ஹாரூத் மாரூத் என்ற இருவரும் குர்ஆனுடைய பார்வையில் மலக்கா? அல்லது ஷைத்தானா?

486

ஹாரூத் மாரூத் என்ற இருவரும் குர்ஆனுடைய பார்வையில் மலக்கா? அல்லது ஷைத்தானா?

 

A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி ✍️) நூல் 📚 :- [திருக்குர்ஆனுடைய பார்வையில் சூனியமும் சூனியத்தால் பாதிக்கப்பட்டோர்களும்]

 

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ

 

குர்ஆன் கூறுகிறது மேலும், (அந்த யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியைப் பற்றி (அவர்களுக்கு) ஷைத்தான் ஓதிக் (கற்றுக்) கொடுத்திருந்த (சூனியம், மாய மந்திரம் ஆகிய)வைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமானோ “நிராகரிப்பவராக” இருக்கவில்லை; அந்த ஷைத்தான்கள்தான் உண்மையாகவே நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மனிதர்களுக்கு சூனியத்தையும் “பாபிலூன்” (என்னும் ஊரில்) “ஹாரூத்” “மாரூத்” என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். அவ்விரு மலக்குகளோ (அவர்களிடம் சூனியத்தைக் கற்கச்சென்ற மனிதர்களை நோக்கி) “நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவே இல்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் கட்டளையின்றி அதன் மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

சூரா பகரா ஆயத் 102

 

நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக யூதர்கள் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர், அதில் முக்கியமான ஒன்று தான் சூனியம் எனும் ஷைத்தானின் சூழ்ச்சி வேலையாகும். ஷைத்தான்களால் ஓதிக் கற்றுக் கொடுத்திருந்த அதிகமான சூனிய மாய மந்திரங்களை (சூனியக்காரர்கள்) பின்பற்றி வந்தார்கள். மேலும் இவைகளில் சிலவற்றை ஹாரூத் மாரூத் என்ற இரு மலக்குகளும் தவறான வழியில் மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாக இடம் பெற்றுள்ள மேற்கூறிய இறைவசனத்தில் வரக்கூடிய வாசகங்களை மூலாதாரமாக வைத்து ஹதீஸ் மறுப்பாளர்கள் ஐந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஹாரூத் மாரூத் என்ற இருவரும் திருக்குர்ஆனுடைய பார்வையில் மலக்குகள் கிடையாது என்றும் அவர்கள் ஷைத்தான்கள் என்றும் தவறான ஓர் வாதத்தை முற்படுத்துகின்றனர், அவர்களின் தவறான வாதங்களும் அதற்குரிய தெளிவான பதில்களும்.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள முதலாவது குற்றச்சாட்டும் அதற்குரிய தெளிவும்

 

ﻭَﻣَﺎٓ ﺍُﻧْﺰِﻝَ ﻋَﻠَﻰ ﺍﻟْﻤَﻠَـﮑَﻴْﻦِ ﺑِﺒَﺎﺑِﻞَ ﻫَﺎﺭُﻭْﺕَ
ﻭَﻣَﺎﺭُﻭْﺕَ

 

பாபிலூன் (என்னும் ஊரில்) ஹாரூத் மாரூத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்தவற்றையும் கற்றுக் கொடுத்து வந்தார்கள்”

 

இந்த இறைவாசகத்தில் ( ﻋَﻠَﻰ ﺍﻟْﻤَﻠَـﮑَﻴْﻦ ) அலல் மலக்கைன் என்ற சொல்லுக்கு பின் ஹாரூத் மாரூத் என்ற இருவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளன. இதில் அலிப் லாம் வந்த காரணத்தால் முன்னர் கூறப்பட்டதை தான் குறிக்கும். அதற்கு பின்னர் கூறப்படுவதை குறிக்காது என்ற வாதத்தை ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைக்கின்றனர், இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை.

