ஹைளு மாதாவிடாய் பெண்கள் செய்யக் கூடாதவைகள்

318

ஹைளு மாதாவிடாய் பெண்கள் செய்யக் கூடாதவைகள் 

 

ஹைளு என்பது குறித்த காலங்களில் பெண்களின் கருப்பையின் ஓரப்பகுதியிலிருந்து வெளிவரும் இயற்கை உதிரப் போக்கிற்கு ஹைளு மாதவிடாய் என்று சொல்லப்படும். 9 வயது முதல் 55 அல்லது 60 வயதை அடையும்போது ஹைளு மாதாவிடாய் பெரும்பாலும் நின்று விடும். ஹைளு மாதாவிடாய் ஏற்பட்ட பெண்கள்

♦️1) தொழுவது கூடாது

♦️2) பள்ளியினுள் செல்வது கூடாது

♦️3) கஃபத்துல்லாஹ்வை தவாப் செய்வது கூடாது

♦️4) குர்ஆன் ஆயத்துகளை பார்த்தோ, பார்க்காமலோ ஓதுவது கூடாது 

♦️5) குர்ஆனை தொடுவது கூடாது 

♦️6) நோன்பு பிடிப்பது கூடாது 

♦️7) தொப்புளுக்கும் முட்டுக்காலுக்கு மிடையில் சக இன்பம் காண்பது கூடாது 

♦️8) உடலுறவு கொள்வது கூடாது 

♦️9) ஹைளுள்ள பெண்கள், ஸஜ்தாவுடைய ஆயத்து ஓதக் கேட்டாலும் ஸஜ்தா செய்வது கூடாது 

♦️10) ஹைளுள்ள பெண்களை (தலாக்) விவாகரத்துச் செய்வது கூடாது 

♦️11) ஹைளுள்ள பெண்களை இச்சைக்கு இணங்கும்படி தூண்டுவது கூடாது 

♦️12) ஹைளுள்ள பெண்களுக்கு கடுமையான வேலைகளைக் கொடுப்பது கூடாது.  

அதாவது பெண்கள் ஹைளாக இருக்கும் போது வீட்டு வேலைகளில் ஆண்கள் பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும். சீறி விழுதலும், சினம் கொள்ளுதலும் கூடாது. அன்பாகவும் பண்பாகவும் பழக வேண்டும். 

ஹைளுள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், போன்ற தஸ்பீஹ்களை செய்து கொள்ள முடியும்.  

குறிப்பு :- பெண்களுக்கு ஹைளு ஏற்படும் காலம் குறைந்தபட்சக் கால அளவு ஒரு நாளின் பாதியாகும். அதன் அதிகபட்ச காலஅளவு 15 நாட்கள். மிகுந்த கால அளவு 5,6,7 நாட்களாகும். ஒருமாதம் வெளிப்பட்ட ஹைளுக்கும் மறுமாதம் வெளிப்டும் ஹைளுக்கும் இடையே (சுத்தமான) இடைவெளி 15 நாட்கள் அவசியம் இருக்க வேண்டும். இல்லையெனில் அவை வியாதி இரத்தம் அல்லது இஸ்திஹாளா உதிரப் பெரும் போக்கு எனக்கருதப்படும்.

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.