ஸாலிஹான மனைவியின் 80 அடையாளங்கள்

509

ஸாலிஹான மனைவியின் என்பது அடையாளங்கள்

 

♦️1) கணவனுக்கு நல்ல முறையில் கட்டுபடுவாள்.

♦️2) மார்க்க விஷயத்தில் அதிகம் அதிகம் ஈடுபாடுவாள்.

♦️3) கணவனை தனது குணங்களால் சந்தோஷப்படுத்துவாள்.

♦️4) தன் அழகை கணவனுக்கு மாத்திரம் வெளிப்படுத்துவாள்.

♦️5) தன் கணவனின் குறைகளை வெளிப்படுத்த மாட்டாள்.

♦️6) தன் மானத்தையும், கணவரின் மானத்தையும் பாதுகாப்பாள்.

♦️7) கண்ணியம் மரியாதை பேணுவாள்.

♦️8) தன்னை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வாள்.

♦️9) மற்ற பெண்களை பற்றி நல்லதும், கெட்டதும் கணவரிடம் சொல்ல மாட்டாள்.

♦️10) கணவர் விஷயத்தில் எப்போதும் அல்லாஹ்விடம் கை ஏந்துவாள்.

♦️11) அன்னிய ஆண்களின் பார்வையை விட்டும் விலகி இருப்பாள்.

♦️12) கணவர் அனுமதி இன்றி வீட்டை விட்டு வெளியேற மாட்டாள்.

♦️13) கணவர் அனுமதி இன்றி வீட்டிற்குள் எவரையும் நுழைய விட மாட்டாள்.

♦️14) கணவர் அனுமதியுடன் வீட்டை விட்டு வெளியேறினால் பர்தாவை பேணுவாள்.

♦️15) நல்ல விஷயங்களை செய்ய கணவருக்கு ஆர்வமூட்டுவாள்.

♦️16) தான தர்மங்களை கஞ்சத்தனம் இன்றி கொடுக்கும் படி ஆர்வமூட்டுவாள்.

♦️17) வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஒரு இடத்தை ஓதுக்கி வைப்பாள்.

♦️18) கணவருடன் கண்ணியமாக பேசுவாள்.

♦️19) தன் பெற்றோர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்வாள்.

♦️20) கணவரின் குடும்பத்திலிருந்து கஷ்டம் ஏற்பட்டாள் அதனை சகித்துக் கொள்வாள்.

♦️21) குழந்தைகளின் விஷயத்தில் அக்கரை செலுத்துவாள்.

♦️22) குழைந்து வளர்ப்பு விஷயத்தில் கணவருடன் ஆலோசனை செய்வாள்.

♦️23) கணவருக்கு மாற்றம் செய்ய மாட்டாள்.

♦️24) கணவன் இல்லாத நேரத்தில் அவரை பற்றி பிறர்களிடம் குறை கூறமாட்டாள்.

♦️25) கணவருடய தேவைகளை பூர்த்தி செய்வாள்.

♦️26) கணவரின் கஷ்டத்தில் ஆறுதல் கூறுவாள்.

♦️27) உள்ளதைக் கொண்டு போதுமாகிக் கொள்ளுவாள்.

♦️28) தன்னுடய தப்பை ஓப்புக் கொள்வாள்.

♦️29) கணவரிடத்தில் எதனையும் மறைக்க மாட்டாள்.

♦️30) கணவர் தப்புச் செய்யும் போது தட்டிக் கேட்பாள்.

♦️31) தப்பை தப்பு என்று சொல்வாள் இருப்பினும் எல்லை மீறி பேச மாட்டாள்.

♦️31) கணவருடய உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வாள்.

♦️32) அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுபடமாட்டாள்.

♦️33) கொடுக்கும் விஷயத்தில் கஞ்சத்தனம் காட்ட மாட்டாள்.

♦️34) உண்மை பேச தயங்க மாட்டாள்.

♦️35) கணவருடன் நல்ல முறையில் அழைத்து பேசுவாள்.

♦️36) தன்னை பற்றி அவதூறு கூறும் போது அதை அல்லாஹ்விடம் பொருப்புச் சாட்டுவாள்.

♦️38) எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்.

♦️39) எதற்கும் அதிகம் ஆசைப்பட மாட்டாள்.

