ஸஹாபாக்களுடைய காலமும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையும்

64

ஸஹாபாக்களுடைய காலமும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كُنَّا نَقُومُ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِعِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرِ 

 

رواه البيهقي 5409 وغيره بالإسناد الصحيح وصحح إسناده السبكي في شرح المنهاج وعلي القاري في شرح الموطأ قلت في سنده أبو عثمان البصري واسمه عمرو بن عبد الله

 

நாங்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் இருபது ரக்அத்துகள் தொழுக்கூடியவர்களாக இருந்தோம் மேலும் வித்ரும் தொழக்கூடியவர்களாக இருந்தோம்.

 

அறிவிப்பவர் :- ஸாயிப் பின் யஸீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 5409

 

ஸாயிப் பின் யஸீத் வழியாக மேற்கூறப்பட்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த செய்தி ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானது என்று இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “மஃரிபாவில்” கூறியுள்ளார்கள் அது போண்று “ஷரஹுன்னிகாயா பாகம் 1 பக்கம் 102” அது போன்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் (ﺑﺈﺳﻨﺎﺩ ﺻﺤﻴﺢ) ஆதாரப்பூர்வமான செய்தி என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள் “அல் குலசா அல் அஹ்கம் 1961” மேலும் இமாம் சுப்கி ரஹ்மத்துல்லாஹ் அவர்களுடைய “ஷரஹ் மின்ஹாஜ்லும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

 

عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً

 

رواه البيهقي 2/ 496 وصحح إسناده النووي وغيره قلت في إسناده أبو عبد الله بن فنجويه الدينوري

 

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் ஸஹாபா பெருமக்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுது வந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸாயிப் பின் யஸீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 2/496

 

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தியாகும் இதனை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் உண்மையாளர்கள். குறைகூற பெறாதவர்கள் என்பதாக இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “தல்கிஸுல் ஹபீர்” என்ற நூல் 265 இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “மஜ்மூஹ்” எனும் நூல் 4 / 3 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ أَنَّهُ قَالَ: كَانَ النَّاسُ يَقُومُونَ فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي رَمَضَانَ بِثَلَاثٍ وَعِشْرِينَ رَكْعَةً

 

رواه البيهقي 4394 رواه مالك في “الموطأ” 1/115 إسناده صحيح, وقال النووي في “المجموع” 4/33

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில் மக்கள் இருபத்தி மூன்று ரக்அத்துகள் நின்று தொழக் கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- யஸீத் இப்னு ரூமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி 4394

 

இந்த ஹதீஸில் யஸீத் இப்னு ரூமான் இடம் பெறுகிறார். இவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் பிறந்தவர் கிடையாது என்பது போலி தவ்ஹீத் வாதிகளின் ஓர் மடத்தனமான வாதமாகும்.

 

யஸீத் இப்னு ரூமான் அவர்களும் ஸாயிப் இப்னு யஸீத் அவர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். ஸாயிப் இப்னு யஸீத் அவர்கள் யஸீத் இப்னு ரூமான் அவர்களுடைய காலத்தில் தராவீஹ் இருபது ரக்அத்துகள் நடைமுறையில் இருந்தது என்று கூறுகிறார்கள் அதே சமயத்தில் ஸாயிப் இப்னு யஸீத் அவர்களும் யஸீத் இப்னு ரூமான் அவர்களும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்தில் தராவீஹ் தொழுகை இருபது ரகாத்துக்கள் நடைமுறையில் இருந்ததாக இருவரும் ஒரு கருத்திலேயே அறிவிப்பு செய்கிறார்கள் மேலும் இவர்கள் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் ஆசிரியரும் ஆவார்கள் என்பதாக “ரிஜாலில் முஅத்தா” 42 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

யஸீத் இப்னு ரூமான் என்பவர் நம்பிக்கையானவர் நேர்மையானவர் குறைகூறப் பெறாதவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்களான இமாம் நஸாயி ரஹ்மத்துல்லாஹ், இமாம் இப்னு முயீன் ரஹ்மத்துல்லாஹ், இன்னும் இது போன்ற பலர்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். என்று “ரிஜாலுல் முஅத்தா” என்ற நூல் 42 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً

رواه بن أبي شيبة 7567

நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (மக்களுக்கு) இருபது ரக்அத்துகள் தொழுவிப்பதற்காக ஒரு நபரை ஏவினார்கள்.