 

காரணம் அரபு இலக்கணத்தில் (அதூப்பயான்) என்ற ஓர் சட்டம் உள்ளது. அது ஒரு விடயத்தை முன்பு சொல்லி விட்டு அதனுடைய விளக்கத்தை பின்னால் தெழிவு படுத்திக் கூருவதாகும். உதாரணமாக

 

ﻭَﻣَﺎ ﻳَﺴْﺘَﻮِﻯْ ﺍﻟْﺒَﺤْﺮٰﻥِ ۖ  ﻫٰﺬَﺍ ﻋَﺬْﺏٌ ﻓُﺮَﺍﺕٌ ﺳَﺎٓٮِٕﻎٌ ﺷَﺮَﺍﺑُﻪٗ ﻭَ ﻫٰﺬَﺍ ﻣِﻠْﺢٌ ﺍُﺟَﺎﺝٌؕ

 

குர்ஆன் கூறுகிறது இன்னும் இரு கடல்களும் சமமாகி விடாது. இது மிக்க மதுரமான(தாகம் தீர்க்கக்கூடியதான) அதை அருந்துவதற்க்கு இலேசானது இதுவோ உப்பும் மிக்க கசப்பும் (உடைய நீர்) ஆகும். 

சூரா பாதிர் ஆயத் 12

 

இந்த இறைவசனத்தில் வரக்கூடிய (ﺍﻟْﺒَﺤْﺮٰﻥِ ) அல்பஹ்றைன் என்ற சொல்லிலுள்ள அலிப் லாமை ஹதீஸ் மறுப்பாளர்கள் எங்கு மீட்டுவீர்கள்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இதில் வரக்கூடிய (அல்பஹ்றைன்) இரு கடல்களும் என்ற சொல்லுக்கு பின்னால் தெளிவு படுத்தி வரக்கூடிய வாசகங்கள் அனைத்தும் விளக்கமாக உள்ளது. அதே போண்று தான் மேற்கூறிய ஆயத்திலுள்ள வாசகத்தில் ( ﻋَﻠَﻰ ﺍﻟْﻤَﻠَـﮑَﻴْﻦ ) அலல் மலக்கைன் என்ற சொல்லுக்கு பின்னால் வரக்கூடிய  (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்று வரக்கூடிய வாசகங்கள் அனைத்தும் விளக்கமாக உள்ளது.

 

எனவே மேற்கூறிய இறைவசனத்திலுள்ள வாசகத்தில் இடம் பெறும் ( ﻋَﻠَﻰ ﺍﻟْﻤَﻠَـﮑَﻴْﻦ ) அலல் மலக்கைன் இரு மலக்குகள் என்ற சொல் ஹாரூத் மாரூத் என்ற இருவர்களையும் குறிக்கும் என்ற கருத்துக்களை திருக்குர்ஆன் மற்றும் அரபு இலக்கண சட்டங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள இரண்டாவது குற்றச்சாட்டும் அதற்குரிய தெளிவும்

 

ﻭَﻣَﺎ ﻳُﻌَﻠِّﻤٰﻦِ ﻣِﻦْ ﺍَﺣَﺪٍ ﺣَﺘّٰﻰ ﻳَﻘُﻮْﻟَﺎۤ ﺍِﻧَّﻤَﺎ ﻧَﺤْﻦُ
ﻓِﺘْﻨَﺔٌ ﻓَﻠَﺎ ﺗَﻜْﻔُﺮ

 

(ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கூறினார்கள்) நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவே இல்லை.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள வாசகங்களை வைத்து மலக்குகள் எப்படி சோதனையில் இருக்க முடியும்? அவர்கள் எப்படி தவரு செய்ய முடியும்? அவர்கள் எப்படி இணைவைக்க முடியும்? என்ற கேள்விகளை முன் வைத்து நிலையில் ஹாரூத் மாரூத் என்ற இருவரும் மலக்குகள் கிடையாது, அவர்கள் ஷைத்தான்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற வாதத்தை ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைக்கின்றனர். இது போன்ற வாதங்களை திருக்குர்ஆனை மூலமாக வைத்து பார்பதற்கு முன்னர் தெளிவு பெருவதற்காக வேண்டியும் மக்கள் புரிந்து கொள்வதற்காக வேண்டியும் படிப்பினை பெறுவதற்காக வேண்டியும் ஓர் ஹதீஸை இங்கு நாம் பதிவு செய்கிறோம்.

