1) கேள்வி :- ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை இறைதூதர் ﷺ அவர்கள் ஆறு அல்லது ஏழு வயதில் திருமணம் செய்து கொண்டது சரியா?

நபி முஹம்மத் ﷺ அவர்கள் சிறுமியை திருமணம் முடித்தார்களா?

101

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سَبْعِ سِنِينَ، وَزُفَّتْ إِلَيْهِ وَهِيَ بِنْتُ تِسْعِ سِنِينَ

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன்.

ஆதாரம் :- முஸ்லிம் 2780

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணையும் போது ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஒன்பது வயதாகும்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த நிகழ்வு இஸ்லாம் பரிபூரணம் ஆகுவதற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வாகும். மேலும் இந்த நிகழ்வு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பெற்றோர்களுடைய பூரண அனுமதியுடன் நடைபெற்ற நிகழ்வாகும். இந்த நிகழ்வை கொண்டு அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கத்து மதீனத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்களே தவிர. எந்த ஒருவரும் இந்த நிகழ்வை விமர்சித்து பேசவில்லை. குறிப்பாக இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விஷயங்களில் அதிகளவில் விமர்சனம் செய்து பேசிய எதிரிகள், விரோதிகள் கூட இந்த திருமண நிகழ்வைப் பற்றி விமர்சித்து பேசியதாக எந்த ஒரு தகவலும் வரலாற்று நூல்களில் கிடைக்கப்பெறவில்ல. இதன் காரணம்!

அன்றைய காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் வயதில் குறைந்த பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்வது நடைமுறையில் இருந்த ஒன்றாகும். இதே போன்று தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒன்பது முதல் பதினான்கு வயது வரையிலான பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலும் நடைமுறையில் இருந்ததை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள். நான் யமன் தேசத்தில் தங்கியிருந்த போது அங்குள்ள பெண் பிள்ளைகள் அதிகமானோர் ஒன்பது வயதிலேயே முதல் மாதவிடாய் ஏற்பட்டு (பவரு வயது அதாவது திருமண வயதை) அடைந்துள்ளார்கள். மேலும் ஒன்பது வயதில் திருமணம் செய்து பத்தாவது வயதில் குழந்தையும் பெற்றுள்ளார்கள்.

நூல் ஆதாரம் :- சியர் அஃலாமுல் நுபலா 10/91 ஸுனன் அல் பைஹகி” அல் குப்றா 1/319

மேற்கூறியது போன்று இந்தியா தேசத்தை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட எட்டு வயதில் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்ற பாரதியார் கூட கண்ணம்மா என்ற பெண் பிள்ளையை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது எட்டு என்பதை இங்கு நினைவு கூறுகிறோம்.

கத்தோலிக்க கிறித்தவ கலைக்களஞ்சியம் சொல்கின்றது :- ஏசுவின் தாயார் மர்யாள் எனப்படும் மேரி அவர்கள் ஜோசப்பை திருமணம் முடிக்கும் போது மேரியின் வயது பன்னிரண்டாகும் ஜோசப்பின் வயது தொண்ணூறி ஒன்பதாகும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில் ஜோசப்பை திருமணம் செய்து கொள்ள முன்னரே மேரி அவர்கள் பருவ வயதை எத்தியது மட்டுமின்றி ஏசு நாதர் என்ற குழந்தையையும் பெற்றெடுத்து விட்டார்கள், அதன் சரியான வயதெல்லை இன்னும் குறிப்பிட்டு கூறப்படவில்லை.

யூத மதப்பிரகாம் :- ஒருவர் தன்னுடைய மகள் பருவமடைந்து விட்டாள் வெகு விரைவில் திருமணம் முடித்து வைக்கட்டும்.

யூத நூல் :- தல்மூது, பெசகிம் 113

இந்து மதத்தில் மனுஸ்மிருதி சட்டப் பிரகாரம் :- ஒரு பெண்ணை அவள் பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

இந்து நூல் :- கவுதமா 18-21

இவைகளை கூர்ந்து கவனிக்கும் போது அன்றைய காலகட்டத்தில் சிறுவயது பெண்களை திருமணம் செய்து கொள்வது அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த காரணத்தால் தான்! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமண நிகழ்வு குறித்து அன்றைய காலகட்டத்தில் விமர்சனங்களாக கூட எதிரிகள் பேசவில்லை என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு :- இஸ்லாமிய வேத நூல்களிலும் சரி அது அல்லாத மாற்று மத வேத நூல்களிலும் சரி ஆண் பெண் பிள்ளைகள் பாருவ வயதை அடைந்து விட்டாள்! அவர்கள் கண்ணியர் பருவ வயதை, திருமண வயதை எத்தியவர் என்று தான் பார்க்கப்படுகிறது. மேலும் திருமண வயது எல்லை பதிமூன்று வயது என்றும், பதினாறு வயது என்றும், இருபது வயது என்றும், இருபத்தி மூன்று வயது என்றும் பல விதமான மாற்றங்கள் நடந்தது, சுமார் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் தான் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொண்டால்!. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமண நிகழ்வு அன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைமுறையிலிருந்த ஒன்றுதான், அதில் எந்த குற்றமும் இல்லை என்பதை சர்வ சாதாரணமாக அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.