 

அறிவிப்பவர் :- யஹ்யா பின் ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு அபீஷைபா 7567

 

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كَانُوا يَقُومُونَ عَلَى عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً قَالَ : وَكَانُوا يَقْرَءُونَ بِالْمَئِينِ وَكَانُوا يَتَوَكَّئُونَ عَلَى عِصِيِّهِمْ فِي عَهْدِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنْ شِدَّةِ الْقِيَامِ

رواه البيهقي 2/496 رقم الأثر 4801 ، وابن الجعد في مسنده 2825 . هذا إسناد صحيح رجاله كلهم عدول ثقات، وصحح إسناده النووي في المجموع، والعراقي في طرح التثريب، والسيوطي في المصابيح، وقال المباركفوري في التحفة: صحح إسناده النووي وغيره

(உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் தராவீஹ் இருபது ரக்அத்துகள்) உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் மக்கள் இருபது ரக்அத்துகள் தொழுதுவந்தார்கள். நூரு நூரு ஆயத்துகள் கொண்ட சூராவை ஓதினார்கள். உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் எந்தளவு தொழுவார்கள் என்றால். நிற்பதன் சிரமத்தினால் குச்சியின் மீது தாங்கி இருப்பார்கள்.

 

அறிவிப்பாளர் :- ஸாயிப் பின் யஸீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி பாகம் 2 பக்கம் 496

 

இந்த ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமான செய்தியாகும் இதன் அறிவிப்பார்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதாக இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “மஜ்மூஹ்” என்ற நுல் 4/ 32 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَدَعَا الْقُرَّاءَ فِي رَمَضَانَ فَأَمَرَ مِنْهُمْ رَجُلًا يُصَلِّي بِالنَّاسِ عِشْرِينَ رَكْعَةً ، قَالَ وَكَانَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ يُوتِرُ بِهِمْ

رواه البيهقي 4396

ரமழானில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிமார்களை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு இருபது ரக்அத்துகள் (தராவீஹ்) தொழுகை நடத்தும்படி பணித்தார்கள். (பின்னர்) வித்ரை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ அப்துர் ரஹ்மான் ஸுலமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் ஸுனன் பைஹகி 4396

 

أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَمَرَ أَنْ يُصَلِّيَ التَّرَاوِيحَ عِشْرِينَ رَكْعَةً وَعَلَى أَنَّهُ رَضِيَ اللَّهُ عَنْهُ صَلَّى التَّرَاوِيحَ عِشْرِينَ رَكْعَةً

 

رواه البيهقي ,2/499

 

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரமழானில் இருபது ரக்அத்துகள் தொழும் படி ஏவினார்கள் மேலும் நிச்சயமாக அவர்கள் தராவீஹ் இருபது ரக்அத்துகளை தொழுது வந்தார்கள்

 

ஆதாரம் பைஹகி 2 / 499

 

عَنْ أَبِي الْحَسْنَاءِ عَن عَليّ، رَضِيَ اللَّهُ عَنه أَنه أَمَرَ رَجُلا يُصَلِّي بهم رَمَضَان عشْرين رَكْعَة

رواه بن أبي شيبة 7566

நிச்சயமாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (மக்களுக்கு) இருபது ரக்அத்துகள் தொழுவிப்பதற்காக வேண்டி ஒருவரை ஏவினார்கள்.