 

أشرفتِ الملائِكَةُ على الدُّنيا فرأتْ بَني آدمَ يعصونَ فقالوا يا ربِّ ما أجهلَ هؤلاءِ ما أقلَّ معرفةِ هؤلاءِ بعظمتِكَ فقالَ اللَّهُ تعالى لَو كنتُمْ في مسلاخِهِم لعصَيتُموني قالوا كيفَ يَكونُ هذا ونحنُ نسبِّحُ بحمدِكَ ونقدِّسُ لَكَ قالَ فاختاروا منكُم ملَكَينِ قالوا فاختاروا هاروتَ وماروتَ ثمَّ أُهْبِطا إلى الدُّنيا ورُكِّبَت فيهِما شَهَواتُ بَني آدمَ ومُثِّلَتْ لَهُما امرأةٌ فما عُصِما حتَّى واقَعا المَعصيةَ فقالَ اللَّهُ عزَّ وجلَّ لَهُما فاختارا عذابَ الدُّنيا أو عذابَ الآخرةِ فنظرَ أحدُهُما إلى صاحبِهِ فقالَ ما تقولُ قالَ أقولُ إنَّ عذابَ الدُّنيا ينقطعُ وإنَّ عذابَ الآخرةِ لا ينقطعُ فاختارا عذابَ الدُّنيا

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். வானவர்கள் அல்லாஹ்விடம் யா அல்லாஹ்! ஆதமுடைய மக்களின் அக்கிரமங்களை பார்த்தும் ஏன் இப்படி பொறுமையாக இருக்கிறாய் என்று கேட்டனர். நான் அவர்களைப் பல ஆசாபாசங்களைக் கொண்டு படைத்துள்ளேன் என்றான். உங்களை அவை ஏதுமில்லாது படைத்துள்ளேன் ”ஆசை மயக்கங்கள் எங்களுக்கு இருந்தாலும் நாங்கள் உனக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று வானவர்கள் கூறினார்கள். அப்படியானால் உங்களில் இரண்டு வானவர்ளைத் தெரிவு செய்து தாருங்கள் என அல்லாஹ் கூறினான். வானவர்கள் ஹாரூத், மாரூத் ஆகிய இருவரையும் தேர்வு செய்தனர். அவ்விருவரும் பூமிக்கு வந்தவுடன் மனிதர்களுக்குள்ள அத்தனைக் குணங்களையும் அவ்விருவருக்கும் அல்லாஹ் கொடுத்தான். இவ்விருவருக்கும் முன் ஒரு பெண் தோன்றினாள் அவளுடன் அவ்விருவரும் ஒன்று சேர்ந்து பாவம் செய்து விட்டார்கள். அவ்விருவரையும் நோக்கி அல்லாஹ் கூறினான். இம்மையின் தண்டனை தரவா, அல்லது மறுமையின் தண்டனை தரவா எது உங்களுடைய விருப்பம் என அல்லாஹ் கேட்டான். மறுமையில் வேண்டாம் இம்மையிலேயே தண்டனையைத் தருமாறு ஹாரூத் மாரூத் என்ற இரு மலக்குகளும் சொன்னார்கள். அவ்வாறே இவ்வுலகில் அவர்களுக்கு தன்டனை கொடுக்கப்பட்டது.

 

அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் பைஹகி, ஷுஃபுல் ஈமான் 3/253 ஹாகிம் 2/316

 

இறைவன் ஹாரூத் மாரூத் என்ற இரு மலக்குகளுக்கு மனித தன்மையை கொடுத்து பரிசோதித்துள்ளான் என்றும். அந்த இரு மலக்குகளும் மனித தன்மை கொடுக்கப்பட்ட காரணத்தால் தான் அவர்கள் தவறு செய்தார்கள் என்றும். அதற்கு பரிகாரமாக அவ்விருவருக்கும் இவ்வுலகில் தண்டனையையும் சோதனையையும் இறைவன் கொடுத்துள்ளான் என்ற கருத்துக்களை மேற்கூறிய ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

