1) அல்லாஹ்விற்கு உருவம் கற்பிக்கும் வஹாபிகளும் குர்ஆன் வசனங்களும்

226

அல்லாஹ்விற்கு உருவம் கற்பிக்கும் வஹாபிகளும் குர்ஆன் வசனங்களும்

 

📚 :- குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )

 

♦️திருக்குர்ஆன் வசனங்கள் வெவ்வேறு கோனங்களில் வெவ்வேறு விதமாக இடம் பெற்றுள்ளது. அவைகளை கூர்ந்து கவணித்து அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு அர்த்தங்கள் செய்ய வேண்டும். எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு ஆரம்பித்தில் (அகராதி) நேரடி அர்த்தம் செய்ய வேண்டும். நேரடி அர்த்தம் கொடுக்க வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும். இது அரபு மொழி மட்டுமின்றி சகல மொழிகளிலும் இவ்வாறு தான் சட்டம் அமைந்துள்ளது.

 

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏

 

குர்ஆன் கூறுகிறது திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

சூரா மாயிதா ஆயத் 38

 

♦️மேற்கூறிய ஆயத்தில் பிறரின் பொருட்களை யாராவது திருடினால் அவர்களின் கை கரங்களை வெட்டி விடுங்கள் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கை என்று நேரடி அர்த்தம் கொடுக்க வேண்டுமே தவிர மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் செய்யக்கூடாது. மேலும்

 

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا‏

 

குர்ஆன் கூறுகிறது உம் கையை உம் கழுத்தில் கையைக் கட்டிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.

சூரா பனீ இஸ்ராயீல் ஆயத் 29

 

♦️இந்த ஆயத்தில் உன் ‘கழுத்தில் கையைக் கட்டிக் கொள்ளாதீர் என்றும் ஒரே விரிப்பாக கையை விரித்து விடாதீர் என்றும் இடம் பெற்றுள்ளது. இதற்கு நேரடி அர்த்தம் கொடுத்தால் எதுவும் புரியாது. இவ்வாறான இடங்களில் மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். “கையைக் கழுத்தில் கட்டிக் கொள்ளாதே” என்பதற்கு உன்னிடம் இருப்பதை முழுமையாக வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்யாதே என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும். அதேபோல் “ஒரே விரிப்பாக கையை விரித்து விடாதே” என்பதற்கு உன்னிடம் இருக்கும் அனைத்தையும் செலவழித்து விடாதே என்று மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.

 

உதாரணமாக :- அல்லாஹ் அர்ஷ் எனும் கதிரையில் இருக்கிறான். குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4 மேலும் அல்லாஹ் நரகத்தில் கால் பாதத்தை நுழைக்கிறான். புஹாரி 4585 மேலும் நீங்கள் பார்க்கும் இடமெல்லாம் அல்லாஹ்வின் முகம். குர்ஆன் 2:115 மேலும் அல்லாஹ்வின் கையில் ஆட்சி உண்டு. குர்ஆன் 67:1 மேலும் அல்லாஹ் ஏழாம் வானிலிருந்து முதலாம் வானத்திற்கு இறங்குகிறான். புஹாரி 1145 முஸ்லிம் 168, 758, 1261 இப்னு மாஜா 1366 மேலும் அல்லாஹ் கொண்டைக் காலை விரிக்கிறான். குர்ஆன் 68:42 மேலும் எல்லாம் அழிந்து விடும் அல்லாஹ்வின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும். குர்ஆன் 55:26,27

 

♦️அல்லாஹ் இருக்கிறான். நடக்கிறான். கொண்டைக் காலை விரிக்கிறான். நரகத்தில் காலை நுழைக்கிறான். கையில் ஆட்சியை வைத்திருக்கிறான். என்றெல்லாம் கூறப்படுகிறது. அதன் பின்னர் எல்லாம் அழித்து விடும் அல்லாஹ்வின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தும் அழிந்து விடும். அதேபோல் அவனின் இருப்பிடம் அர்ஷ் அவனின் கால்கள் கைகள் அனைத்தும் அழிந்து விடும். அவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும். ஆகவே மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களுக்கு நேரடி அர்த்தம் வைப்பதால் அல்லாஹ்விற்கு அழிவு உண்டு என்ற கருத்தையும் அல்லாஹ்விற்கு மனித உருவ அமைப்பு உண்டு என்ற தவறான கருத்தையும் நமக்கு சுற்றிக் காட்டுகிறது. எனவே மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களுக்கு நேரடி அர்த்தம் வைக்காமல் மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும்.

 

🔶குறிப்பு :- அல்லாஹ்விற்கு உருவம் கற்பிக்கும் விஷயத்தில் அதாவது அல்லாஹ்விற்கு முகம் கைகள் கால்கள் உள்ளது என்றும் அவன் இருக்கிறான் நடக்கிறான் என்றெல்லாம் கூறியவாறு சில திர்குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் நேரடி அர்த்தம் செய்து அல்லாஹ்விற்கு உருவம் கற்பிக்க முற்படுகிறார்கள். அவர்களை விட்டும் முஸ்லீம்களை அல்லாஹ் பாதுகப்பானாக. மேலும் வஹாபிஷ வாதிகளை போன்று அல்லாஹ்விற்கு உருவம் கற்பிக்கும் நோக்கில் சில திருக்குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் நேரடி அர்த்தம் செய்யக்கூடாது அது ஷிர்காகும். அதற்கு மாற்றமாக மாற்றுப் பொருள் வழிந்துரை அர்த்தம் கொடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் இது பற்றி ஒவ்வொரு தலைப்பாக பார்க்கலாம்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.