ஸஹாபாக்களை பின்பற்றவது அவசியமாகும்
ஸஹாபாக்களை பின்பற்றவது அவசியமாகும்
📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அத்தகையோரின் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
சூரா தவ்பா ஆயத் 100
عَنْ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது உம்மத்தில் சிறந்தவர்கள் எனது நூற்றாண்டில் வாழ்பவர்களாவர். பின்னர் அவர்களைப் பின்பற்றியோர்கள். பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆவார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 2652 முஸ்லிம் 2533 மேற்கூறிய ஹதீஸை பற்றி விபரிக்கும் போது
قال النووي رحمه الله : الصَّحِيحُ أَنَّ قَرْنَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الصَّحَابَةُ ، وَالثَّانِي : التَّابِعُونَ ، وَالثَّالِثُ : تَابِعُوهُمْ” انتهى من شرح النووي على مسلم ” 16/85
முற்காலம் சிறந்த காலம் என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் அதில் ஆரம்ப காலம் ஸஹாபாக்கள் வாழ்ந்த காலம் அடுத்த காலம் தாபீஈன்கள் வாழ்ந்த காலம் அதற்கடுத்த காலம் தபஅத்தாபீஈன்கள் வாழ்ந்த காலம் என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்
ஆதாரம் ஸரஹ் முஸ்லிம் 16 / 85
சத்திய ஸஹாபாக்கள் வாழ்ந்த காலம் அவர்களை பின்தொடர்ந்த தாபீஈன்கள் வாழ்ந்த காலம் அவர்களை பின்தொடர்ந்த தபஅத்தாபீன்கள் இவ்வாறான சீதேவிகள் வாழ்ந்த முற்காலங்களில் வாழ்ந்து ஸஹாபாக்கள் அறிஞர் பெருமக்களை பற்றிப் பிடித்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ سَعِيدِ بْنِ أَبِى بُرْدَةَ عَنْ أَبِى بُرْدَةَ عَنْ أَبِيهِ قَالَ… النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ
حديث صحيح
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால் வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும். அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும்.
அறிவிப்பவர் :- ஸயீத் இப்னு அபூ புர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் முஸ்லிம் 6629
என்னுடைய தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும் அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும் என்ற மேற்கூறிய ஹதீஸின் கருத்தை உற்று நோக்கினால் ஸஹாபாக்கள் வாழ்ந்து மறைந்த பின்னரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அவர்களை தாபீஈன்கள் தபஅத்தாபீன்கள் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் நல்ல முறையில் பின்தொடர்ந்த சென்றார்கள். அதற்கு மாற்றாமாக வஹாபிஷ ஷீஆ அமைப்புக்கள் அத்தையை ஸஹாபாக்களின் வழிமுறைகளை விட்ட காரணத்தினால் பல பிரச்சினை பித்னாக்கள் முஸ்லிம்களிடத்தில் அதிகரித்து காணப்படுவதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ، إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا : وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي
رواه الترمذي 2641 وحسَّنه ابن العربي في أحكام القرآن 3 / 432 وصححه الألباني في السلسلة الصحيحة
பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக என்னுடைய சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் தன் தாயிடம் பகிரங்கமாக (தவறான எண்ணத்தில்) வந்ததைப் போன்று என் சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள். பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு பிரிவுகளாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தைத் தவிர என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரு கூட்டம்) எது யா ரஸுலல்லாஹ்! என்று கேட்டனர். அதற்கு அவர்கள், நானும் எனது தோழர்களும் எந்த (பாதை)யை தேர்ந்தெடுத்தோமோ அந்த (பாதை)யில் இருப்பவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2641 ஹாகிம் 444
சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அந்த ஒரு கூட்டம் எது யா ரஸுலல்லாஹ்! என்று கேட்டனர். அதற்கு அவர்கள், நானும் எனது தோழர்களும் எந்த பாதையை தேர்ந்தெடுத்தோமோ அந்த பாதையில் இருப்பவர்கள் என்று கூறினார்கள். இங்கு நாம் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற பாதை என்று வரும் போது (ஸுன்னா)வை குறிக்கும். ஸுன்னத் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கிகாரம் என்று வரும் போது இதில் குர்ஆன் ஹதீஸ்கள் முழுமையாக அடங்கிவிடும். அடுத்து ஸஹாபாக்களின் பாதை (ஜமாஅத்)தை குறிக்கும். குர்ஆன் ஹதீஸ்களை எவ்வாறு புரிந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆழமான விஷயங்களை அறிந்து அதன் நடந்தவர்கள் தான் ஸஹாபாக்கள். எனவே குர்ஆன் ஹதீஸை ஒருவனோ அல்லது ஒரு கூட்டமோ ஒழுங்கு முறைப்படி பின்பற்ற வேண்டும் என்றால் அவர்கள் ஸஹாபாக்களின் வழிமுறைகளை பற்றி பிடித்து கொள்வது அவசியமாகும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلاءِ بْنِ زَبْرَ عَنْ يَحْيَى بْنِ أَبِي الْمُطَاعِ قَالَ سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ بَقِيَ بَعْدِي مِنْكُمْ فَسَيَرَى اخْتِلافًا شَدِيدًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ عُضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ
هذا حديث حسن صحيح وقال الترمذي : حسن صحيح وأخرجه ابن ماجه في إسناده صحيح
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் :- இர்பாள் இப்னு ஷாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம்
திர்மிதி 2676, இப்னு மாஜா 42, அபூதாவுத் 4607
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தை எவ்வாறு பற்றி பிடிப்போமோ அதே போன்று நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான (ஸஹாபா) கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.
عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابِي كالنُّجُومِ بأَيِّهِم اقْتَدَيْتُم اهْتَدَيْتُم
وهذا إسناد ضعيف وأما قول الشعراني في الميزان ( 1/28) : وهذا الحديث وإن كان فيه مقال عندالمحدثين فهو صحيح عند أهل الكشف
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய தோழர்களான ஸஹாபாக்கள் நட்சத்திரங்களுக்கு சமமானவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின் தொடர்ந்தாலும் நேர்வழியைப் பெற்று விட்டீர்கள்.
அறிவிப்பவர் :- ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் மிஷ்காத் 6018
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ
قال المنذري : وأخرجه ابن ماجه في إسناده صحيح
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் நிச்சயமாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை வைத்து விட்டான் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் அபூதாவூத் 2962 இப்னு மாஜா 108 திர்மிதி 3682
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي : أَبِي بَكْرٍ، وَعُمَرَ
أخرجه الترمذي في مناقبه قوله هذا حديث حسن وصححه الألباني وقال شعيب الأرناؤوط حديث حسن
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்பதாக கூறி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் சுட்டிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம்
திர்மிதி 3805 அஹ்மது 23245
சத்திய ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்பதற்கு திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலிருந்து தெளிவான முறையில் பல ஆதாரங்கள் உள்ளதால் சத்திய ஸஹாபாக்களை தாராளமாக பின்பற்றலாம். அதற்கு இஸ்லாம் பூரண அனுமதி அளித்துள்ளதை நம்மால் சர்வ சாதனமாக புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பு :- சத்திய ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சொல்லப்பட்ட பின்பும் பின்பற்றக்கூடாது எனறு ஓர் கூட்டம் கூறினால் அவர்கள் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியாது அவர்கள் வழிதவரிய வழிகெட்ட கூட்டங்களில் நின்றுமுள்ளவர்கள் என்ற கருத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்