எனவே ஹாரூத் மாரூத் என்ற இரு மலக்குகளுக்கும் இறைவன் மனித தன்மையை கொடுத்த காரணத்தால் தான் அவர்கள் தவரு செய்தார்களே தவிர மலக்குகளுடைய தன்மையில் இருக்கும் போது அவர்கள் மேற்கூறிய தவருகளை செய்யவில்லை, செய்யவும் மாட்டார்கள் என்ற கருத்துக்களை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள இரண்டாவது மூன்றாவது குற்றச்சாட்டும் அதற்குரிய தெளிவும்

 

ﻭَﻣَﺎ ﻳُﻌَﻠِّﻤٰﻦِ ﻣِﻦْ ﺍَﺣَﺪٍ ﺣَﺘّٰﻰ ﻳَﻘُﻮْﻟَﺎۤ ﺍِﻧَّﻤَﺎ ﻧَﺤْﻦُ
ﻓِﺘْﻨَﺔٌ ﻓَﻠَﺎ ﺗَﻜْﻔُﺮ

 

(ஹரூத் மாரூத் என்ற இருவரும் கூறினார்கள்) “நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவே இல்லை.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள வாசகங்களை நன்றாக கூர்ந்து கவனியுங்கள். (சூனியத்தை கற்று நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாக ஆகிவிடாதீர்கள்) என்று ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கூறிய பின்னர் தான் சூனியத்தை கற்றுக் கொடுத்ததாக இடம் பெற்றுள்ளது. உன்மையில் ஹாரூத்  மாரூத் என்ற இருவரும் ஷைத்தான்களாக இருந்திருந்தால் மக்களே! இதை கற்று நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாக ஆகிவிடாதீர்கள் என்று ஷிர்கை ஒழிக்கும் அளவுக்கு ஷைத்தான்கள் உபதேசம் செய்வார்களா? அவைகளை இறைவன் திருக்குர்ஆனில் கூருவானா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

ﻗَﺎﻝَ ﺭَﺏِّ ﺑِﻤَﺎۤ ﺍَﻏْﻮَﻳْﺘَﻨِﻰْ ﻟَﺎُﺯَﻳِّﻨَﻦَّ ﻟَﻬُﻢْ ﻓِﻰ ﺍﻟْﺎَﺭْﺽِ ﻭَﻟَﺎُﻏْﻮِﻳَـﻨَّﻬُﻢْ ﺍَﺟْﻤَﻌِﻴْﻦَۙ

 

குர்ஆன் கூறுகிறது (அதற்கு இப்லீஸ்) “என் இறைவனே! என்னை நீ  வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான்
இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு  அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும்
வழிகெடுத்தும் விடுவேன்.

சூரா ஹிஜ்ர் ஆயத் 39

 

ﻭَﺍِﻣَّﺎ ﻳَﻨْﺰَﻏَـﻨَّﻚَ ﻣِﻦَ ﺍﻟﺸَّﻴْﻄٰﻦِ ﻧَﺰْﻍٌ ﻓَﺎﺳْﺘَﻌِﺬْ ﺑِﺎﻟﻠّٰﻪِؕ ﺍِﻧَّﻪٗ ﺳَﻤِﻴْﻊٌ ﻋَﻠِﻴْﻢٌ

 

குர்ஆன் கூறுகிறது ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனதல் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூன்டினால் அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாக இருக்கிறான்.

சூரா அஃராப் ஆயத் 200

 

ﻋَﻦْ ﺻَﻔِﻴَّﺔَ ﺑِﻨْﺖِ ﺣُﻴَﻲٍّ رَضِيَ اللَّهُ عَنْهَا ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﻥَّ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻳَﺠْﺮِﻱ ﻣِﻦْ ﺍﻟْﺈِﻧْﺴَﺎﻥِ ﻣَﺠْﺮَﻯ ﺍﻟﺪَّﻡِ ﻭَﺇِﻧِّﻲ ﺧَﺸِﻴﺖُ ﺃَﻥْ ﻳَﻘْﺬِﻑَ ﻓِﻲ ﻗُﻠُﻮﺑِﻜُﻤَﺎ ﺳُﻮﺀًﺍ ﺃَﻭْ ﻗَﺎﻝَ ﺷَﻴْﺌًﺎ

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான் ; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை  அவன் போட்டு விடுவான் அல்லது (சந்தேகத்தை) போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.

