ஸாலிஹான கணவரின் 80 அடையாளங்கள்

320

ஸாலிஹான கணவரின் என்பது அடையாளங்கள்

 

♦️1) மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்வான்.

♦️2) மார்க்க விஷயத்தில் அதிகம் அதிகம் ஈடுபாடுவான்.

♦️3) மனைவியுடன் மலர்ந்த முகத்துடன் பேசுவான்.

♦️4) வீட்டிற்குள் நுழையும் போது மனமகிழ்ச்சியுடன் மனைவியை நோக்கி ஸலாம் கூறுவான்.

♦️5) மனைவியை எந்த காரணமும் இன்றி சந்தேகம் கொள்ள மாட்டான்.

♦️6) மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்வான்.

♦️7) ஆலோசனை செய்யும் போது மணைவியுடைய ஆலோசனையையும் சரி சமமாக கேட்டுக் கொள்வான்.

♦️8) மணைவி கூறும் விஷயங்களை அழகிய முறையில் செவி சாய்ப்பான்.

♦️9) மணைவி விஷயத்தில் எடுத்தெறிந்து பேச மாட்டான்.

♦️10) நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்வான்.

♦️11) மனைவி கவலையில் இருக்கும் போது அந்த கவலையை அவன் மறக்கடிக்கச் செய்வான்.

♦️12) மணைவி தவறு விடும் போது முகம் சுழிக்க மாட்டான்.

♦️13) இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்வான்.

♦️14) மணைவியை அடிமைப்படுத்தி துன்புறுத்த மாட்டான்.

♦️15) மணைவிக்கு எந்த வகையிலும் மாற்றம் செய்ய மாட்டான்.

♦️16) குடும்பச் செலவை உரிய நேரத்தில் கொடுத்து விடுவான்.

♦️17) தான் உண்ணும் உணவு மற்றும் உடை போன்று மனைவிக்கும் சரி சமமாக கொடுத்து உதவுவான்.

♦️18) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருப்பான்.

♦️19) தன் மனைவி விஷயத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வான்.

♦️20) கண்ணாடி விழுந்திராமல் பார்த்துக் கொள்வது போன்று தன் மனைவியை பார்த்துக் கொள்வான்.

♦️21) மனைவி விஷயத்தில் வீன் சந்தேகம் கொள்ள மாட்டான்,

♦️22) மனைவியுடைய சாதாரண விஷயத்தில் துருவித் துருவி ஆராய மாட்டான்.

♦️23) மனைவியின் குறைகளை சகித்துக் கொள்வான், பரிபூரணமாக ஏற்றுக் கொள்வான்.

♦️24) மனைவியின் குறைகளை முன் வைத்து குத்திக் காட்டிப்பேச மாட்டான்.

♦️25) அவள் விரும்பாத விஷயங்களை அவன் செய்ய மாட்டான்.

♦️26) அவள் முன்னிலையில் பிற பெண்களை பற்றி பேச மாட்டான்.

♦️27) வீட்டு வேலைகளை அவளுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் செய்வான்.

♦️28) மற்றவர்கள் முன்னிலையில் மணைவிக்கு அறிவுரை கூற மாட்டான்.

♦️29) மற்றவர்கள் முன்னிலையில் மணைவியின் குறைகளை எடுத்துக்கூற மாட்டான்.

♦️30) மனைவியுடன் கோபம் கொண்டு அவளை ஒதுக்கி வைக்க மாட்டான்.

♦️31) மனைவி விரும்புவது மார்க்கத்திற்கு உற்பட்டு இருந்தால் அதனை சரிவர நிறைவேற்றுவான்.

♦️32) மனைவியை தவிர வேறெந்த அன்னிய பெண்களையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.

♦️33) ஸாலிஹான ஆண்களிடம் நற்புறவு கொள்வான்.

♦️34) கெட்ட ஆண்களிடம் நற்புறவு கொள்ள மாட்டான்.

♦️35) சம்பந்தம் இல்லாத வீன் பிரச்சினைகளுக்கு செல்ல மாட்டான்.

♦️36) அன்னிய பெண்கள் முன்னிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்வான்.

♦️37) மனைவியுடன் ஒளிவு மறைவு இன்றி நடந்து கொள்வான்.

♦️38) மனைவியுடைய அந்தஸ்து வேறு தன்னுடைய அந்தஸ்து வேறு என்று பிரித்து பார்க்க மாட்டான்.

♦️39) எல்லா நல்ல விஷயங்களிலும் அவளைப் பாராட்டுவான்.

♦️40) மனைவியின் குடும்பத்தாருடன் நல்ல முறையில் நடந்து கொள்வான்.

♦️41) மனைவி தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அருட்கொடையாக பார்ப்பான்.

♦️42) தன் மனைவியின் ஆலோசனை மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவான்.

♦️43) தன் மனைவிக்கு பல சந்தர்ப்பங்களில் அவளின் நற்செயலை வைத்து பாராட்டி பரிசு கொடுத்து மன மகிழ்ச்சிப் படுத்துவான்.

♦️44) தன் மனைவியின் குணங்களை அறிந்து புரிந்துணர்வுடன் நடந்து கொள்வான்.

♦️45) தொழில் செய்யும் இடங்களில் பிரச்சினைகள் கஷ்டங்கள் ஏற்படும் போது அதன் கோபத்தை தன் மனைவியிடம் வெளிப்படுத்த மாட்டான்.