♦️40) போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்.

♦️41) கணவர் விஷயத்தில் அதிகம் அக்கறை செலுத்துவாள்.

♦️42) கணவருக்கு எப்போதும் உதவியாக இருப்பாள்.

♦️43) கணவரின் கஷ்டத்தில் தானும் பங்கு வகிப்பாள்.

♦️44) கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்.

♦️45) கணவர் விஷயத்தில் குறை கூறமாட்டாள், முகம் சுழிக்கமாட்டாள், சலித்து போக மாட்டாள்.

♦️56) எப்போதும் கணவர் முன்னிலையில் மலர்ந்த முகத்துடன் தோற்றமளிப்பாள்.

♦️57) கணவர் மட்டமான ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தாலும் அதனை மனப்பூர்வமாக எடுத்துக் கொள்வாள்.

♦️58) கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

♦️59) தனக்கு பிடிக்காத சின்னச்சின்ன குறைகளை கணவரிடத்தில் கண்டாலும் அதனை பெரிதும் பொருட்படுத்த மாட்டாள்.

♦️60) கணவரின் உழைப்புக்கு ஏற்றவாறு தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்தாட்டுவாள்.

♦️61) கணவரை போன்று பிள்ளைகளையும் தீனுடைய விஷயத்தில் ஆர்வம் ஊட்டுவாள்.

♦️62) கணவரை தாழ்த்தியும் பிறரை உயர்த்தியும் பேச மாட்டாள்.

♦️63) கணவரை தாழ்த்தியும் தன்னை உயர்த்தியும் பேச மாட்டாள்.

♦️64) அன்டை வீட்டார்களை அனுசரித்து வாழ்வாள்.

♦️65) நடத்தை கெட்ட பெண்களிடம் நற்புறவு கொள்ள மாட்டாள்.

♦️66) ஸாலிஹான பெண்களுடன் நட்புறவு கொள்ளுவாள்.

♦️67) கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சுவாள்.

♦️68) கணவர் கஷ்டத்தில் இருக்கும் போது ஆறுதல் படுத்துவாள்.

♦️69) கணவரின் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சியாக வெளிப்படுத்துவாள்.

♦️70) தானும் தன் குடும்பமும் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கை ஏந்துவாள்.

♦️71) தன் குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்று அல்லாஹ்வை அஞ்சுவாள்.

♦️72) கணவரின் பெற்றோர்களை தன் பெற்றோர்கள் போன்று பார்த்துக் கொள்வாள்.

♦️72) வயது முதிர்ந்த நிலையிலும் பெற்றோர்களுக்கு கிதுமத்து செய்வாள்.

♦️73) கணவர் வீட்டை விட்டு வெளியேறும் போது மனமகிழ்ச்சியுன் அல்லாஹ்வை புகழ்ந்து அனுப்பி வைப்பாள்.

♦️74) கணவர் வரும்வரை அவரை எதிர் பார்த்து காத்திருப்பாள்.

♦️75) கணவர் வீட்டிற்கு வரும் போது மனமகிழ்ச்சியுன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவாள்.

♦️76) கணவர் இல்லாத போது தன்னை தான் அலங்கரித்துக் கொள்ள மாட்டாள்.

♦️77) தன் பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுப்பாள்.

♦️78) அல்லாஹ் மற்றும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நேசம் கொள்ளும் படி கணவருக்கும் பிள்ளைகளுக்கும் ஆர்வம் ஊட்டுவாள்.

♦️79) கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் பொழுது நபிமார்கள் நல்லடியார்களின் வரலாறு மட்டுமின்றி அவர்களின் சிறப்புக்களை எடுத்துறைப்பாள்.

♦️80) புனிதமான மாதம் நாட்கள் வந்து விட்டால் கணவரை மட்டுமின்றி பிள்ளைகளையும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் படி ஆர்வம் ஊட்டுவாள். மேலும் புனிதமான இரவுகளில் வணக்க வழிபாடுகளை கொண்டு அலங்கரிப்பாள்.

 

اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ

 

ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்..

அல்குர்ஆன் :- 4:34

 

عَنِ ابْنِ عُمَرُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. أَلاَ أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

ஆதாரம் :- அபூதாவூத்1664

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.