 

அறிவிப்பவர் :- ஸஃபிய்யா பின்த்து ஹுயை ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம் புஹாரி 2035, 2038,2039, 3101, 3281, 6219, 7171 முஸ்லிம் 4386

 

ஷிர்கை ஒழிக்கும் அளவுக்கு ஷைத்தான்களால் உபதேசம் செய்ய முடியாது, அவைகள் மனிதர்களை வழி கெடுக்கக்கூடியவைகள் என்ற கருத்தையே திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. இந்த அப்படியிருக்கையில் பார்க்கும் போது ஹாரூத் மாரூத் என்ற இருவரும் ஷைத்தான்கள் என்றிருந்தால் ஏன் சூனியத்தை கற்று நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாக ஆகிவிடாதீர்கள் என்று எதற்காக மக்களுக்கு ஏகத்துவத்தை போதிக்க வேண்டும்? ஷிர்கை ஒழிக்கும் அளவுக்கு ஏன் அவர்கள் உபதேசம் செய்ய வேண்டும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

♦️குறிப்பு :- ஹாரூத் மாரூத் என்ற இருவரும் மலக்குகள் கிடையாது அவர்கள் ஷைத்தான்கள் என்பதாக்கூறும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதம் இறைவசனங்களுக்கு முற்றிலும் முறன் படுகிறது. மேலும் தெழிவுக்காக வேண்டி ஓர் ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகளை கூர்ந்து கவனித்தால் ஹாருத் மாரூத் என்ற இருவரும் மனித தன்மை கொடுக்கப்பட்ட மலக்குகளே அன்றி வேறில்லை.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள நான்காவது குற்றச்சாட்டும் அதற்குறிய தெளிவும்

 

ﻓَﻴَﺘَﻌَﻠَّﻤُﻮْﻥَ ﻣِﻨْﻬُﻤَﺎ ﻣَﺎ ﻳُﻔَﺮِّﻗُﻮْﻥَ ﺑِﻪٖ ﺑَﻴْﻦَ ﺍﻟْﻤَﺮْﺀِ ﻭَﺯَﻭْﺟِﻪٖؕ

 

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.

 

மேற்கூறிய இறைவசனத்திலுள்ள வாசகங்களை கூர்ந்து கவனியுங்கள். ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கணவன் மனைவிக்கு இடையே எதை கொண்டு பிரிக்க முடியுமோ அதைத்தான் கற்றுக் கொடுத்துள்ளார்கள். உன்மையில் இதுதான் சூனியம் இது போன்று எல்லாராலும் செய்ய முடியும் என்ற வாதங்களுக்கு உட்பற்றவாறு சில உதாரணங்களை ஹதீஸ் மறுப்பாளர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.

 

நண்பரே உன்னுடைய மனைவியை பக்கத்து வீட்டில் பார்தேன் என்று கூறினால் அல்லது உன்னுடைய மனைவியை தெருவில் இன்னொருவருடன் பார்தேன் என்று கூறினாலும் சரி. இதன் மூலம் கனவன் மனைவிக்கு இடையே பிரிவினை வரும், இது போன்ற பிரிவினையை தான் ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கற்றுக் கொடுத்துள்ளார்கள், இதைத்தான் திருக்குர்ஆனில் சூனியம் என்று கூறப்படுகிறது என்ற ஓர் வாதத்தை ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைக்கின்றனர்.

 

இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானவை காரணம் மேற்கூறிய உதாரணம் பொய் சொல்லி கனவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதை பற்றி பேசப்படுகிறது. இது இஸ்லாத்தின் பார்வையில் (ஹராம்) கூடாது என்று கூருவோமே தவிர (ஷிர்கு) இணைவைப்பு அதாவது இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காஃபிர்கள் என்று கூறமாட்டோம் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கனவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் செயலை கற்றுக் கொடுத்தார்கள். அதை கற்றுக் கொடுக்க முன் அந்த இருவரும் கூறிய வார்த்தைகளை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு கூறியுள்ளான் அவை பின்வருமாறு.

