ஸஹாபா பெருமக்களின் சிறப்புக்களும் அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியமும்

75

நபி முஹம்மத் ﷺ அவர்களின் உத்தமத் தோழர்களான ஸஹாபாக்களின் சிறப்புக்கள்

 

الصحابي :- هو من رأى النبي صلى الله عليه وسلم مؤمناً به ومات على ذلك

التاريخ والسيرة, السيرة النبوية, في ” الإحكام 5//89

 

ஸஹாபாக்கள் என்றால் :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து பரிசுத்த ஏகத்துவ கலிமாவை உறுதியாக ஈமான் கொண்டு அதே நிலையில் எவர்களொல்லாம் மரணித்தார்களோ அவர்களுக்கு மாத்திரமே உத்தமத் தோழர்களான ஸஹாபாக்கள் என்று கூரபப்படுகிறது.

 

அது அல்லாமல் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்துள்ளார்கள் ஆணால் அவர்களை சந்திக்கவில்லை” மேலும் அவர்களை சந்தித்து ஈமான் கொண்டு அதே நிலையில் அவர்கள் மரணிக்க வில்லை என்றால் அவர்களுக்கு உத்தமத் தோழர்களான ஸஹாபாக்கள் என்று கூறப்பட மாட்டாது என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

عَنْ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ النَّاسِ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எனது உம்மத்தில் சிறந்தவர்கள் எனது நூற்றாண்டில் வாழ்பவர்களாவர். பின்னர் அவர்களைப் பின்பற்றியோர்கள். பின்னர் அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆவார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் புஹாரி 2652 முஸ்லிம் 2533 திர்மிதி 3859

 

قال النووي رحمه الله الصَّحِيحُ أَنَّ قَرْنَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الصَّحَابَةُ وَالثَّانِي التَّابِعُونَ وَالثَّالِثُ تَابِعُوهُمْ

 

மேற்கூறிய ஹதீஸில் முற்காலம் சிறந்த காலம் என்பதாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஆரம்ப காலம் ஸஹாபாக்கள் வாழ்ந்த காலம் அடுத்த காலம் தாபீஈன்கள் வாழ்ந்த காலம் அதற்கடுத்த காலம் தபஅத்தாபீஈன்கள் வாழ்ந்த காலமாகும்.

 

அறிவிப்பு :- இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். ஆதாரம் ஸரஹ் முஸ்லிம் 16/85

 

عَنْ سَعِيدِ بْنِ أَبِى بُرْدَةَ عَنْ أَبِى بُرْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ….النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நட்சத்திரங்கள் வானத்துக்குப் பாதுகாப்பாகும். அவை அழிந்து விட்டால் வானத்துக்கு வாக்களிக்கப் பட்டது வந்து விடும். நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாகும். நான் சென்று விட்டால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும். என் தோழர்கள் என் சமூகத்துக்குப் பாதுகாப்பாகும்.  அவர்கள் சென்று விட்டால் எனது சமூகத்துக்கு வாக்களிக்கப்பட்டது வந்து விடும்.

 

அறிவிப்பவர் :- அபூ புர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம். முஸ்லிம் 2531 அஹ்மது 19566

 

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.

 

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் புஹாரி 3673 முஸ்லிம் 2540, 2541 அபூ தாவூத் 4658

 

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ خَطَبَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالْجَابِيَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  احْفَظُونِي فِي أَصْحَابِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘எனது தோழர்களில் என்னைப் போணுங்கள்’ என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அறிவிப்பவர் : உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 2363

 

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَصْحَابيِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என்னுடைய ஸஹாபிகளை சங்கை படுத்துங்கள் கண்ணியப்படுத்துங்கள் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அறிவிப்பவர் :- உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 2345

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي لاَ تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் தோழர்களை (நிந்திக்கும்) விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.  எனக்குப் பின்பு  அவர்களைக் குறை கூறுவதில் ஈடுபடாதீர்கள். யார் அவர்களைப் பிரியப் படுவாரோ என் மீதான பிரியத்தினாலே அவர்களை பிரியப்படுகிறார். யார் அவர்களை கோபப்படுகிறாரோ என் மீதான கோபத்தினாலேயே அவர்களின் மீது கோபம் கொள்கிறார். யார்  அவர்களுக்கு நோவினை தருவாரோ அவர் திண்ணமாக எனக்கு நோவினை தந்து விட்டார். எனக்கு நோவினை தந்தவர் திண்ணமாக அல்லாஹ்விற்கு நோவினை தந்து விட்டார். யார் அல்லாஹ்விற்கு நோவினை அளித்தாரோ அல்லாஹ் வெகுவிரைவில் அவர்களை பிடிப்பான்.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு முஅப்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3862 அஹ்மது 20549

 

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَبَّ أَصْحَابِي فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் ஸஹாபிகளை திட்டுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் ,மலக்குகளின் சாபமும் ,மக்களின் சாபம், இன்னும் அனைவரின் சாபம் உண்டாகும் என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் தப்ரானி 2567

 

ஸஹாபா பெருமக்களை பின்பற்றுவதுன் அவசியம்

 

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا  ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

 

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.

சூரா தவ்பா ஆயத் 100

 

♦️முஹாஜிர் என்பது மக்கத்து ஸஹாபாக்களை குறிக்கும். அன்ஸார் என்பது மதீனத்து ஸஹாபாக்களை குறிக்கும். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தமத் தோழர்கள் ஆவார்கள். இவர்களை பின்பற்றுவது அவசியமாகும் என்ற கருத்தை மேற்கூறப்பட்ட ஆயத்தை மூலமாக வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனது உம்மத்தினர் எழுபத்தி மூன்று பிரிவினராகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் (அந்த ஒரு கூட்டம்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் சென்ற பாதையையும் என்னுடைய ஸஹாபிகள் சென்ற பாதையையும் தேர்ந்தெடுத்தவர்கள் என்று பதிலளித்தார்கள்.

 

அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2641

 

عَنْ يَحْيَى بْنِ أَبِي الْمُطَاعِ قَالَ سَمِعْتُ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ بَقِيَ بَعْدِي مِنْكُمْ فَسَيَرَى اخْتِلافًا شَدِيدًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ عُضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய் பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.

 

அறிவிப்பவர் :- இர்பாள் இப்னு ஷாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 2676  இப்னு மாஜா 42 அஹ்மது 17142

 

عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் நீங்கள் பின்பற்றி நடங்கள் என்பதாக கூறி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும்  சுட்டிக் காட்டினார்கள்.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் திர்மிதி 3805

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ

 

குர்ஆன் கூறுகிறது நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.

சூரா நிஸா ஆயத் 59

 

குறிப்பு :- அதிகாரம் வகிப்பவர்களுக்கு கட்டுப்படுங்கள் என்பதன் அர்த்தம் திர்குர்ஆன் ஹதீஸிக்கு முறன் இல்லாத வகையில் அவைகளை தெளிவான முறையில் புரிந்து கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு இஜ்மா கியாஸ் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் சத்திய ஸஹாபாக்கள்” தாபீன்கள்” இமாம்கள்” அவ்லியாக்கள்” அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் அனைவரையும் குறிக்கும் என்பதை மேற்கூறப்பட்ட ஆயத்தை மூலமாக வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.