1) தர்ஹா என்ற சொல்லும் அதன் தெளிவும்
1) தர்ஹா என்ற சொல்லும் அதன் தெளிவும்
📚 :- முஃமின்கள் கப்ரு வணங்கிகளா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில். தொகுப்பு :- A.M. இஹ்ஸான் (நஜாஹி, காதிரி YSYR ✍️ )
♦️தர்ஹா என்ற சொல் (வார்த்தை) அரபு மொழி ஆங்கில மொழி சொல் அல்ல, அது பாரசீக மொழி சொல்லாகும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு அடையாளப் பெயராக தர்ஹா என்ற சொல் (வார்த்தை) பேச்சு வழக்கில் பயன் படுத்தப்படுகிறது என்ற கருத்தை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
🔶உதாரணமாக :- பாங்கு என்ற சொல் என்ன மொழி என்றுகூட பெரும்பாலும் முஸ்லிம் மக்களுக்கு தெரியாது இருப்பினும் தொழுகைக்காக அதான் சொல்கிறது என்றால்! நம்மவர்கள் பாங்கு சொல்லப்படுகிறது என்று பேச்சு வழக்கில் கூறுவது நடை முறையில் உள்ளது. இதனை காரணமாக வைத்து பாங்கு என்ற சொல் (வார்த்தை) திருக்குர்ஆன் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளதா என்று கேட்கலாமா?
♦️தாய் தந்தை என்ற சொல் தமிழ் மொழி சொல்லாகும். உம்மி அபீ என்ற சொல் அரபி மொழி சொல்லாகும். உம்மா வாப்பா என்ற சொல் என்ன மொழி? என்ற கேள்விக்கு பதில் கிடையாது. வாப்பா என்ற சொல்லுக்கு தந்தை என்று எந்த அகராதி நூலில் வந்துள்ளது என்று கேட்டாள் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் அப்பா என்றால் தமிழ் மொழியில் தந்தைக்கு சொல்லப்படும் இருப்பினும் முஸ்லிம்கள் தந்தையின் தந்தைக்கு தாயின் தந்தைக்கு வயது முதிர்ந்தவர்களுக்கு அப்பா என்று கூறுகிறார்கள். இவ்வாறு கூறலாம் என்று எந்த அகராதி நூலில் வந்துள்ளது என்று கேட்டாள் யாருக்காவது பதில் சொல்ல முடியுமா? நடுநிலையாக சிந்தித்துப் பாருங்கள்.
♦️அதானுக்கு பாங்கு என்ற சொல்லை பயன் படுத்துவதை போல. தாய் தந்தைக்கு பேச்சு வழக்கில் உம்மா வாப்பா என்ற சொல்லை பயன் படுத்துவதை போல. தந்தையின் தந்தை, தாயின் தந்தை, முதியவர்களுக்கு அப்பா என்ற வார்த்தையை பயன் படுத்துவதை போல. நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஸ்தானங்களுக்கு தர்ஹா என்ற வார்த்தையை பேச்சு வழக்கில் அடையாளப் பெயராக முஸ்லிம்கள் பயன் படுத்தி வருகிறார்கள். இது போன்ற வார்த்தைகள் திருக்குர்ஆன் ஹதீஸ்களிலில் இருக்கிறதா என்று கேட்கலாமா? இவ்வாறு கேட்பவர்கள் மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? மேலும் தவ்ஹீத் ஜமாஅத், தாருல் தவ்ஹீத், ஸலபி, ஜமாத்தே இஸ்லாமிய்யா, தப்லீக் ஜமாஅத், பைஸல் ஜமாஅத், சில்லா, மர்கஸ், ஜும்மா ராத்திரி, திடல் தொழுகை, ஷிர்க் ஒழிப்பு மாநாடு, தெருமுனை பிரச்சாரம், இரத்த தானம் போன்ற பெயர்கள் இஸ்லாம் என்ற பெயரில் பல அமைப்புக்கள் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆக தர்ஹா என்ற வார்த்தை கந்தூரி என்ற வார்த்தை திருக்குர்ஆன் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளதா? என்று கேட்கும் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! மேற்கூறிய வார்த்தைகள் பெயர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளதா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
குறிப்பு :- நபிமார்கள் நல்லடியார்களின் கப்ருஷ்தானங்களுக்கு அடையாளப் பெயராக தர்ஹா என்ற வார்த்தையை இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பேச்சு வழக்கில் பயன் படுத்தி வருக்கிறார்கள். இதில் எவ்வித குற்றமும் இல்லை என்ற கருத்தை குர்ஆன் ஹதீஸ்களை ஒழுங்கு முறைப்படி படித்தவர்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்