 

ﻭَﻣَﺎ ﻳُﻌَﻠِّﻤٰﻦِ ﻣِﻦْ ﺍَﺣَﺪٍ ﺣَﺘّٰﻰ ﻳَﻘُﻮْﻟَﺎۤ ﺍِﻧَّﻤَﺎ ﻧَﺤْﻦُ ﻓِﺘْﻨَﺔٌ ﻓَﻠَﺎ ﺗَﻜْﻔُﺮْؕ ﻓَﻴَﺘَﻌَﻠَّﻤُﻮْﻥَ ﻣِﻨْﻬُﻤَﺎ ﻣَﺎ ﻳُﻔَﺮِّﻗُﻮْﻥَ ﺑِﻪٖ ﺑَﻴْﻦَ ﺍﻟْﻤَﺮْﺀِ ﻭَ ﺯَﻭْﺟِﻪٖؕ

 

(ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கூறினார்கள்) “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்றால் நீங்கள் நிராகரிப்பவர் களாகி விடுவீர்கள். ஆதலால் இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்பவர் களாகிவிட வேண்டாம் என்று கூறும் வரையில் அவர்கள் அதனை ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவே இல்லை, (இவ்விதம் கூறிய பின்னும் இதைக் கற்க விரும்பியவர்கள்) கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவினை உண்டுபண்ணக் கூடிய வழியை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்.

 

மேற்கூறிய வாசகங்களை கூர்ந்து கவனியுங்கள். ஹாரூத் மாரூத் என்ற இருவரும் மக்களை பார்த்து கூறிய வார்த்தைகள் :- நீங்கள் இதை கற்று நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள் என்று மக்களுக்கு எச்சரித்துள்ளார்கள்.

 

ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கற்றுக் கொடுத்த செயல் ஷிர்க் இணைவைப்பை குறிக்கிறது என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. இருப்பினும் மேற்கூறிய ஹதீஸ் மறுப்பாளர்களின் உதாரணம் பொய்யை குறிக்கிறது. இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பொய் சொல்லி ஒருவர் கனவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்கினால் அவரை பார்த்து குடும்பத்தை பிரித்த குற்றவாளி பாவி என்று கூருவோமே தவிர நீ இஸ்லாத்தை விட்டும் வெழியேரிய காஃபிர் என்று எவருமே கூறுவதில்லை. அப்படி கூறினால் அவர்கள் திருக்குர்ஆன் ஹதீஸ்களை ஒழுங்கு முறைப்படி படிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும்.

 

தெளிவுக்காக வேண்டி இன்னும் ஓர் உதாரணம்

 

நண்பரே! உன்னுடைய மனைவியை பக்கத்து வீட்டில் பார்த்தேன் என்று ஒருவர் உண்மையாகக் கூறினால் இதன் மூலமாக கனவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதென்றால் இப்போது யார் பொய் சொன்னது? ஒரு வேளை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினாலும் அவர் பாவம் செய்த பாவியே தவிர இஸ்லாத்தை விட்டும் வெழியேரிய இணைவைப்பாளர் காஃபிர் என்று கூறலாமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

 

♦️குறிப்பு :- ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கனவன் மனைவிக்கு இடையே பிரிவினை உண்டாக்கும் செயலை அதாவது சூனியம் (ஷைத்தானுடைய சூழ்ச்சி செயலை) தான் கற்றுக் கொடுத்துள்ளனர். இதனை கற்றுக் கொண்டாள் தான் அவர்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைத்தான் ஹாரூத் மாரூத் என்ற  இருவரும் கற்றுக் கொடுத்தார்களே தவிர மேற்கூறிய உதாரணத்தில் இடம் பெறுவது போல் பொய் சொல்லி பிரிவினையை ஏற்படுத்தும் செயலை ஹாரூத் மாரூத் என்ற இருவரும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி அதனை கற்றுக் கொண்டாலும் அதன் மூலம் நிராகரிக்கும் காஃபிர்களாக ஆகிவிட மாட்டோம். இவ்வாறு கூற முற்படுவது திருக்குர்ஆனுக்கு முற்றிலும் முறனாகும்.

