியாரத் செய்தாரோ அவருக்கு என்னுடைய ஷபாஅத் பரிந்துரை கட்டாயம் ஆகிவிட்டது.

 

அறிவிப்பவர் :- இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தாரகுத்னி 2695

 

♦️9) ஸுன்னத்தை எடுத்து நடப்பவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

مَنْ تَرَكَ سُنَّتِي لَمْ يَنَلْ شَفَاعَتِي

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது ஸுன்னத்தை விட்டவர் எனது ஷபாஅத் பரிந்துரையைப் பெறமுடியாது.

 

ஆதாரம் :- தப்ரானி” முஃஜமுல் கபீர் 2443 துர்ருல் முக்தார் 846 மேற்கூறிய செய்தி ஆதாரம் அற்றதாகும்.

 

♦️10) அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் என்ற ஸலவாத்தை ஓதுகின்றவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ رُوَيْفِعِ بْنِ ثَابِت رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَالَ اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ… وَجَبَتْ لَهُ شَفَاعَتِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் என்ற (ஸலவாத்தை ஓது)கிறார்களோ அவர்களுக்கு என்னுடைய ஷபாஅத் பரிந்துரை கடமையாகி விட்டது.

 

அறிவிப்பவர் :- ருவைபி இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபரானி” முஃஜமுல் கபீர் 4480

 

♦️11) காலையிலும், மாலையிலும் ஸலவாத்து ஓதுகின்றவர்களுக்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

عَنْ أَبِي الدَّرْدَاء رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ حِينَ يُصْبِحُ عَشْرًا وَحِينَ يُمْسِي عَشْرًا أَدْرَكَتْهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யார் காலையிலும், மாலையிலும் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

அறிவிப்பவர் :- அபுத்தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தபரானி” முஃஜமுல் கபீர் 854

 

♦️12) மீலாது நபி கொண்டாடும் யாவருக்கும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரை கிடைக்கும்.

 

ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ عنه ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻳﺤﺪﺙ ﺫﺍﺕ ﻳﻮﻡ ﻓﻰ ﺑﻴﺘﻪ ﻭﻗﺎﺋﻊ ﻭﻻﺩﺗﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻘﻮﻡ ﻓﻴﺴﺘﺒﺸﺮﻭﻥ ﻭﻳﺤﻤﺪﻭﻥ ﺍﻟﻠﻪ ﻭﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻴﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﺎﺫﺍ ﺟﺎﺀ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺣﻠﺖ ﻟﻜﻢ ﺷﻔﺎﻋﺘﻰ

 

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவளுடைய வீட்டிலே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி அந்த கூட்டத்திற்கு மத்தியில் பேசியது மட்டுமின்றி அதன் மூலம் அவர்கள் சந்தோஷம் அடைந்தார்கள், அவர்களை புகழ்ந்தார்கள், அவர்கள் மீது ஸலவாத்து கூறினார்கள், அச்சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது அவர்கள் கூறினார்கள். என்னுடைய ஷபாஅத் பரிந்துரை உங்களுக்கு கடமையாகி விட்டது என்றார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மஜ்மாஹ் அல் பதாவா அல் அஸீஸிய்யா 210

 

🔶குறிப்பு :- ஷபாஅத் குப்ரா எனும் மாபெரும் பரிந்துரை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே பிரயோத்திகமாக கொடுக்கப்பட்டது. அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் மரணம் அடைந்தவர்களுக்கு அவனின் அனுமதி கொண்டு நாடியவர்களுக்கு அவர்கள் விரும்பிய பிரகாரம் ஷபாஅத் பரிந்துரை செய்வார்கள். மேலும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத் பரிந்துரைக்கு முன்னர் அவர்கள் ஷபாஅத் பரிந்துரை செய்ய முன்னர் எந்த விதத்திலும் நபிமார்கள் நல்லடியார்கள் மலக்குகள் அது அல்லாத சாலிஹான அமல்கள் அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் பரிந்துரை செய்ய முடியாது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் ஷபாஅத் ஷுஹ்ரா எனும் சிறிய பரிந்துரை ஏனைய நபிமார்கள், நல்லடியார்கள், மலக்குகள், அது அல்லாத சாலிஹான நல்லமல்கள் என்பனவும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மறுமை நாளில் செய்யும் பரிந்துரையாகும். இவைகளை பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

 

Facebook :- யா சைஹு யா ரிபாயி
Facebook pages manager :- அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.