 

அறிவிப்பவர் :- அபுல் ஹஸ்னா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு அபீஷைபா 7566

 

عَنْ أَبِي الْحَسْنَاءِ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَمَرَ رَجُلًا أَنْ . يُصَلِّيَ بِالنَّاسِ خَمْسَ تَرْوِيحَاتٍ عِشْرِينَ رَكْعَةً

رواه بن أبي شيبة 7568

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருபது ரகாத்துக்களையும் ஐந்து தர்வீஹ்களில் தொழுகை நடத்தும் படி ஒரு மனிதரைப் பணித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபுல் ஹஸ்னா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு அபீஷைபா 7568

 

عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي لنا فِي شهر رَمَضَان فَيَنْصَرِف وَعَلِيهِ ليل، قَالَ الْأَعْمَش: كَانَ يُصَلِّي عشْرين رَكْعَة ويوتر بِثَلَاث

رواه العيني في شرحه صحيح البخاري وذكر إسناده العيني في عمدة القاري 8/ 246 وهذا إسناد صحيح

இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் இருபது ரக்அத்துகள் தொழுதுள்ளார்கள். என்று ஜைத் இப்னு வஹப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (மேலும்) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (எங்களோடு) இருபது ரக்அத்துகளும் மூன்று வித்ரும் தொழுவார்கள். இரவு இருக்கும் போதே திரும்புவார்கள் என்று அஃமஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

 

ஆதாரம் ஸஹீஹ் புஹாரி விரிவுரை ஐனி 3 / 249 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானதாகும்

 

عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ : كَانَ أُبَيُّ بْنُ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي بِالنَّاسِ فِي رَمَضَانَ بِالْمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً ، وَيُوتِرُ بِثَلَاثٍ, رواه ابن أبي شيبة في “المصنف “2/163

إسناده صحيح ، عبد العزيز بن رفيع ثقة روى عن جمع من الصحابة ، وحسن هو الحسن بن صالح ثقة ، وحميد بن عبد الرحمن من رجال مسلم

உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவில் மக்களுக்கு இருபது ரக்அத்துகளும் மூன்று வித்ரும் தொழ வைத்து கொண்டிருந்தார்கள் .

 

அறிவிப்பவர் :- அப்துல் அஸீஸ் இப்னு ருபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் முஸன்னப் இப்னு அபீஷைபா 2 /163 ஹதீஸ் ஸஹீஹ் ஆதாரப்பூர்வமானதாகும்.

 

عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ كَانَ يَؤُمُّ النَّاسَ فِي رَمَضَانَ بِاللَّيْلِ بِعِشْرِينَ رَكْعَةً وَيُوتِرُ بِثَلَاثٍ

رواه بن أبي شيبة 7570

ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரமழானுடைய இரவில் மக்கள் இருபது ரக்அத்களும் மேலும் வித்ரு மூன்று ரக்அத்துகளும் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபீ இஸ்ஹாக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு அபீஷைபா 7570

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ

رواه بن أبي شيبة 7565

ஸுதைர் இப்னு சக்ல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரமழான் மாதத்தில்
இருபது ரக்அத்துகளும் வித்ரும் தொழுவிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு அபீஷைபா 7565

 

عَنْ نَافِعِ بْنِ عُمَرَ قَالَ : كَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي بِنَا فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً

رواه بن أبي شيبة 7568

அபீ முலைக்கா ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் எங்களுக்கு ரமழான் மாதத்தில் இருபது ரக்அத்துகள் தொழுவிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

 

அறிவிப்பவர் :- நாபிஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் இப்னு அபீஷைபா 7568

 

மேற்கூறப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வபாத்திற்கு பிறகு சத்திய ஸஹாபாக்களுடைய காலம் அதாவது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்திலும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்திலும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடையை ஆட்சி காலத்திலும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி காலத்திலும் அது அல்லாத ஆட்சி கால கட்டத்திலும் தராவீஹ் என்ற பெயரில் அழைக்கப்படும் கியாமுர் ரமழான் தொழுகை இருபது ரக்அத்துகள் மாத்திரமே நடைமுறையில் இருந்ததை நாம் தெளிவான முறையில் காணமுடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.