 

மேற்கூறிய இறைவசனததிலுள்ள ஐந்தாவது குற்றச்சாட்டும் அதற்குரிய தெளிவும்

 

وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ

 

அல்லாஹ்வின் கட்டளையின்றி அதாவது (நாட்டமின்றி சூனியத்தின்) மூலம் அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைத்திட முடியாது. அன்றி, அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல் தீங்கிழைக்கக் கூடியது எதுவோ அதைத்தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தவிர, (இறை நம்பிக்கைக்குப் பதிலாக) அ(ச் சூனியத்)தை எவன் விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு (இம்மையின் பாக்கியம் கிடைத்தாலும்) மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதைத் தெளிவாக சந்தேகமற அவர்களும் அறிந்திருக்கிறார்கள். அன்றி, தங்களையே விற்று அவர்கள் எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

 

மேற்கூறிய வாசகங்களை மூலாதாரமாக வைத்துக் கொண்டு சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது, சூனியம் என்ற ஒன்றில்லை. அது பொய் பித்தலாட்டம் என்ற வாதத்தை  ஹதீஸ் மறுப்பாளர்கள் முன் வைக்கின்றனர், இது போன்ற வாதங்கள் முற்றிலும் தவறானதாகும். காரணம் மேற்கூறிய வாசகத்தில் (அல்லாஹ்வின் கட்டளையின்றி) அதாவது அல்லாஹ்வின் நாட்டமின்றி எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலமும் அல்லது எதன் மூலமும் இழைக்க முடியாது என்ற கருத்தையே இஸ்லாம் வழியுருத்துகின்றது.

 

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ

 

குர்ஆன் கூறுகிறது
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவனின் நாட்டமின்றி (மரத்திலிருந்து) யாதொரு இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.

சூரா அன்ஆம் ஆயத் 59

 

அல்லாஹ்வின் நாட்டமின்றி மரத்திலிருந்து ஓர் இலையேனும் கீழே உதிர்வதில்லை. இறைவன் நாடினால் தான் மரத்திலிருந்து ஓர் இலை கூட கீழே உதிரும் என்ற கருத்தை மேற்கூறிய இறைவசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

 

இங்கு கவணிக்க வேண்டிய விஷயம் என்னவெனில். ஒவ்வொரு வஸ்துக்களும் இறைவனுடைய நாட்டத்தை கொண்டு தான் செயல் படுகிறது, அவனின் நாட்டம் இல்லையென்றால் எந்த ஒரு வஸ்துக்களும் சுயமாக செயல் படமுடியாது, இதனை அனைவரும் அறிவீர்கள். அதே போண்று தான் இறைவனின் நாட்டமின்றி சூனியத்தின் மூலம் சுயமாக தீங்கு ஏற்படுத்த முடியாது. இறைவன் நாடினால் அதன் மூலம் தீங்கு ஏற்படுத்த முடியும். மேலும் அச்சூனியத்தை (ஷைத்தானின் சூழ்ச்சியை) எவன் (கற்றுக் கொண்டானோ) விலைக்கு வாங்கிக் கொண்டானோ அவனுக்கு இம்மையில் பாக்கியம் கிடைத்தாலும் மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்ற கருத்தை தான் மேற்கூறிய வாசகங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறதே அன்றி வேறில்லை.

 

♦️குறிப்பு :- மேற்கூறிய திருக்குர்ஆன் இறைவசனங்கள் பிரகாரம் (அலல் மலக்கைன்) என்ற அரபுச் சொல் யாரை குறிக்கும் என்பது பற்றியும். மேலும் ஹரூத் மாரூத் என்ற இருவரும் ஷைத்தான்கள் கிடையாது என்றும். அவர்களுக்கு மனித தன்மை கொடுக்கப்பட்ட காரணத்தால் தான் அவர்கள் தவரு செய்தார்கள் என்றும். அதற்காகவே இவ்வுலகில் அவர்களுக்கு தன்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்றும். அவர்கள் இருவரும் மனித தன்மை கொடுக்கப்பட்ட மலக்குகள் என்றும். மேலும் ஹாரூத் மாரூத் என்ற இருவரும் எதை கொண்டு பிரிக்க முடியுமோ அத்தகைய ஷைத்தான்களின் சூழ்ச்சி மாய மந்திரங்களை கற்றுக் கொடுத்தார்கள் என்றும். மேலும் இறைவனுடைய நாட்டத்தை பற்றியும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.