1) ஜலாலுதீன் ரூமி (ரஹ்) தத்துவ கவிதைகள்

60

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் அற்புத பதில்கள்

விசம் என்பது என்ன.?

நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.

அச்சம் என்பது என்ன..?

எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும். அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

பொறாமை என்பது என்ன ?

பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும். அதை நாம் ஏற்றுக் கொண்டால் அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும்.

கோபம் என்பது என்ன..?

நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும், ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகிவிடும்.

வெறுப்பு என்பது என்ன..?

ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது, ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால் அது அன்பாகிவிடும்.

உன்னைத் தேடு என்னைக் காண்பாய்!

எதிலும் அடங்கா இறையை பள்ளியில் நிறுத்துவது பேத புத்தி

எங்கும் நிறை இறை அது உன்னுள் திரைமறை. நான் என்பதைதேடு அதில் நீ என்பது கிடைக்கும். நீ என்பது கிடைக்காத வரை தன்னிறைவு வாய்க்காது,

உன்னில் தேடு அவனை அடைவாய் நீயே அவனின் மறைபொருள் அவனே உன்னில் மறைபொருள்.

மாயையில் உன்னை வைத்து மாயமானான்…..

நம்முடைய மூலாதாரம்…எது ? ஆன்மா…!!அதாவது… ரூஹ். அது எங்கிருந்து வந்தது” மனிதனுக்குள் உயிர் உன்டாக என்னுடைய ரூஹை நான் ஊதினேன்… என்கிறானே இறைவன்.. அப்படியானால் அந்த ஆன்மா.. தனது… மூலாதாரத்தை தேட தானே.. செய்யும் ?

ஆன்மா. எல்லோருடனும் கூடி ஆடியே இருக்கிறது. தன் நிலையை உயர்வாக்கி கொண்டவர்களுடனும் அது இருக்கிறது உலகத்தோடு ஒன்றி அதிலேயே மூழ்கி தன்னை மறந்து வாழ்பவர்களுடனும் அது. இருக்கிறது. அவரவர்கள் விளங்கி கொண்ட பிரகாரம் எல்லாரும். என்னுடன் நடப்புறவு கொண்டார்கள். ஆனால் யாருமே அந்த உள்ளிருக்கும் ரகசியத்தை அறிந்து கொள்ளவே. தேடி கண்டுபிடிக்க வோ…முயலவில்லை..

எனது ரகசியம் என் புலம்பலுக்கு தூரமாக இல்லை. ஆனால்.. அது கண்ணுக்கும். காதுக்கும் ஒளி தர கூடியதாக இல்லை. என் புலம்பலை கேட்டு அதன் பின்னால் மறைந்துள்ள.. துயரத்தின் ரகசியத்தை. எளிதாக அறிந்து கொள்ள முடியாது.. ஆனால் அகமிய ஒளியின் ரகசியத்தை கொண்டு.. அதனை கண்டும் கேட்டும் கொள்வது எளிதானதல்ல!!

உடல் ஆன்மாவை கொண்டும் ஆன்மா உடலை கொண்டும்… மறைந்திருக்க வில்லை. ஆனால் யாருக்கும். ஆன்மாவை.. காணும்.. வழக்கம் கிடையாது!! யாருமே இதுவரை… முகக்கண்ணால் ஆன்மாவை கண்டதில்லை… கண்களை மிகவும் அண்மித்திருக்கும். எப்பொருளும் கண்களுக்கு தெரிவதில்லை!

அன்பினால், இருள் வெளிச்சம் ஆகும்…!!! அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்…!!! அன்பினால் வேதனை சுகமாகும்..!!! அன்பினால் மரித்தது உயிர் பெரும் !!! அன்பு பெருங்கடலையும் குவளைக்குள் அடக்கும்…! அன்பு பெரும் மலையையும் மணல் ஆக்கும்..!!! அன்பு ஆகாயத்திலும் நூறு துளைகளை இடும்..!! அன்பு நிலத்தையும் ஆட்டி படைக்கும் !!

அச்சங்கள் நீங்கும் போது வாழ்கை ஆரம்பமாகிறது

அறிவார்ந்த வார்த்தைகளை நீ எவ்வளவு தான் செவியேற்றாலும் நீ தகுதியற்றவனாக இருக்கும் பட்சத்தில், அவை உன் மனதிலே பதியாது அவை உனக்கு எவ்விதப் பயனும் நல்காது.

இருவரின் ஆத்மாவும் ஒன்றென்பதால்,நமக்குள்ளே நாம் தோன்றி மறைகிறோம்

ஆழமான கடலை போன்ற உள்ளத்தின் ஆழத்தில் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

எனது உள்ளம் உன் கையில் இருக்கும் பேனாவைப் போன்றது என் மகிழ்ச்சியையும், கவலையையும் அதுவே எழுதும்

உன்னை அறிந்து கொண்டதன் பின்னர் மரணிப்பேன்” என்று நினைத்தேன் “என்னை அறிந்தவன் ஒருபோதும் மரணிக்கமாட்டான்’ என பதில் கிடைத்தது.

தலைமையை வேண்டாதே. முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். அரசனாக முயலாதே! உன்னிடம் கருணை புரியும் தன்னையும் அழகிய முறையில் பழகுவதாலும் இல்லாமல் போனால் உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும். உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள். துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு. துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும். அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர். அலியைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய். இந்தப் பாழடைந்து போகும் உலகத்தை விட்டு மனதை விலக்கிக் கொள்.

காதலாலே பூதவுடல் விண்ணுலகு சென்றது அதனால்தான் மலையும் ஆடத்தொடங்கி சுறுசுறுப்படைந்தது.

காதலனே. ஸீனா மலைக்கு உணர்ச்சியூட்டியது காதல். அதனால்தான் ஸீனா போதையுற்றது மூஸா (அலை) மயங்கி விழுந்தார்கள்.

என் இயல்புடன் இயைந்த ஒருத்தியுடன் நான் உதடு பொருத்த முடியுமாயின், நானும் புல்லங்குழலைப்போல் சொல்லக்கூடிய அனைத்தையும் சொல்லிவிடுவேன்

தன் மொழியில் பேசும் ஒருவரிடமிருந்து பிரிக்கப்பட்ட எவனும். நூற்றுக்கணக்கில் பாடல்களைக் கற்றிருப்பினும் அவன் பாட இயலாத ஊமையேயாவான் ரோஜா மறைந்து, பூந்தோட்டத்தின் பசுமை மாண்டபின் புல்புல்லின் கதையை நீ கேட்க முடியாமல் போய்விடும்.

ஜலாலுதீன் ரூமி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

தொடர்….

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.