தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு செய்யும் முறையும் துஆவும் 

455

தொழுகையில் (ஸஜ்தா ஸஹ்வு) செய்யும் முறையும் துஆவும்  

 

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمُ الظَّهْرَ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ كَبَّرَ وَهُوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ سَلَّمَ 

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். 

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு புஹைனா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 829 முஸ்லிம் 571  

 

கீழ் விபரிக்கப்படும் ஐந்து காரியங்களில் ஏதாவது ஏற்படுமிடுத்து மறதிக்காக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும். 

 

1) அப்அழு ஸுன்னத்துக்களில் ஒன்றை விட்டு விடல்.  

 

2) அவற்றில் ஒன்றை விட்டு விட்டதாகச் சந்தேகம் ஏற்பட்டால். 

 

3) ஆரம்ப தக்பீரும், ஸலாமும் தவிர ஏனைய சொல்லாலுள்ள பர்ளுகளை நிறைவேற்ற வேண்டிய இடமல்லாத வேறு இடத்தில் நிறைவேற்றல்.  

 

4) ஞாபகமாய்ச் செய்தால் தொழுகை காரியங்களை மறதியாகச் செய்தல். முறியும் என்ற  

 

5) தான் தொழுத தொழுகையின் ரக் அத்துக்களில் சந்தேகம் ஏற்பட்டால்.  ஸஜ்தா ஸஹ்வு செய்யும் முறை தொழுகையில் கடைசியில் கொடுக்க முன்னதாக இரண்டு ஸுஜூது செய்ய வேண்டும்.

 

அந்த ஒவ்வொரு ஸுஜுதிலும்

 

سُبْحَانَ مَنْ لا يَنَامُ وَلا يَسْهُو

 

ஸுப்ஹான மல்லா யனாமு வலா யஸ்ஹு என்று ஓதிக் கொள்ள வேண்டும். 

 

இதன் பொருள் :- மறதியும் நித்திரையுமில்லாத நாயனை நான் துதிக்கிறேன் என்று மூன்று முறை சொல்லி பின்பு ஸலாம் கொடுக்க வேண்டும். 

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.