♦️46) தன் மனைவியுடன் வீன் விவாதம் செய்து தர்கித்து கொள்ள மாட்டான்.

♦️47) தன் மனைவியின் முகசாடையை வைத்து அவளுக்குறிய பிரச்சினைகளை அறிந்து கொள்வான்.

♦️48) மார்க்க விஷயத்தில் தவறிழைத்தால் கண்டிப்பான். முழுமையாக வெறுக்க மாட்டான்.

♦️49) என்ன பிரச்சினை வந்த போதும் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க மாட்டான்.

♦️50) தன்னை நம்பி வந்த மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வான்.

♦️51) தன் மனைவியை தீய காரியங்கள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாட்டான்.

♦️52) மனைவியின் பெற்றோர்களை தன் பெற்றோர்கள் போன்று கவணித்துக் கொள்வான்.

♦️53) பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்த அனைத்து சுதந்திரத்தையும் தன் மனைவிக்கு கொடுத்து உதவுவான்.

♦️54) தன் மனைவியை மாதாவிடாய் காலங்களில் வெறுத்து ஒதுக்க மாட்டான்.

56) சமைத்து உணவு பரிமாறும் விஷயத்தில் ஏதும் சிக்கல் ஏட்பட்டு விட்டால் அதனை பொருட்படுத்த மாட்டான்.

♦️56) தன் மனைவியிடம் எங்கே போகிறேன் எப்போதும் வருவேன் என்பதை துல்லியமாக சொல்லிக் கொள்வான்.

♦️57) தன் மனைவியை குடும்பத்தினர்களின் அழைத்துச் செல்வான்.

♦️58) தன் மனைவியை அன்னிய ஆண்களுக்கு அறிமுகப்படுத்த மாட்டான்.

♦️59) தன் மனைவியுடன் ஒன்று சேரும் போது சுத்தமாகவும் வாசனை திரவியம் பூசியவனாகவும் இருப்பான்.

♦️60) தன் மனைவிக்கு பிடிக்கும் ஒரு பொருள் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனமகிழ்ச்சியுடன் அவர்களுக்கு அதனை வாங்கிக் கொடுப்பான்.

♦️61) மனைவி மாதவிடாயாக இருக்கும் போது உடலுறவு கொள்ள மாட்டான்.

♦️62) தன் மனைவியிடம் உடலுறவு கொண்டு சுகம் பாராட்டியது குறித்து பிறர்களிடம் கூற மாட்டான்

♦️63) தன் மனைவி நோயுற்ற நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ள மாட்டான்.

♦️64) உடலுறவின் போது தன் இஷ்டப்படி செயல் படலாம் தன் மனைவியின் ஆசைகளையும் நிறைவேற்றுவான்.

♦️65) தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது அவளை வேறொரு பெண்ணாக கற்பனை செய்ய மாட்டான்.

♦️66) நோன்பு நோற்றிருக்கும் போது உடலுறவு கொள்ள மாட்டான்.

♦️67) இஹ்ராம் அணிந்த பின்னர் உடலுறவு கொள்ள மாட்டான்.

♦️68) கர்ப்பம் தரிப்பதைப் பயந்து இந்திரியத்தை வெளியாக்க மாட்டான்.

♦️69) தன் மனைவியுடன் உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியான மறுகணம் மனைவியை வெறுக்க மாட்டான்.

♦️70) தன் மனைவியின் கையால் அல்லது தனிமையில் இந்திரியத்தை வெளியாற்ற மாட்டான்.

♦️71) சிரமமுடைய கர்ப்பவதியை நிர்ப்பந்தித்து உறவு கொள்ள மாட்டான்

♦️72) உடலுறவின் போது மனைவி வெறுக்கும் செயல்களை ஒரு போதும் செய்ய மாட்டான்.

♦️73) உடலுறவை நோக்கமாகக் கொண்டு ஸலிஹான குழந்தையை எதிர் பார்ப்பான்.

♦️74) பிள்ளைகள் வளர்ப்பதில் அதிகம் அக்கறை செலுத்துவான்.

♦️75) பிள்ளைகள் விஷயத்தில் மனைவியுடன் இணைந்து ஆலோசனை செய்வான்.

♦️76) பிள்ளைகளுக்கும் தன் மனைவிக்கும் மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுப்பான்.

♦️77) மனைவி நோயுற்ற நிலையில் இருக்கும் போது அவளையும் தன் பிளாளைகளையும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வான்.

♦️78) தன் வசதிக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று திருமணம் முடித்த போதும் சரி சமமாக அனைவரிடமும் நடந்து கொள்வான்.

♦️79) ஒருவரை தாழ்த்தி இன்னொருவரை உயர்த்தி பேச மாட்டான்.

♦️80) மனைவி பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சிக் கொள்வான்.

 

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

 

எங்கள் இறைவனே! எங்கள் துணைகளையும், எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாய் திகழச் செய்வாயாக!.

அல்குர்ஆன் :- 25:74

 

عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ؟ قَالَ أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ أَوِ اكْتَسَبْتَ وَلاَ تَضْرِبِ الْوَجْهَ وَلاَ تُقَبِّحْ، وَلاَ تَهْجُرْ إِلاَّ فِي الْبَيْتِ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். யா ரஸுலல்லாஹ்! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, “நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது.

ஆதாரம் :- அபூதாவூத் 1830

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.